Singer Shankar Mahadevan: "அகண்ட பாரதத்தின் சித்தாந்தத்தை பாதுகாக்கும் ஆர்எஸ்எஸ்" ஷங்கர் மகாதேவன் புகழாரம்
- மகாராஷ்ட்ரா மாநிலம் நாக்பூரில் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஆண்டு விழாவில் பிரபல பின்னணி பாடகர், இசையமைப்பாளர் சங்கர் மகாதேவன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்
- மகாராஷ்ட்ரா மாநிலம் நாக்பூரில் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஆண்டு விழாவில் பிரபல பின்னணி பாடகர், இசையமைப்பாளர் சங்கர் மகாதேவன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்
(2 / 8)
ஆர்எஸ்எஸ் அமைப்பின் 98வது நிறுவன நாளான இந்த நிகழ்வில் பங்கேற்ற பாடகர் ஷங்கர் மகாதேவன், ஆர்எஸ்எஸ் நிறுவனர் ஹெட்கேவாரின் நினைவிடத்தை பார்வையிட்டார்
(3 / 8)
இந்த நிகழ்வில் பேசிய ஷங்கர் மகாதேவன் பேசும்போது, "இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியங்களைப் பாதுகாப்பதற்காகவும், அகண்ட பாரதத்தின் சித்தாந்தத்தைப் பாதுகாப்பதற்காகவும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு செயல்பட்டு வருகிறது" என்று கூறினார்
(4 / 8)
அகண்ட பாரதம் என்ற நமது சித்தாந்தத்தை, நமது பாரம்பரியத்தை, நமது கலாச்சாரத்தைப் பாதுகாப்பதில் ஆர்எஸ்எஸ் அதிக பங்களிப்பை வெளிப்படுத்தியுள்ளது
(5 / 8)
நமது நாடு பாடலை போன்றதென்றால் பல்வேறு பிரச்னைகள், சவால்களை சந்திக்கும் இசைக்குறிப்புகளை போன்றவர்கள் ஆர்எஸ்எஸ் சேவர்கள் என்று புகழாரம் சூட்டினார்
(6 / 8)
கேரளா மாநிலம் பாலக்காடு நகரை பூர்வீகமாக கொண்ட மும்பையில் பிறந்த வளர்ந்தவராக உள்ளார். தமிழ், மலையாளம் உள்பட தென்னிந்திய மொழிகள், பாலிவுட் சினிமாக்களில் பாடகராகவும் இசையமைப்பாளராகவும் இருந்து வருகிறார்
(7 / 8)
தமிழில் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் இடம்பிடித்த என்ன சொல்ல போகிறாய் பாடலுக்காக சிறந்த பின்னணி பாடகர் தேசிய விருதை வென்றுள்ளார்
மற்ற கேலரிக்கள்