Sani Deviant Transit: கும்ப ராசியில் வக்ரப்பெயர்ச்சி.. கசக்கிப் பிழிந்தவர்களுக்கு பெட்டி பெட்டியாக தரும் சனி
- Sani Deviant Transit: கும்ப ராசியில் சனி பகவான் வக்ரப் பெயர்ச்சி அடைவதால் அதிர்ஷ்டம்பெறும் ராசிகள் குறித்துப் பார்ப்போம்.
- Sani Deviant Transit: கும்ப ராசியில் சனி பகவான் வக்ரப் பெயர்ச்சி அடைவதால் அதிர்ஷ்டம்பெறும் ராசிகள் குறித்துப் பார்ப்போம்.
(1 / 6)
அந்த வகையில் சனி பகவான் ஜூன் 30-ம் தேதி அன்று வக்கிர நிலை அடைகிறார். 139 நாட்கள் இதே நிலையில் சனி பகவான் பயணம் செய்கிறார். சனி பகவானின் இந்த வக்ர இடமாற்றத்தால் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் ஏற்பட்டாலும் குறிப்பிட்ட சில ராசிகள் சிறப்பான பலன்களை பெற போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.
(2 / 6)
கும்பத்தில் சனி வக்ரப் பெயர்ச்சி ஆகி, வரும் நவம்பர் 15ஆம் தேதி வரை சஞ்சரிப்பார். இந்த காலகட்டத்தில் சில ராசியினருக்கு போதுமான சம்பளம், வசதி ஆகியவை கிடைக்கும். கும்பராசியில், சனி வக்ரப் பெயர்ச்சி அடைவதால் உண்டாகும் நன்மைகள் என்ன என்பது குறித்துப் பார்ப்போம்.
(3 / 6)
மேஷம்: இந்த ராசியினருக்கு, சனி பகவானின் வக்ரப் பெயர்ச்சியினால் கூடுதலான நல்ல பலன் கிடைக்கப்போகிறது. சனி பகவான், மேஷ ராசியில் கூடுதலான வருவாய்க்கு இந்த காலகட்டத்தில் வாய்ப்பினை ஏற்படுத்தி தருகிறார். பணிபுரியும் காலத்தில் உண்டான பகைவர்களின் தொல்லை நீங்கும். இத்தனை நாட்களாக எந்த தொழில் செய்தாலும் ஒட்டவில்லை என வருத்தப்படும் மேஷ ராசியினர், சனியின் வக்ரப் பெயர்ச்சி காலத்தில் செய்யும் தொழிலால் நன்மைகளைப் பெறுவீர்கள். தம்பதிகள் இடையே இருந்த சண்டை சச்சரவுகள் நீங்கும். அலுவலக அரசியல் ஓய்ந்து பணியிடத்தில் உங்களது வேலைக்கு மரியாதை கிடைக்கும். தனியார் மற்றும் எம்.என்.சி நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு சம்பளம் கணிசமாக உயரும். நீண்ட நாட்களாக நல்ல ஒரு ஒப்பந்தம் கிடைக்காத தொழில் முனைவோர், இக்காலகட்டத்தில் நல்ல ஒப்பந்தங்களைப் பெறுவர்
(4 / 6)
மிதுனம்: சனி பகவானின் வக்ரப் பெயர்ச்சியால், வெகுநாட்களாக பிரச்னையைச் சந்தித்து வந்த மிதுன ராசியினர் சற்று ஆசுவாசம் அடைவார்கள். இந்த காலத்தில் வராத கடன்கள் வந்து சேரும். வெகுநாட்களாகப் பார்த்து தட்டிப்போன வரன்கள், இனிமேல் நல்ல செய்தியை சொல்லிவிடுவார்கள். திருமணம் கை கூடும். குழந்தையில்லாத மிதுனராசியினருக்கு கரு நிற்கும். இந்த காலகட்டத்தில் வெகுநாட்களாக இம்மியளவு கூட நகராத பணிகள், படிப்படியாக நடப்பதை கண்கூடாகப் பார்ப்பீர்கள். அரசு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்குப் பிரகாசமான வெற்றி கிடைக்கும். உங்கள் மன உறுதி வலுவாக இருக்கும். மேலும் உங்கள் மூத்த அதிகாரிகள் மற்றும் அதிகாரிகளின் ஆதரவுடன் நீங்கள் முன்னேற முடியும்.
(5 / 6)
மகரம்: சனி பகவானின் வக்ரப் பெயர்ச்சியால், மகர ராசியினருக்கு பரவாயில்லாத நன்மை கிடைக்கும். சனி பகவான், இந்த காலகட்டத்தில் நிதி மற்றும் உரையாடலில் சனியின் வக்ரப் பாதிப்பு இருக்கும். இதனால், மகர ராசியினருக்கு நிதிச்சுமை தீரும். கடன் இருக்காது. தொழில் செய்பவர்களுக்கு இனிமையான பேச்சின்மூலம் வியாபாரம் நல்ல முறையில் நடக்கும். பணியிடத்தில் வெகுநாட்களாக எந்தவொரு அங்கீகாரமும் இல்லாமல் இருப்பவர்கள், புரோமோசன் நிலைக்குச் செல்வீர்கள். இந்த காலகட்டத்தில் நீங்கள் புதிய திறன்களைக் கற்றுக்கொள்ளவும், உங்கள் தகவல் தொடர்பு திறன்களை மேம்படுத்தவும் விரும்புவீர்கள். இது தொழில் வளர்ச்சிக்கு மிகவும் உதவியாக இருக்கும்.
(6 / 6)
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ ஜோதிடர்கள்/ பஞ்சாங்கங்கள்/ சொற்பொழிவுகள்/ நம்பிக்கைகள்/ வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
மற்ற கேலரிக்கள்