Sani Visha Yogam: கும்ப ராசியில் சனியால் உண்டான விஷ யோகம்.. மண்டையிடியை சந்திக்கப்போகும் 4 ராசிகள்.. பார்த்து மக்கா!
- Sani Visha Yogam: கும்ப ராசியில் சனியால் உண்டான விஷ யோகத்தால் வாழ்க்கையில் சிரமங்களைச் சந்திக்கப்போகும் 4 ராசிகள் குறித்துக் காண்போம்.
- Sani Visha Yogam: கும்ப ராசியில் சனியால் உண்டான விஷ யோகத்தால் வாழ்க்கையில் சிரமங்களைச் சந்திக்கப்போகும் 4 ராசிகள் குறித்துக் காண்போம்.
(1 / 7)
அந்த வகையில் சனி பகவான் ஜூன் 29ஆம் தேதி அன்று வக்கிர பெயர்ச்சி அடைந்தார். நவம்பர் மாதம் வரை இதே நிலையில் பயணம் செய்வார். சனி பகவானின் வக்கிரபயணம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு சிக்கலை கொடுப்பது உறுதி ஆகி உள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
(2 / 7)
விஷ யோகம் எப்படி உருவாகிறது?:
சனியும் சந்திரனும் ஒரே ராசியில் வரும்போது விஷ யோகம் உருவாகிறது. இந்த நேரத்தில், சனி தனது சொந்த ராசியான கும்பத்தில் அமர்ந்திருக்கிறார். சந்திரனும் ஜூலை 23, 2024 அன்று காலை 10 மணிக்குப் பிறகு கும்ப ராசிக்குள் குடிபெயர்ந்துள்ளார்.
(3 / 7)
கடக ராசி: கடக ராசியின் எட்டாம் வீட்டில் விஷ யோகம் உருவாகிறது. விஷயோகத்தால் கடக ராசியினர், வரப்போகும் ஆண்டில் உடல்நலப் பிரச்னைகளைச் சந்திக்க நேரிடும். தவறான செய்திகள் கிடைக்கும். மனம் அலைபாயும். எந்த வேலையும் செய்ய மனம் வராது. வரப்போகும் ஆண்டில் கவனக்குறைவாக இருக்காதீர்கள். வரப்போகும் ஆண்டில் சண்டை சச்சரவுகளில் இருந்து விலகி இருங்கள். பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிக்கவும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட வேண்டாம்.
(4 / 7)
கன்னி ராசி: உங்கள் ராசியின் ஆறாம் வீட்டில் சனி-சந்திரன் சேர்க்கை உருவாகும். வரப்போகும் ஆண்டில் எதிரிகள் உங்களுக்கு தீங்கு செய்ய முயற்சிக்கலாம். வீடாக இருந்தாலும் சரி, அலுவலகமாக இருந்தாலும் சரி, அந்நியரைப் போல நடந்து கொள்வீர்கள். விவாதம் செய்யும் சூழல் ஏற்படும். பயணம் சாத்தியம் ஆகும். ஆனால், பயணம் வேதனையாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்.
(5 / 7)
விருச்சிக ராசி: விருச்சிக ராசிக்காரர்கள் பணியிடத்தில் எந்தவிதமான அலட்சியத்தையும் தவிர்ப்பது நல்லது. விவாதங்களில் இருந்து விலகி இருக்க வேண்டும். சனி உங்கள் நான்காம் வீட்டில் இருந்து நோய்க் கடன் வீட்டை பார்க்கிறார். இதன் காரணமாக, இந்த காலகட்டத்தில் எதிரிகளால் கடும் தொல்லைகளைச் சந்திக்க நேரிடும். உங்கள் கோபத்தை கட்டுப்படுத்துங்கள்.
(6 / 7)
மீன ராசி: ஆகஸ்ட் மாதத்தில், சிம்மம், கடகம்,கன்னி, விருச்சிகம் உள்ளிட்ட நான்கு ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும். சதுர்கிரஹி யோகம் மீனத்தை வளமாக்கும்.
மீன ராசிக்காரர்கள் இந்த காலகட்டத்தில் பயணம் செய்யும் திட்டத்தை ஒத்திவையுங்கள். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். பணத்தை முதலீடு செய்யாதீர்கள். கடன் கொடுப்பதைத் தவிர்க்கவும்.
(7 / 7)
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
மற்ற கேலரிக்கள்