Shanthi Williams: ‘எனக்கு அவர பிடிக்கவே இல்ல.. அப்பாதான் வலுக்கட்டாயமா கட்டி வச்சு’ - சாந்தியின் கறுப்பு பக்கம்!
Shanthi Williams: “என்னை பிடித்து வலுக்கட்டாயமாக கல்யாணம் செய்து வைத்து விட்டார்கள்;கல்யாணமும் முடிந்து விட்டது. அப்பொழுது நெஞ்சத்தைக் கிள்ளாதே திரைப்படத்தில் நடித்திருந்தேன். அந்த திரைப்படம் வெளியான பிறகு, எனக்கு பல திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு வந்து கொண்டே இருந்தது.”
(1 / 5)
பிரபல சீரியல் நடிகையான சாந்தி தன்னுடைய வாழ்க்கையில் பட்ட கஷ்டங்களை இந்தியா கிளிட்ஸ் சேனலுக்கு கொடுத்த பேட்டியில் பகிர்ந்து இருக்கிறார். கல்யாண சம்மதம் வாங்கிய வில்லியம்ஸ் இது குறித்து அவர் பேசும் போது, “ என்னுடைய வாழ்க்கையில் எனக்கு பிடிக்காத வகையில் தான் திருமணம் நடந்தது. வில்லியம்ஸிற்கு நான் ஒரு படம்செய்து கொடுத்தேன். அந்த படத்தின் வாயிலாக, அவர் எங்களுடைய வீட்டிற்குள் நுழைந்தார். ஒரு கட்டத்தில், என்னுடைய அப்பாவிடம் நெருக்கமான அவர் என்னை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுவதாக அவரிடம் பேசி, சமாதானம் செய்து சம்மதம் வாங்கி விட்டார்.
(2 / 5)
எங்கள் குடும்பத்தை பொறுத்தவரை அப்பாவின் பேச்சு தான் எங்களுக்கு வேத வாக்கு. அவர் கிழித்த கோட்டை எங்களால் தாண்ட முடியாது. ஆனாலும் எனக்கு மனதுக்குள் அந்த கல்யாணத்தில் இஷ்டம் இல்லை. இதனையடுத்து நான் அப்பாவிடம் எனக்கு அவரை பிடிக்கவில்லை, தயவு செய்து இந்த கல்யாணம் வேண்டாம் என்று சொன்னேன். இவ்வளவு ஏன் கல்யாண நாள் நெருங்கிய சமயத்தில், அந்த கல்யாணத்தில் விருப்பமில்லாத காரணத்தால, ஓடி கூட சென்று பார்த்து விட்டேன்.வலுக்கட்டாயமாக கல்யாணம்ஆனால் என்னை பிடித்து வலுக்கட்டாயமாக கல்யாணம் செய்து வைத்து விட்டார்கள்;கல்யாணமும் முடிந்து விட்டது. அப்பொழுது நெஞ்சத்தைக் கிள்ளாதே திரைப்படத்தில் நடித்திருந்தேன். அந்த திரைப்படம் வெளியான பிறகு, எனக்கு பல திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு வந்து கொண்டே இருந்தது.
(3 / 5)
ஆனால் என்னுடைய கணவர் குடும்ப வாழ்க்கைக்குள் வந்த பிறகு, சினிமா வாழ்க்கை கூடாது என்று சினிமாவில் நடிப்பதற்கு தடை போட்டு விட்டார். நானும் அதற்கு சம்மதித்து விட்டேன். அவரைப் பொறுத்தவரை அவருக்கு அவரது வேலை மட்டும்தான் முக்கியம். என் மீது பெரிதாக பாசமெல்லாம் கிடையாது. என்னுடைய முதல் குழந்தை பிறக்கும் போது, அவர் என்னுடன் கூட இல்லை. அவருக்கு கோபம் வந்தால் வேறு யார் மீதும் காட்ட மாட்டார். என்னிடம்தான் காட்டுவார். என்னை அடித்து துன்புறுத்துவார்.
(4 / 5)
வெறுத்துப் போய்விட்டதுஒரு கட்டத்தில் எனக்கு வாழ்க்கையே வெறுத்துப் போய்விட்டது இதையடுத்து நான் விவாகரத்து கூட விண்ணப்பித்து பார்த்தேன். ஆனாலும், அதன் பின்னர் ஒன்றாக வாழத்தான் செய்தோம். வேறு யாராவது அந்த நிலைமையில் இருந்தால், நிச்சயமாக தற்கொலை செய்து கொண்டிருப்பார்கள்; இல்லை அவரை விட்டு சென்று இருப்பார்கள். ஒருமுறை அவருக்கு ட்ரெயினில் சென்று கொண்டிருக்கும் பொழுது மாரடைப்பு வந்துவிட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவர் அடுத்த 4 2 மணி நேரத்தில் இறந்து விடுவார் என்று என்னிடம் மருத்துவர் சொன்னார்கள்.
(5 / 5)
பணநெருக்கடி ஆனால் அவர் அதனை தொடர்ந்து உயிர் வாழ்ந்தார். அவர் அப்போது எனக்கென்று யாருமே இல்லையே எனக்காக நீ மட்டும் தான் இருக்கிறாய் என்று சொல்வார். காரணம் அவர் எடுத்த 10, 15 படங்களில் பெரும்பான்மையான படங்கள் தோல்வியை சந்தித்தன. அதனால் அவர் கடுமையான பண நெருக்கடியில் இருந்தார் யாருமே அவருக்கு உதவ முன் வரவில்லை. அவருடன் வாழ்ந்த அனைத்து நாட்களுமே எனக்கு வேதனையான நாட்கள்தான்” என்று பேசினார்.
மற்ற கேலரிக்கள்