Guru: வருகிறது குரு பெயர்ச்சி.. பணம் மற்றும் பதவி உயர்வு இந்த ராசிகளுக்குத்தான்!
- ஜோதிட கணக்கீடுகளின்படி, தேவர்களின் வாத்தியார் எனக்கூறப்படும் குரு பகவான் ஆண்டுக்கு ஒரு முறை தனது ராசியை மாற்றவுள்ளார்.
- ஜோதிட கணக்கீடுகளின்படி, தேவர்களின் வாத்தியார் எனக்கூறப்படும் குரு பகவான் ஆண்டுக்கு ஒரு முறை தனது ராசியை மாற்றவுள்ளார்.
(1 / 6)
வரும் மே1ஆம் தேதி, 2024அன்று குரு ரிஷப ராசியில் பெயர்கிறார். இதனால் சில ராசியினருக்கு அசுப பலன்களும் சில ராசியினருக்கு நற்பலன்களும் கிடைக்கின்றன. அதில் அதிர்ஷ்டம் பெறும் ராசிகள் குறித்து அறிவோம்.
(2 / 6)
கடகம்: இந்த ராசியினருக்கு குருவின் பெயர்ச்சியால் பல்துறைப் பணிகளில் வெற்றி கிட்டும். நண்பர்கள் மற்றும் வீட்டில் இருப்பவர்களுக்கிடையே இருந்த பிரச்னைகள் நீங்கி சமாதானம் உண்டாகும். நினைவுத்திறன் அதிகரிக்கும். படிப்பில் மாணவர்கள் கில்லியாக மாறுவர். நல்ல பணி வாய்ப்புகள் கிடைக்கலாம்.
(3 / 6)
சிம்மம்: இந்த ராசியினருக்கு பெரிய பதவிகள் தேடி வரும். வெகுநாட்களாக வீடு கட்ட நினைத்த சிம்ம ராசியினருக்கு ஏற்றம்மிகு காலகட்டமாகும். சைடுபிசினஸ் செய்வீர்கள். சம்பந்தக்கார வழியில் இருந்து சண்டை சச்சரவுகள் நீங்கும்.
(4 / 6)
தனுசு: இந்த ராசியினருக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். குழப்பம் நீங்கி தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். இக்காலத்தில் நீங்கள் மண்ணில் முதலீடுசெய்தால் எதிர்காலத்தில் சிறந்த பலன்களைப் பெறுவீர்கள். இத்தனை நாட்களாகப்பெற்ற கெட்ட பெயர் நீங்கும்.
(5 / 6)
கும்பம்: இந்த ராசியினருக்கு பேச்சில் இனிமை கூடும். இறைப்பணி செய்வீர்கள். இக்காலத்தில் நிறைய பணவரவு உண்டு. இல்லற வாழ்வில் மகிழ்ச்சி செழிக்கும். நீண்டநாட்களாக வாங்க நினைத்ததை வாங்குவீர்கள். உங்களின் பணம்பெற்று தராமல் இழுத்தடிப்பவர்கள் தருவார்கள்.
(6 / 6)
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
மற்ற கேலரிக்கள்