காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் காலமானார்.. அவர் கடந்து வந்த பாதை!
- தமிழ்நாட்டின் மூத்த காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் காலமானார். ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மறைவால் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு மீண்டும் இடைத்தேர்தல் நடைபெறும் சூழல் உருவாகியுள்ளது.
- தமிழ்நாட்டின் மூத்த காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் காலமானார். ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மறைவால் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு மீண்டும் இடைத்தேர்தல் நடைபெறும் சூழல் உருவாகியுள்ளது.
(1 / 6)
ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்.எல்.ஏ.-வும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் (75) உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.
(2 / 6)
தந்தை பெரியாரின் சகோதரர் ஈ.வெ.கிருஷ்ணசாமியின் பேரன் தான், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன். சென்னை மாநில கல்லூரியில் படித்த காலத்தில் மாணவரணி காங்கிரஸ் செயலாளராக இருந்தார்.
(3 / 6)
1984ல் சத்தியமங்கலம் தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆனார். 2004 மக்களவை தேர்தலில் கோபி., தொகுதியில் வென்று, 2009 வரை ஒன்றிய இணையமைச்சராக பணியாற்றினார்.
(4 / 6)
2000-2002, 2014 -2016 ஆகிய ஆண்டுகளில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக பதவி வகித்தார். மகன் திருமகன் ஈவெரா மறைவைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வென்று 2023ல் மீண்டும் எம்.எல்.ஏ. ஆனார்
(5 / 6)
உடல்நலக் குறைவால் நவ.11ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.
மற்ற கேலரிக்கள்