"4 வருஷமா கோமாதான்.. எங்க போனாலும் அவளை கூட்டிக்கிட்டே போவேன்" - சத்யராஜ்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  "4 வருஷமா கோமாதான்.. எங்க போனாலும் அவளை கூட்டிக்கிட்டே போவேன்" - சத்யராஜ்

"4 வருஷமா கோமாதான்.. எங்க போனாலும் அவளை கூட்டிக்கிட்டே போவேன்" - சத்யராஜ்

Published Dec 06, 2024 11:38 AM IST Kalyani Pandiyan S
Published Dec 06, 2024 11:38 AM IST

துன்பமும் அதிகமாகத்தான் இருக்கும். ஆசை குறைந்து விட்டால், துன்பமும் குறைந்துவிடும். நாம் ஆசைப்படுவது நம்முடைய இஷ்டம் - சத்ய ராஜ்!

நடிகர் சத்யராஜின் மகள் அண்மையில் தன் அம்மா கிட்டத்தட்ட 4 வருடங்களாக கோமாவில் இருப்பதாக கூறிய நிலையில், அது குறித்து சத்யராஜ் கலாட்டா சேனலுக்கு அளித்த பேட்டியில் பேசி இருக்கிறார்.டேக் இட் ஈசி பாலிசிஇது குறித்து அவர் பேசும் போது, “ஒரு தராசில் ஆசை அதிகமாக இருந்தால், துன்பமும் அதிகமாகத்தான் இருக்கும். ஆசை குறைந்து விட்டால், துன்பமும் குறைந்துவிடும். நாம் ஆசைப்படுவது நம்முடைய இஷ்டம். அது நிறைவேறுமா? இல்லை நிறைவேறாதா என்பது நமது கையில் இல்லை.  

(1 / 6)

நடிகர் சத்யராஜின் மகள் அண்மையில் தன் அம்மா கிட்டத்தட்ட 4 வருடங்களாக கோமாவில் இருப்பதாக கூறிய நிலையில், அது குறித்து சத்யராஜ் கலாட்டா சேனலுக்கு அளித்த பேட்டியில் பேசி இருக்கிறார்.

டேக் இட் ஈசி பாலிசி

இது குறித்து அவர் பேசும் போது, “ஒரு தராசில் ஆசை அதிகமாக இருந்தால், துன்பமும் அதிகமாகத்தான் இருக்கும். ஆசை குறைந்து விட்டால், துன்பமும் குறைந்துவிடும். நாம் ஆசைப்படுவது நம்முடைய இஷ்டம். அது நிறைவேறுமா? இல்லை நிறைவேறாதா என்பது நமது கையில் இல்லை.

 

 

ஒரு படத்தில் நாம் நடிக்கிறோம். அந்த படம் ஓடுமா ஓடாதா என்பது நமக்கு தெரியாது; காரணம் என்னவென்றால், அதனுடன் வெளியாகும் திரைப்படங்கள் எப்படியான திரைப்படங்களாக இருக்கும் என்பது நமக்குத் தெரியாது.  

(2 / 6)

ஒரு படத்தில் நாம் நடிக்கிறோம். அந்த படம் ஓடுமா ஓடாதா என்பது நமக்கு தெரியாது; காரணம் என்னவென்றால், அதனுடன் வெளியாகும் திரைப்படங்கள் எப்படியான திரைப்படங்களாக இருக்கும் என்பது நமக்குத் தெரியாது. 

 

ஆகையால் எதுவும் நம் கையில் இல்லை. ஆகையால் டேக் இட் ஈசி என்ற பாலிசியில் நாம் நம்முடைய வாழ்க்கையை எடுத்துக் கொண்டு சென்று கொண்டே இருக்க வேண்டியதுதான்.  

(3 / 6)

ஆகையால் எதுவும் நம் கையில் இல்லை. ஆகையால் டேக் இட் ஈசி என்ற பாலிசியில் நாம் நம்முடைய வாழ்க்கையை எடுத்துக் கொண்டு சென்று கொண்டே இருக்க வேண்டியதுதான்.

 

 

 ஒரு நடிகனுக்கு என்ன விதமான கஷ்டம் இருந்தாலும் அவன் கேமரா முன்னால் சென்று நிற்கும் பொழுது அவன் தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரமாக மாறியாக வேண்டும்.  

(4 / 6)

 

ஒரு நடிகனுக்கு என்ன விதமான கஷ்டம் இருந்தாலும் அவன் கேமரா முன்னால் சென்று நிற்கும் பொழுது அவன் தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரமாக மாறியாக வேண்டும். 

 

இந்த விவகாரத்தில் என்னுடைய பர்சனல் பிரச்சினைகள் என்றுமே என்னுடைய நடிப்பில் குறுக்கீடு செய்தது கிடையாது.காரணம், அது எனக்கு இயல்பாகி விட்டது. எனது மனைவி கோமாவில் இருக்கிறார் என்பது முதலிலேயே என்னுடைய நெருக்கமானவர்கள் எல்லோருக்குமே தெரியும்.

(5 / 6)

இந்த விவகாரத்தில் என்னுடைய பர்சனல் பிரச்சினைகள் என்றுமே என்னுடைய நடிப்பில் குறுக்கீடு செய்தது கிடையாது.

