Sani vakra Luck: வழி விடுகிறார் சனி.. ஓய்வு எடுத்து தப்பிக்க ஒரே வாய்ப்பு.. கடைசி வாய்ப்பை பெற போகும் ராசி இதுதான்!
Sani vakra Luck: கும்ப ராசிக்கானா சனி வக்ர பெயர்ச்சி பலன்களை இங்கே பார்க்கலாம்.
(1 / 6)
கும்ப ராசிக்காரர்களுக்கான சனி வக்ர பெயர்ச்சி பலன்களை ஜோதிடர் சுபாஷ் பால கிருஷ்ணன் பேசியிருக்கிறார். அந்த தகவல்களை இங்கே பார்க்கலாம்
(2 / 6)
சனி பகவான் என்ன செய்யப்போகிறார்?இது குறித்து அவர் பேசும் போது, "கும்ப ராசிக்காரர்கள் ஆகிய நீங்கள், மிகவும் சகிப்புத்தன்மை உடையவர்கள். யார் உங்களை துன்புறுத்தினாலும், அவர்களை நீங்கள் மன்னித்து விடுவீர்கள்.அதேநேரம், பிறர் செய்யும் குறைகள் உங்களது கண்ணிற்கு நன்றாகத் தெரியும். இப்படிப்பட்ட குணாதிசியம் கொண்ட உங்களுக்கு, ஜூன் 12ஆம் தேதி முதல் நவம்பர் 4 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் நடக்கும் சனி வக்ர பெயர்ச்சி என்ன மாதிரியான பலன்களை கொடுக்கும் என்பதை பார்க்கலாம்.
(3 / 6)
ஜென்ம சனியில் சனி வக்ர பெயர்ச்சிஏற்கனவே கும்ப ராசிக்காரர்களுக்கு ஜென்ம சனி நடந்து கொண்டிருக்கிறது இதில் கடுமையாக கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் அவர்களுக்கு, இந்த சனி வக்ர பெயர்ச்சியானது ஒரு விதமான ரிலாக்ஸை தரும். தற்போது ஏழரை சனியில் கஷ்டப்பட்டு கொண்டிருக்கும் கும்ப ராசிக்காரர்களுக்கு, மனம் முழுக்க பயம் தலைவிரித்தாடுகிறது. குழப்பம் போட்டு படுத்தி எடுக்கிறது. அடுத்தது என்ன நடக்குமோ என்ற ஐய்யம் மனதை போட்டு புரட்டி எடுக்கிறது.
(4 / 6)
எப்போதுமே நீங்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். கடந்த காலத்தை நடந்ததை நினைத்து வருந்துவதும், நிகழ்காலத்தை நினைத்து பயப்படுவதும் நமக்கு எந்தவித பயனையும் கொடுக்கப் போவதில்லை. நம் கையில் இருப்பது தற்போது இருக்கும் இந்த நொடிதான்.இந்த நொடியை நாம் எவ்வாறு பயன்படுத்துகிறோமோ அப்படித்தான் நமக்கு வரும் எதிர்காலமானது அமையும். இதை கும்ப ராசிக்காரர்கள் மிக மிக நன்றாக மனதில் ஏற்றிக்கொள்ள வேண்டும்.
(5 / 6)
ஏழரை சனி வரும் பொழுது, சனிபகவான் மனதை முழுவதுமாக தன்னுடைய கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்வார். ஆகையால் மனத்தடுமாற்றம் இருப்பது இயல்பான ஒன்று.பரிகாரம் என்ன? இதற்கு கூடவே பணம் சம்பந்தமான பிரச்சினையும் உங்களுக்கு இருக்கும். பண பிரச்சினையை பொருத்தவரை, அது கொஞ்சம் கொஞ்சமாக உங்களது வாழ்க்கையை அழிக்கும். இது ஒரு பக்கம் என்றால், வீட்டில் நடக்கும் பிரச்சினைகள் இன்னொரு பக்கம் உங்களது மனதை வாட்டும். இந்த நிலையில், தற்போது வரக்கூடிய சனி வக்ர பெயர்ச்சி எப்படியான பலன்களை கொடுக்கும் என்பதை பார்க்கலாம்.
(6 / 6)
இந்த சனி வக்ர பெயர்ச்சியின் பொழுது, நீங்கள் நேரடியான சனி பகவானின் தாக்குதலில் இருந்து தப்ப போகிறீர்கள். இந்த காலக்கட்டத்தில் நல்ல சிந்தனைகள், நல்ல நண்பர்கள், நல்ல செயல்கள் உள்ளிட்டவை நடப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன. உங்களது ராசியிலேயே சனி பகவான் வக்ரகதி அடைவதால், தேவையற்ற எண்ணங்கள் விலகி, படைப்பு சார்ந்த சிந்தனைகள் அதிகமாக வருவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. அதேபோல கணவன் மனைவி இடையே நடந்த கருத்து முரண்பாடுகள் விலகி, அவர்கள் இணைவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. ஆகையால் இந்த காலகட்டத்தில் எல்லாமே உங்களது கை வந்து சேர்வதற்கான அறிகுறிகள் நன்றாகவே தெரிகிறது.இதனை நீங்கள் பயன்படுத்திக் கொள்வதும் கொள்ளாததும் உங்கள் கையிலே இருக்கிறது. நீங்கள் இதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றால் கல்வி தேர்ந்து இருந்து, வசதி இல்லாத காரணத்தால் அதை சரி வர பெற முடியாத குழந்தைகளுக்கு, நீங்கள் முன்வந்து உதவ வேண்டும். கைவிடப்பட்ட முதியோர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை நீங்கள் செய்து வர வேண்டும். பசு மாட்டிற்கு அகத்திக் கீரையை கொடுக்கலாம். இதன் மூலம் நீங்கள் சனி வக்ர பெயர்ச்சி பலன்களை பெற முடியும்" என்று பேசினார்
மற்ற கேலரிக்கள்