தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Selvaragavan: ‘வெற்றிமாறன்தான் அவருக்கு ரொம்ப.. கீழறங்கிய செல்வா.. சடாரென்று பதிலடி கொடுத்த தனுஷ்!

Selvaragavan: ‘வெற்றிமாறன்தான் அவருக்கு ரொம்ப.. கீழறங்கிய செல்வா.. சடாரென்று பதிலடி கொடுத்த தனுஷ்!

Jul 08, 2024 07:15 AM IST Kalyani Pandiyan S
Jul 08, 2024 07:15 AM , IST

Selvaragavan: “எனக்கு கொஞ்சமாவது நடிக்கத் தெரியும். ஆனால் செல்வா என்னை நடிக்க வைக்கும் போது நான் வெறும் களிமண்தான். ஆகையால் நான் சொன்னதிலேயே பதில் இருக்கிறது." - நடிகர் தனுஷ்!

Selvaragavan: தனுஷின் 50 வது திரைப்படமான ராயன் படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னையில் நேற்று முன் தினம்  நடந்தது. இந்த நிகழ்ச்சியில் தனுஷூம், செல்வராகவனும் மேடை ஏறி ஒருவரை ஒருவர் கேள்வி எழுப்பிக்கொண்டனர். அப்போது செல்வா தரப்பில் இருந்து, உன்னை மிகச் சரியாக பயன்படுத்தியது நானா இல்லை வெற்றி மாறனா? என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு, தனுஷ் பதில் தருவதற்குள் முந்திக்கொண்ட செல்வராகவன், தனுஷை சரியாக பயன்படுத்தியது வெற்றி மாறன் தான்.. அவர்தான் அவருக்கு அதிகமாக தேசிய விருதுகளை வாங்கி கொடுத்து இருக்கிறார் என்றார்.  

(1 / 5)

நானா வெற்றிமாறனா? இந்த நிலையில் அதற்கு பதிலளித்த  தனுஷ், நான் வெற்றி மாறன் உடன் இணையும் போது, எனக்கு கொஞ்சமாவது நடிக்கத் தெரியும். ஆனால் செல்வா என்னை நடிக்க வைக்கும் போது நான் வெறும் களிமண்தான். ஆகையால் நான் சொன்னதிலேயே  பதில் இருக்கிறது." என்று பேசினார்.   

(2 / 5)

தம்பியை சரியாக பார்த்துக்கொள்ளுங்கள்: முன்னதாக பேசிய இயக்குனர் செல்வராகவன்," அப்போதிலிருந்தே ரஹ்மான் சாருக்கு நான் வெறித்தனமான ரசிகர். அவர் கடலில் குதி என்று சொன்னால் கூட நான் குதித்து விடுவேன். அவர் கடவுள் இந்த உலகத்திற்கு கொடுத்த குழந்தை. அவர் எப்படி ஒவ்வொரு நாளும் தன்னை புதுப்பித்துக் கொண்டே இருக்கிறார் என்பதைப் பார்த்து நான் பிரமித்து போயிருக்கிறேன். உங்களுக்கு சிறுவயதில் தம்பி இருந்தால், தயவு செய்து நன்றாக பார்த்துக்கொள்ளுங்கள். காரணம்,  பின்னாளில் அவர்கள் பெரிய ஆளாக வந்து உங்களை இம்சிக்க வாய்ப்பு இருக்கிறது.  

(3 / 5)

கரிசனம் காட்ட வில்லைராயன் படத்தின் படப்பிடிப்பிற்கு முதல் நாள் சென்ற பொழுது எல்லாரும் ஓடி கொண்டு இருந்தார்கள். என்னவென்று கேட்டால், இதுதான் ஷூட்டிங் என்று சொன்னார்கள். சரி தனுஷ், செல்வா நம் அண்ணன் தானே என்று தயவு காட்டுவார் என்று நினைத்தேன்.  

(4 / 5)

ஆனால் அண்ணனாவது, நொண்ணனாவது.. என்ற ரீதியில் தான் அவர் என்னை நடத்தினார். கொஞ்சம் கூட கரிசனம் காட்ட வில்லை. தனுஷிடம் அப்போதிலிருந்து இப்போது வரை அவரிடம் இருக்கும் அடக்கமும், எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்ற மனதும் மாறாமல் அப்படியே இருக்கிறது.ஒரு தம்பியாக அவரிடம் இப்போது நான் ஏதாவது கேட்க வேண்டுமென்றால், தயவு செய்து வீட்டிற்கு வருகிறேன் சாப்பாடு போடு என்று சொல்வேன். ஒரு டைரக்டராக அவர் நிறைய படங்களை செய்ய வேண்டும் என்பது என்னுடைய விருப்பம்" என்று பேசினார். 

(5 / 5)

மற்ற கேலரிக்கள்