Sasikumar: ‘படம் தோத்து போச்சுன்னா ஒத்துக்கணும்.. ஓடாத படத்துக்கு சக்சஸ் மீட்டா?’ - சசிகுமார்
Sasikumar: “எப்போதுமே சக்ஸஸ் மீட் வைத்தால், அந்தப்படம் தோல்விப்படம் என்றும், ஓடாத படத்திற்குதான் சக்ஸஸ் மீட் வைப்பார்கள் என்றும் ஒரு பார்வை இருக்கிறது.” - சசிகுமார்!
(2 / 6)
Sasikumar: நடிகர்கள் சசிக்குமார், உன்னி முகுந்தன், மைம் கோபி, ஆர்.வி. உதயக்குமார் என பெரிய நடிகர் பட்டாளே கதாபாத்திரங்களாக களம் இறங்கி நடித்த திரைப்படம் கருடன். விடுதலை படத்தில் கதையின் அறிமுகமான நகைச்சுவை நடிகர் சூரி, கருடன் திரைப்படத்திலும் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இப்படம் நேற்று ( மே 31) திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்தப்படத்திற்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது.
(3 / 6)
தோல்வி பயம்
அந்த நிகழ்ச்சியில் பேசிய சசிகுமார், “தயவு செய்து சக்சஸ் மீட் என்று போடாதீர்கள். நன்றி செலுத்தும் மீட்டிங் என்று போடுங்கள் என்று சொன்னேன். காரணம் என்னவென்றால், எப்போதுமே சக்ஸஸ் மீட் வைத்தால், அந்தப்படம் தோல்விப்படம் என்றும், ஓடாத படத்திற்குதான் சக்ஸஸ் மீட் வைப்பார்கள் என்றும் ஒரு பார்வை இருக்கிறது. காரணம், தோல்வி என்றாலே எல்லோருக்கும் ஒரு பயம் இருக்கும். யாரும் தோல்வியை ஒத்துக்கொள்ள மாட்டார்கள்.
(4 / 6)
நாம் முதலில் தோல்வியை ஒத்துக்கொள்ள வேண்டும். நாம் தோல்வியை ஒத்துக்கொண்டால்தான், அடுத்தப்படத்தில் நம்மால் ஜெயிக்க முடியும். தோல்விக்கு ஒரு காரணம் சொல்வார்கள். ஆனால் வெற்றிக்கு பல காரணங்கள் சொல்வார்கள். கருடன் படத்திற்கும் அது நடந்தது. ஆனால், இந்தப்படத்தின் வெற்றிக்கு ஒரே ஒருவர்தான் காரணம் என்பது நன்றாக தெரிந்தது.
(5 / 6)
தயாரிப்பாளர்தான் வெற்றிக்கு காரணம்
அவர் படத்தின் தயாரிப்பாளர்தான். காரணம், முதலில் இருந்தே அவர் இந்தப்படத்தின் மீது அபார நம்பிக்கை வைத்திருந்தார். இந்தப்படம் முன்னதாக ஓடிடிக்கு விற்க முடியாத சூழ்நிலை இருந்தது. அந்த சமயங்களில் குமார் மிகவும் சிரமப்பட்டார். நல்லபடம் அமைந்தால், நிச்சயமாக திரையரங்கில் ரசிகர்கள் வந்து பார்ப்பார்கள் என்பதற்கு இந்தப்படம் ஒரு சான்று.
(6 / 6)
அவருக்கு என்னுடைய நன்றி. சூரிக்காத்தான் நான் இந்தப்படத்தில் நடிக்க வந்தேன். நான் ஒரு நல்லது செய்ய வந்தேன். ஆனால் எனக்கு அது நல்லதாக மாறிவிட்டது. சூரியை இனி பரோட்டா சூரி என்று யாரும் அழைக்கமாட்டார்கள். அதையெல்லாம் அவர் அழித்து விட்டார். அவர் என்றுமே கதையின் நாயகனாகத்தான் இருப்பார். கதாநாயகனாக மாறும் போதுதான் கஷ்டம்.
சூரி ஜெயித்தது எல்லோரும் ஜெயித்தது போல.. முதல் நாள் அவர் எல்லா திரையரங்கிற்கும் சென்று மக்களின் ரெஸ்பான்ஸை பார்ப்பதற்காக என்னை அழைத்தார். ஆனால் நான் செல்லவில்லை. இது உன்னுடைய வெற்றி.. நீதான் கொண்டாட வேண்டும் என்று கூறி செல்ல வைத்தேன்.” என்று பேசினார்.
மற்ற கேலரிக்கள்