Santhoshi Srikar:அடகு கடைக்குச் சென்ற நகைகள்.. பிசினஸில் பட்ட பாடு.. -சந்தோஷி உருக்கம்!
கிட்டத்தட்ட ஒரு மாதம் நானும், என் கணவரும் ஒருவரையொருவர் ஒரே வீட்டில் இருந்த போதும் பார்த்துக்கொள்ள வில்லை. பேசிக்கொள்ளவில்லை. காரணம் நாங்கள் அவ்வளவு மன அழுத்ததில் இருந்தோம். அதன் பின்னர் இன்னும் சில பேரிடம் கடன்களை வாங்கி அந்தக்கடையை ஆரம்பித்தோம்
(1 / 5)
நாடக நடிகை பூர்ணிமாவின் மகள்தான் சந்தோஷி. ரஜினிகாந்தின் பாபா, பாலா, மாறன், அன்பே அன்பே, உன்னை சரணடைந்தேன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தவர், சின்னத்திரையிலும் கால் பதித்தார்.
வாழ்க்கை, அரசி, அம்மு, ருத்ர வீணை உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்தவர், ஒரு கட்டத்தில் மேக்கப் கலைஞராக மாறி, தற்போது தொழிலதிபராக வலம் வருகிறார். இந்த நிலையில் அண்மையில் கலாட்டா சேனலுக்கு பேட்டியளித்த அவர் தான் தொழிலதிபராக மாறிய கதையை பகிர்ந்து இருக்கிறார்.
(2 / 5)
அதில் அவர் பேசும் போது, “என்னிடம் ஐடியா மட்டும்தான் இருந்தது. அந்த நேரத்தில் கையில் காசு கூட கிடையாது. ஆனாலும் பிசினசில் கால் வைத்தேன். இதற்கிடையே என்னுடைய கணவருக்கும்,அம்மாவிற்கும் இடையே சண்டை வேறு வந்து விட்டது.
(3 / 5)
கையில் பொருட்கள் இருந்த போதும், அதனை வைப்பதற்கு சரியான இடம் கிடைக்கவில்லை.
கடைசியாக ஒரு குடோன் கிடைத்தது. அதற்கு 25 ஆயிரம் வாடகை கேட்டார்கள். கணவர் வேண்டாம் என்று சொல்ல, நான் அங்குதான் கடை வைக்க வேண்டும் என்று கூறினேன்.
(4 / 5)
அதன்காரணமாக என்னுடைய கணவரின் வீட்டையும் லீஸூக்கு விட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.அதனை தொடர்ந்து நிறைய கடன் வாங்கி, நகைகளை அடமானம் வைத்து, கடைக்கான உள்கட்டமைப்பை வடிவமைப்பு செய்தோம். கடைசியாக இன்னும் 5 லட்சம் தேவைப்பட்டது.
மற்ற கேலரிக்கள்