‘அப்பா - அம்மா பிரிஞ்சதுக்கு அப்புறமா நான் அனுபவிச்ச வலி.. ஒரே வீட்ல பிரிஞ்சு இருக்குற கொடுமை’ - ஸ்ருதிஹாசன்!
அப்போதுதான் நிதி சுதந்திரம், ஆளுமை சார்ந்த சுதந்திரம் ஆகியவற்றின் மதிப்பை நான் உணர்ந்தேன். குறிப்பாக ஒரு மகளாக இருந்து, அம்மா திருமண உறவில் இருந்து வெளியேறியதைப் பார்த்தது, ஒரு பெண் சுதந்திரமாக இருப்பது ஏன் முக்கியம் என்பதற்கான முக்கியமான பாடத்தை இது எனக்குக் கற்பித்தது. - ஸ்ருதிஹாசன்!
(1 / 6)
நடிகர் கமல்ஹாசனுக்கும், சரிகாவுக்கும் கடந்த 1988-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இருப்பினும் இந்தத்தம்பதி கடந்த 2002 ம் ஆண்டு பிரிந்து செல்ல முடிவு செய்து, 2004 இல் விவாகரத்து பெற்றுக்கொண்டனர். இவர்களுக்கு ஸ்ருதிஹாசன் மற்றும் அக்ஷரா ஹாசன் என இரு மகள்கள் இருக்கின்றனர். ஷ்ருதிஹாசன் பிரபல நடிகையாக வலம் வருகிறார். அக்ஷரா ஹாசனும் திரைத்துறையில் பணியாற்றிக்கொண்டிருக்கிறார். இந்த நிலையில், அண்மையில் பிங்க் வில்லா இணையதளத்திற்கு ஸ்ருதிஹாசன் அளித்த பேட்டியில், தனது பெற்றோரின் விவாகரத்து குறித்து பேசி இருக்கிறார்.அழகான குடும்பத்தில் பிறந்தேன்
(2 / 6)
நிதி சுதந்திரமாக இருப்பது பற்றி பேசிய ஸ்ருதிஹாசன், "பாருங்கள், நான் மிகவும் அழகான குடும்பத்தில் பிறந்தேன். கலை, புத்திசாலித்தனமான பெற்றோர்கள், மற்றும் கடவுளின் அருளால், நிறைய வசதிகள் உள்ளன. ஆனால் அதன் மறுபக்கத்தையும் நான் பார்த்திருக்கிறேன்.என் பெற்றோர் பிரிந்தபோது, எல்லாமே மாறிவிட்டது.
(3 / 6)
அப்போதுதான் நிதி சுதந்திரம், ஆளுமை சார்ந்த சுதந்திரம் ஆகியவற்றின் மதிப்பை நான் உணர்ந்தேன். குறிப்பாக ஒரு மகளாக இருந்து, அம்மா திருமண உறவில் இருந்து வெளியேறியதைப் பார்த்தது, ஒரு பெண் சுதந்திரமாக இருப்பது ஏன் முக்கியம் என்பதற்கான முக்கியமான பாடத்தை இது எனக்குக் கற்பித்தது.
(4 / 6)
மேலும் பேசிய அவர், ‘இது வலிக்கிறது. குழந்தைகள் மட்டுமல்ல, பெற்றோர்களும் இந்த வலியை உணர்கிறார்கள். இது இன்று பல வீடுகளில் சாதாரண விஷயமாக இருக்கிறது. ஆனால், இன்றும் சமூகத்தின் பொருட்டு, பெற்றோர்கள் ஒன்றாக தங்கியிருக்கும் வீடுகள் நிலைமை உள்ளன; சில நேரங்களில் அந்த வீடுகளில் அதிக வலி உள்ளது; ஏனெனில் அது மறைவானது.
(5 / 6)
கமல் - சரிகா திருமணம் செய்து கொள்வதற்கு முன்னரே, 1985-ம் ஆண்டு பிறந்தவர் ஸ்ருதிஹாசன். திருமணத்திற்குப் பிறகு அக்ஷரா பிறந்தார். விவாகரத்துக்குப் பிறகு இரண்டு சகோதரிகளும் சரிகாவால் வளர்க்கப்பட்டனர்
(6 / 6)
ஸ்ருதிஹாசன் - வேலைஸ்ருதிஹாசன் கடைசியாக சலார்: பார்ட் 1 படத்தில் பிரபாஸுடன் நடித்தார். பிரசாந்த் நீல் இயக்கிய இப்படத்தில் பிருத்விராஜ் சுகுமாரனும் நடித்தார். 600 கோடிக்கு மேல் வசூலித்த இப்படம் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இவர் அடுத்ததாக ரஜினிகாந்துடன் கூலி படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படம் 2025 ஆம் ஆண்டு வெளியாகவுள்ளது.
மற்ற கேலரிக்கள்