அமெரிக்காவின் இஸ்கான் கோயில் மீது துப்பாக்கி சூடு : 20க்கு மேற்பட்ட குண்டுகள் பாய்ந்ததாக தகவல்.. இந்திய தூதரகம் கண்டனம்
அமெரிக்க மண்ணில் உள்ள இஸ்கான் கோவிலில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. கோவிலில் சுமார் 20 முதல் 30 தோட்டாக்கள் வரை சுடப்பட்டன. இந்த சம்பவத்தில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. இருப்பினும், இந்த தாக்குதலால் பக்தர்கள் பீதியடைந்துள்ளனர்.
(1 / 4)
அமெரிக்காவின் உட்டா மாகாணத்தில் உள்ள இஸ்கான் ஸ்ரீ ஸ்ரீ ராதாகிருஷ்ணா கோயில் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கோயிலின் மீது மர்ம நபர்கள் பலமுறை துப்பாக்கிச் சூடு நடத்தினர். பல தோட்டாக்கள் கோயில் சுவர்களைத் துளைத்தன. பல தோட்டாக்கள் கோயிலின் ஜன்னல்களை உடைத்தன. தங்கள் கோயில் வளாகத்தில் குறைந்தது 20 முதல் 30 தோட்டாக்கள் சுடப்பட்டதாக இஸ்கான் கூறி உள்ளது.
(2 / 4)
(3 / 4)
உதாவில் உள்ள இஸ்கான் கோயில் மீதான தாக்குதலை இந்திய துணைத் தூதரகம் கடுமையாகக் கண்டித்துள்ளது. அந்த அறிக்கையில், "உதாவின் ஸ்பானிஷ் ஃபோர்க்கில் உள்ள இஸ்கான் ஸ்ரீ ஸ்ரீ ராதா கிருஷ்ணா கோயிலில் சமீபத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தை நாங்கள் கடுமையாகக் கண்டிக்கிறோம். அனைத்து பக்தர்களுக்கும் சமூகத்திற்கும் துணைத் தூதரகம் தனது முழு ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறது. குற்றவாளிகளை விரைவாக நீதியின் முன் நிறுத்த உள்ளூர் அதிகாரிகளை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்" என்று கூறப்பட்டுள்ளது.
(4 / 4)
மற்ற கேலரிக்கள்