காரணம், அது எனக்கு இயல்பாகி விட்டது. எனது மனைவி கோமாவில் இருக்கிறார் என்பது முதலிலேயே என்னுடைய நெருக்கமானவர்கள் எல்லோருக்குமே தெரியும்.

குறிப்பாக சிவகுமார், பிரபு உள்ளிட்டோர் குடும்பங்களுக்கு நன்றாகவே தெரியும்.நான்கரை வருடங்களாககிட்டத்தட்ட நான்கரை வருடங்களாக அவர் கோமாவில் தான் இருக்கிறார். ஆனால் எல்லாம் சேர்ந்ததுதானே வாழ்க்கை. நான் என்னுடைய குடும்பத்துடன் நிறைய நேரம் செலவழிக்கிறேன். இப்போது கூட என்னுடைய பேரன்களோடு நிறைய நேரத்தை நான் செலவழித்து சந்தோஷமாக இருக்கிறேன். எனக்கு நன்றாக டேபிள் டென்னிஸ் விளையாட தெரியும்.  அவர்களுக்கும் நன்றாக விளையாடத் தெரியும் என்பதால், முதலில் நாங்கள் நன்றாக விளையாடுவோம்.எங்களுக்குள் ஓவியப் போட்டியை நாங்கள் வைத்துக் கொள்வோம்.அப்போதெல்லாம் கிராமத்து படங்கள் தான் அதிகமாக எடுப்பார்கள். கிராமத்து படங்கள் என்றாலே அது பொள்ளாச்சிதான்; எனக்கு கோயம்புத்தூர்; எனது மனைவிக்கு உளுந்தூர்பேட்டை. ஆகையால் ஷூட்டிங்கிற்கு செல்லும் போதே என்னுடைய மனைவியுடன்தான் செல்வேன். சாமியே கும்பிட மாட்டேன்.நான் சாமியே கும்பிட மாட்டேன். அதனால் தான் அவருக்கு இப்படி நடக்கிறது என்றெல்லாம் கமெண்ட் இருப்பதாக கூறுகிறீர்கள்; சாமி கும்பிடுவர்கள் வீட்டில் கஷ்டம் இல்லையா என்ன? சாமி கும்பிடுபவர்களுக்கு காய்ச்சல் வந்ததில்லையா? உடல் நலம் சரியில்லாமல் அவதிப்பட்டதில்லையா. அவர்கள் வீட்டில் யாருக்கும் வாதம் வந்ததில்லையா? அவர்கள் வீட்டில் யாரும் தற்கொலை செய்து கொள்வது இல்லையா.. குடும்பத்தோடு கோயிலுக்கு செல்லும் வாகனங்கள் கவிழ்ந்து விழுந்தது இல்லையா..?" என்றார். 

(6 / 6)

குறிப்பாக சிவகுமார், பிரபு உள்ளிட்டோர் குடும்பங்களுக்கு நன்றாகவே தெரியும்.

நான்கரை வருடங்களாக

கிட்டத்தட்ட நான்கரை வருடங்களாக அவர் கோமாவில் தான் இருக்கிறார். ஆனால் எல்லாம் சேர்ந்ததுதானே வாழ்க்கை. நான் என்னுடைய குடும்பத்துடன் நிறைய நேரம் செலவழிக்கிறேன். இப்போது கூட என்னுடைய பேரன்களோடு நிறைய நேரத்தை நான் செலவழித்து சந்தோஷமாக இருக்கிறேன். எனக்கு நன்றாக டேபிள் டென்னிஸ் விளையாட தெரியும். 

 

அவர்களுக்கும் நன்றாக விளையாடத் தெரியும் என்பதால், முதலில் நாங்கள் நன்றாக விளையாடுவோம்.எங்களுக்குள் ஓவியப் போட்டியை நாங்கள் வைத்துக் கொள்வோம்.

அப்போதெல்லாம் கிராமத்து படங்கள் தான் அதிகமாக எடுப்பார்கள். கிராமத்து படங்கள் என்றாலே அது பொள்ளாச்சிதான்; எனக்கு கோயம்புத்தூர்; எனது மனைவிக்கு உளுந்தூர்பேட்டை. ஆகையால் ஷூட்டிங்கிற்கு செல்லும் போதே என்னுடைய மனைவியுடன்தான் செல்வேன்.

 

சாமியே கும்பிட மாட்டேன்.

நான் சாமியே கும்பிட மாட்டேன். அதனால் தான் அவருக்கு இப்படி நடக்கிறது என்றெல்லாம் கமெண்ட் இருப்பதாக கூறுகிறீர்கள்; சாமி கும்பிடுவர்கள் வீட்டில் கஷ்டம் இல்லையா என்ன? சாமி கும்பிடுபவர்களுக்கு காய்ச்சல் வந்ததில்லையா? உடல் நலம் சரியில்லாமல் அவதிப்பட்டதில்லையா. அவர்கள் வீட்டில் யாருக்கும் வாதம் வந்ததில்லையா? அவர்கள் வீட்டில் யாரும் தற்கொலை செய்து கொள்வது இல்லையா.. குடும்பத்தோடு கோயிலுக்கு செல்லும் வாகனங்கள் கவிழ்ந்து விழுந்தது இல்லையா..?" என்றார்.

 

மற்ற கேலரிக்கள்