பாதிக்கப்பட்ட மாணவி அளித்த வாக்குமூலம்.. பதற வைக்கும் சென்னை பல்கலைக்கழக விவகாரம்!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  பாதிக்கப்பட்ட மாணவி அளித்த வாக்குமூலம்.. பதற வைக்கும் சென்னை பல்கலைக்கழக விவகாரம்!

பாதிக்கப்பட்ட மாணவி அளித்த வாக்குமூலம்.. பதற வைக்கும் சென்னை பல்கலைக்கழக விவகாரம்!

Dec 26, 2024 10:33 AM IST Pandeeswari Gurusamy
Dec 26, 2024 10:33 AM , IST

  • சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் எஃப்.ஐ.ஆர். வெளியாகி உள்ளது.

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் எஃப்.ஐ.ஆர். வெளியாகி உள்ளது. இந்த நிலையில்  எஃப்.ஐ.ஆரில் மாணவி கூறிய புகார்கள் குறித்த தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் ஞான சேகரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

(1 / 7)

"நாங்கள் தனியாக இருந்ததை வீடியோ எடுத்து டீன், பேராசிரியரிடம் காண்பித்து டிசியை தர வைப்பேன் என மிரட்டினான்""செல்போனில் இருந்த எனது தந்தையின் எண்ணை எடுத்துக்கொண்டு அவருக்கு வீடியோ அனுப்புவேன் என மிரட்டினான்" 

(2 / 7)

"நாங்கள் தனியாக இருந்ததை வீடியோ எடுத்து டீன், பேராசிரியரிடம் காண்பித்து டிசியை தர வைப்பேன் என மிரட்டினான்""செல்போனில் இருந்த எனது தந்தையின் எண்ணை எடுத்துக்கொண்டு அவருக்கு வீடியோ அனுப்புவேன் என மிரட்டினான்" (PTI)

“நாங்கள் இருவரும் எவ்வளவு கெஞ்சியும் எங்களை விடுவதாக இல்லை - தொடர்ந்து மிரட்டினான்” "அடிபணியவில்லை என்றால் வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட்டு விடுவேன் எனக்கூறி வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்தான்" பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார்.

(3 / 7)

“நாங்கள் இருவரும் எவ்வளவு கெஞ்சியும் எங்களை விடுவதாக இல்லை - தொடர்ந்து மிரட்டினான்” "அடிபணியவில்லை என்றால் வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட்டு விடுவேன் எனக்கூறி வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்தான்" பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார்.(HT_PRINT)

இதற்கிடையில் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைதான ஞானசேகரனுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து நீதிமன்றம் உத்தரவு. இருப்பினும் கைதின் போது, தப்பியோட முயற்சித்தபோது கை, காலில் முறிவு ஏற்பட்டு உள்ளதால் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக ஞானசேகரன் அனுமதி செய்யப்பட்டுள்ளார்.

(4 / 7)

இதற்கிடையில் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைதான ஞானசேகரனுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து நீதிமன்றம் உத்தரவு. இருப்பினும் கைதின் போது, தப்பியோட முயற்சித்தபோது கை, காலில் முறிவு ஏற்பட்டு உள்ளதால் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக ஞானசேகரன் அனுமதி செய்யப்பட்டுள்ளார்.(Lakshmi)

சென்னை அண்ணா பல்கலை கழகத்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட திமுக பிரமுகர் ஞானசேகருக்கு கையில் மாவுக்கட்டு போடப்பட்டுள்ளது. கைது செய்யும்போது போலீசாரிடம் இருந்து தப்பி ஓடி விழுந்ததில் இடது கால் இடது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக போலீஸ் தகவல்

(5 / 7)

சென்னை அண்ணா பல்கலை கழகத்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட திமுக பிரமுகர் ஞானசேகருக்கு கையில் மாவுக்கட்டு போடப்பட்டுள்ளது. கைது செய்யும்போது போலீசாரிடம் இருந்து தப்பி ஓடி விழுந்ததில் இடது கால் இடது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக போலீஸ் தகவல்(Lakshmi)

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்தும், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டிருப்பதாக கூறி, அதிமுக சார்பில், இன்று அண்ணா பல்கலை கழக வாயில் முன்பாக காலை 10 மணிக்கு கண்டன ஆர்பாட்டம் நடைபெற உள்ளது. அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ், இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

(6 / 7)

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை தமிழ்நாட்டின் அனைத்து கட்சிகளும் கடுமையாக கண்டித்துள்ளன. எதிர்கட்சிகள் ஏற்கனவே கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், திமுக கூட்டணி கட்சிகளும் தங்கள் கண்டனத்தை தெரிவித்துள்ளன. குறிப்பாக விசிக தலைவர் திருமாவளவன், இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். 

(7 / 7)

மற்ற கேலரிக்கள்