ஸ்ருதிகா-வுக்கு என்னாச்சி.. கதறி அழுவது ஏன்? பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன? வீடியோவை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்!
- ஹிந்தி பிக்பாஸ் வீட்டில் சமீபத்திய எபிசோடில் ஸ்ருதிகா கதறி அழும் காட்சியை பார்த்து பலரும் ஸ்ருதிகா ஏன் இப்படி அழுகிறார்? என கேள்விக்கேட்டு வருகின்றனர்.
- ஹிந்தி பிக்பாஸ் வீட்டில் சமீபத்திய எபிசோடில் ஸ்ருதிகா கதறி அழும் காட்சியை பார்த்து பலரும் ஸ்ருதிகா ஏன் இப்படி அழுகிறார்? என கேள்விக்கேட்டு வருகின்றனர்.
(1 / 6)
ஹிந்தியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் 18வது சீசனில் தமிழ்நாட்டைச் சேர்ந்த நடிகை ஸ்ருதிகா பங்கேற்றுள்ளார். தமிழ் மக்களிடம் இவர் மிகவும் பரிட்சையமான நிலையில், இந்தி பிக்பாஸில் பங்கேற்ற முதல் தமிழர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
(2 / 6)
இவர் நிகழ்ச்சியில் பங்கேற்ற புதிதில் அவரது நடவடிக்கைகளையும் பேச்சையும் பலரும் கிண்டல் செய்து வந்தனர். அத்துடன் இவர் மிகவும் போலியானவர். வீட்டில் உள்ளவர்களிடம் நடித்து வருகிறார் என்றனர்.
(3 / 6)
பின், அவர் தமிழர் எனவும், அவரது மொழி மற்றும் உச்சரிப்பு குறித்தும் கிண்டல் செய்து வந்தனர். ஆனால், நாட்கள் செல்ல செல்ல பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்கள் மத்தியில் மட்டுமல்லாமல், ஹிந்தி பிக்பாஸ் பார்வையாளர்கள் மத்தியிலும் அவர் நல்ல மரியாதையை பெற்றார்.
(4 / 6)
நடிகையான ஸ்ருதிகாவுக்கு சினிமா வாய்ப்புகள் பெரிதாக கைகொடுக்கவில்லை. இதனையடுத்து திருமணமாகி செட்டிலாகிவிட்ட அவர், குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் மீண்டும் பிரபலமானார்.
(5 / 6)
ஹிந்தி பிக்பாஸ் வீட்டில் அவரது சேட்டைகள், குறும்புத்தனங்கள் சல்மான் கான் மற்றும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்நிலையில், அவர் சமீபத்திய எபிசோடில் கதறி அழும் காட்சியை பார்த்து பலரும் ஸ்ருதிகா ஏன் இப்படி அழுகிறார்? என கேள்விக்கேட்டு வருகின்றனர்.
(6 / 6)
பிக் பாஸ் 18 துவங்கியதில் இருந்து, அந்த வீட்டிற்குள் ஸ்ருதிகாவின் நெருங்கிய தோழியாக இருப்பவர் நடிகை Chum Darang என்பவர் தானாம். இருவரும் நெருக்கமான தோழிகளாக வீட்டிற்குள் பழகி வந்த நிலையில், இருவருக்கும் இடையே திடீரென விரிசல் ஏற்பட்டுள்ளது. அப்போது ஏற்பட்ட பிரச்சனைகள் காரணம் மனமுடைந்து கதறி அழுதுள்ளார். மேலும், தான் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுகிறேன் என்றும் கூறியுள்ளார். ஸ்ருதிகா கதறி அழும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
மற்ற கேலரிக்கள்