அடிக்குமேல் அடி.. கதறிக்கொண்டிருந்த விருச்சிக ராசியினரே.. அர்த்தாஷ்டமச் சனிக்குப் பின் நிம்மதிப் பெருமூச்சு உறுதி
- அடிக்குமேல் அடி.. கதறிக்கொண்டிருந்த விருச்சிக ராசியினரே.. அர்த்தாஷ்டமச் சனிக்குப் பின் நிம்மதிப் பெருமூச்சு உறுதி
- அடிக்குமேல் அடி.. கதறிக்கொண்டிருந்த விருச்சிக ராசியினரே.. அர்த்தாஷ்டமச் சனிக்குப் பின் நிம்மதிப் பெருமூச்சு உறுதி
(1 / 6)
விருச்சிக ராசிக்கு 2025ல் வரும் சனிப்பெயர்ச்சி எவ்வாறு பலன்களைத் தரப்போகிறது என ஐபிசி பக்தி யூட்யூப் சேனலுக்கு, ஜோதிடர் வேல் சங்கர் அளித்த பேட்டியைக் காணலாம்.அதில், ‘’ விருச்சிக ராசிக்கான ராசி அதிபதி செவ்வாய், அவர் சக உதிரக்காரகன், போர்க்காரகன், அங்காரகன் என்றெல்லாம் சொல்லப்படுவதுண்டு. இந்த ராசியாதிபதி செவ்வாயே, ஆறாம் வீட்டுக்கு அதிபதியாக வருவதுண்டு. பொதுவாக விருச்சிக ராசியினர் போல், யோகக்காரர்கள் இல்லை. பிரச்னைக்குரியவர்களும் இல்லை என்று சொல்லலாம்''.
(2 / 6)
‘’இவர்களது பலவிதமான பிரச்னைகளுக்கு இவர்களே மூல காரணமாக அமைகிறார்கள். ராசியாதிபதியே ஆறாம் வீட்டுக்கு அதிபதியாக வருவதால் இவர்களுடைய நோய், வம்பு, வழக்கு எதிரிகள் ஆகட்டும், அனைத்திற்கும் இவர்களே காரணமாகிறார்கள். இதன் அர்த்தம் என்னவென்றால், இவர்களது எதிரியை இவர்களே உருவாக்குகிறார்கள்.பிறகு அந்த எதிரியை மென்மையாக வெற்றியடைகிறார்கள். இதை நாம் எத்தனை நாட்களுக்கு செய்வது. இதற்கு முன் நாம் ஏழரைச்சனியில் இருந்தபோது, இவர்களுக்கு ஏராளமான பிரச்னைகள் இருந்தது''.
(3 / 6)
‘’ஏழரைச்சனி முடிந்தவுடன் விருச்சிக ராசியினருக்கு அர்த்தாஷ்டமச்சனி வந்துவிட்டது. இவர்களுக்கு குருவின் பார்வையில் ஏதோ விசயங்கள் நகர்ந்துகொண்டு இருக்கின்றது. அவ்வளவு தான்.ஜான் ஏறினால் முழம் சறுக்கும் விருச்சிக ராசியினருக்கு. வெளியில் சொல்லமுடியாத பிரச்னை இருக்கும். வீடு, வாகனம், உறவு என ஏதோ பிரச்னை இருந்துகொண்டு தான் இருக்கும். கடகத்திற்கு அஷ்டமச்சனி விட்டதுபோலவே, விருச்சிகத்துக்கு அர்த்தாஷ்டமச்சனி பூரணமாக விடுகிறது.இதனை அவர்கள் பிளஸ் ஆக எடுத்துக்கொள்ளலாம். சனி 11ஆம் வீட்டைப் பார்ப்பதால் லாபம் ஏற்படும்.''
(6 / 6)
பொறுப்புத்துறப்பு:இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.(Pixabay)
மற்ற கேலரிக்கள்