Water Recipes: கோடையில் உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ளும் நீர் கலவை பானங்கள்
- கோடை வெப்பத்தில் உடலில் நீர் இழப்பு ஏற்படாமல் இருக்கவும், இனிப்பு சுவையுடன் புத்துணர்ச்சி பெற்று உடலை நீரேற்றத்துடன் வைத்துக்கொள்ள உதவும் சில நீர் கலவை பானங்களை பார்க்கலாம்.
- கோடை வெப்பத்தில் உடலில் நீர் இழப்பு ஏற்படாமல் இருக்கவும், இனிப்பு சுவையுடன் புத்துணர்ச்சி பெற்று உடலை நீரேற்றத்துடன் வைத்துக்கொள்ள உதவும் சில நீர் கலவை பானங்களை பார்க்கலாம்.
(1 / 8)
வெறுமனே நீரை குடித்தாலே உடலை நீரேற்றமாக வைத்துக்கொள்ளலாம். ஆனால் அவற்றில் சில ப்ளேவர்களை கலந்து இனிப்பு சுவையுடன் பருகினால் பல்வேறு உடல் ஆரோக்கிய நன்மைகளையும் பெறலாம். அந்த வகையில் கோடை காலத்தில் உடலை குளிர்ச்சி ஆக்குவதோடு மட்டுமல்லாமல், நாள் முழுவதும் உடலை நீரேற்றத்துடன் வைத்திருக்கும் சில நீர் கலவை பானங்களை பார்க்கலாம்(Pexels)
(2 / 8)
சிட்ரஸ் ஸ்ப்லாஷ்: ஒரு லெமன், ஒரு ஆரஞ்சு ஆகியவற்றி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி பிரஷ்ஷான புதினா இலைகள் கொஞ்சம் எடுத்துக்கொண்டு ஒரு மக் அளவு தண்ணீர் இவற்றை சேர்க்கவும். இதனை சுமார் ஒரு மணி நேரம் வரை ஊறவைத்து இந்த மூன்றின் ப்ளேவர் தண்ணீர் நன்கு இறங்கிய பிறகு பருகலாம்(Pexels)
(3 / 8)
வெள்ளரிக்காய் மின்ட் ரெப்ரெஷ்ஸர்: ஒரு வெள்ளரிக்காய எடுத்து சிறு துண்டுகளாக நறுக்கி, அரை கப் ப்ளூபெர்ரி, அரை கப் ராஸ்பெர்ரி, பிரஷ்ஷான பேஸில் தழைகள் ஆகியவற்றையும் ஒரு மக் தண்ணீரில் சேர்க்கவும். இரவு முழுக்க அதை பிரிட்ஜில் வைத்துவிட்டு பருகலாம்(Pexels)
(4 / 8)
தர்ப்பூசணி லைம் டுவிஸ்ட்: இரண்டு கப் தர்ப்பூசணியை க்யூபாக வெட்டிகொள்ள வேண்டும். ஒரு எலுமிச்சை ஸ்லைசாக கட் செய்து, கையளவு பிரஷ்ஷான பேசில் தழைகளை எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் இவற்றை ஒரு மக் தண்ணீரில் ஊற வைக்கவும். குறைந்தது இதை 2 மணி நேரமாவது பிரிட்ஜில் வைத்து பின்னர் குடிக்கலாம்(Pexels)
(5 / 8)
பைனாப்பிள் தேங்காய் கலவை: ஒரு கப் பைனாப்பிள் துண்டுகள், அரை கப் தேங்காய் துறுவல் ஆகியவற்றை ஒரு மக் தண்ணீரில் சேர்த்து ஊற வைக்கவும். குடிப்பதற்கு முன் இரண்டு மணி நேரமாவது குறைந்தது ஊற வைக்க வேண்டும்(Pexels)
(6 / 8)

(7 / 8)
இஞ்சி லெமன் கலவை: ஒரு எலுமிச்சையை சிறு துண்டுகளாக வெட்டி, 1 டேபிள் ஸ்பூன் பிரஷ்ஷாக நறுக்கப்பட்ட இஞ்சி ஆகியவற்றை தண்ணீருடன் கலக்கி காள்ள வேண்டும். இதன் ரியல் சுவையை அனுபவிக்க குறைந்தது ஒரு மணி நேரமாவது ஊற வைக்க வேண்டும்(Pexels)
(8 / 8)
ஆப்பிள் இலவங்கப்பட்டை டிலைட்: ஒரு ஆப்பிள் எடுத்து நறுக்கி அவற்றுடன் இரண்டு இலவங்கப்பட்டை குச்சிகளை சேர்த்து ஒரு மக் தண்ணீரில் சேர்த்து இரண்டு முதல் ஒரு நாள் இரவு வரை ஊற வைக்க வேண்டும்(Pexels)
மற்ற கேலரிக்கள்