ஷங்கரின் கேம் சேஞ்சர் படத்தின் கதை இதுவா? வைரலாகும் தகவல்! இன்னும் இத இவர் விடலையா?
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  ஷங்கரின் கேம் சேஞ்சர் படத்தின் கதை இதுவா? வைரலாகும் தகவல்! இன்னும் இத இவர் விடலையா?

ஷங்கரின் கேம் சேஞ்சர் படத்தின் கதை இதுவா? வைரலாகும் தகவல்! இன்னும் இத இவர் விடலையா?

Dec 30, 2024 03:08 PM IST Suguna Devi P
Dec 30, 2024 03:08 PM , IST

  • இயக்குனர் ஷங்கரின் அடுத்த படைப்பான கேம் சேஞ்சர் திரைப்படம் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் வெளியாக உள்ளது. இப்படத்தில் தெலுங்கு நடிகர் ராம் சரண் நடித்துள்ளார். இந்நிலையில் இந்த படத்தின் டீஸர் வெளியானதும் இதன் கதை குறித்து நெட்டிசன்கள் சில தகவல்களை வைரலாக்கி வருகின்றனர். 

இயக்குனர் ஷங்கரின் முதல் தெலுங்கு படமான இப்படத்திற்கு தெலுங்கு ரசிகர்களிடையே சற்று எதிர்பார்ப்பு உள்ளது. ஆனால் தமிழ் ரசிகர்கள் அவ்வளவாக இப்படத்தினை எதிர்பார்க்க வில்லை. இதற்கு காரணம் ஷங்கரின் முந்தைய படமான இந்தியன் 2 ஆகும்.  இந்தியன் 2 விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரியதாக வேலை செய்ய வில்லை. இதற்கு காரணம் ஷங்கரின் படங்களுக்கு வசனகர்த்தாவாக இருந்து வந்த எழுத்தாளர் சுஜாதா மறைந்தது எனக் கூறப்பட்டது. 

(1 / 5)

இந்த நிலையில் கேம் சேஞ்சர் திரைப்படம் தொடர்பான கதை ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. அதில் கதாநாயகன் ஒரு நேர்மையான ஐஏஎஸ் அதிகாரியாக இருக்கிறார். ஊழல் வாத அரசியலாவாதிகளை ஒழிக்க அவரே தேர்தலில் நின்று வெற்றி பெறுகிறார். இதுவே படத்தின் மையக்கரு எனக் கூறப்படுகிறது. இதில் எந்த அளவிற்கு உண்மை என்பது குறித்து தெரியவில்லை. 

(2 / 5)

இப்படத்தில் ராம் சரண் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். கதாநாயகியாக கியாரா அத்வானி நடித்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியானது. ஆனால் ரசிகர்களை அதிகமாக கவரவில்லை. இப்படத்திற்கு எஸ்.தமன் இசையமைத்துள்ளார். மேலும் ஷங்கர் ஊழல் வாதத்தை இன்னும் கைவிட வில்லை எனவும் நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். இந்தியா முன்னேற்றம் அடையாததற்கு ஊழல் மட்டுமே காரணம் என ஷங்கரின் முந்தைய படங்கள் தெரிவித்து வந்தன. ஒரே மாதிரியான கதையம்சத்தை இன்று வரை ஷங்கர் பிடித்துக் கொண்டே இருக்கிறார். 

(3 / 5)

இப்படத்திலும் வழக்கம் போல எஸ்.ஜே. சூர்யா வில்லனாக நடித்துள்ளார். சமீப காலமாக பல படங்களில் இவரே வில்லனாக நடித்து வருகிறார். சில படங்களில் எஸ்.ஜே. சூர்யா நடித்த படங்களில் கத்தி வசனங்கள் பேசி இருப்பார். அவை ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து இவர் வில்லனாக நடிக்கும் எல்லா படத்திலும் கத்துவது போல ஏதேனும் ஒரு காட்சி அமைந்து விடுகிறது. ஆனால் இது ரசிகர்களுக்கு சற்று அயர்வை வழங்குகிறது. 

(4 / 5)

ஷங்கரின் இந்த படத்தின் கதை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் எழுதியது. ஆனால் இந்த கதையை அவர் அவருக்கு ஏற்றார் போல மாத்தி எழுதி வைத்து இருக்கிறார் எனவும் கூறப்படுகிறது. அடுத்த மாதம் வெளியாகிய பின்னரே தெரியும் கேம் சேஞ்சர் படம் ஷங்கருக்கு நல்லப் பெயர் வாங்கி கொடுக்குமா என்று. 

(5 / 5)

மற்ற கேலரிக்கள்