Sani Vakra Peyarchi: சமசப்தமாக பார்க்கும் சனிபகவான்.. வண்டியில் ஏறி வரும் மெகா ஜாக்பாட்! - சிம்ம வக்ர சனி பலன்கள்!
Sani vakra peyarchi: சமசப்தமாக இருக்கும் சனி பகவான் ராஜயோகத்தை நிச்சயம் தருவார். அரசியல் துறையில் இருக்கும் சிம்ம ராசிக்காரர்கள் மிகப்பெரிய உயரத்தை அடைவார்கள். -சிம்ம வக்ர சனி பலன்கள்!
(1 / 5)
Sani Vakra Peyarchi: சமசப்தமாக பார்க்கும் சனிபகவான்.. வண்டியில் ஏறி வரும் மெகா ஜாக்பாட்! - சிம்ம வக்ர சனி பலன்கள்!
(2 / 5)
சிம்மராசிக்காரர்களை பொருத்தவரை, அவரது ராசியில் சனிபகவான் வக்ர நிலை அடைந்திருக்கிறார். ஆகையால், அவர்களுக்கு ஜாக்பாட் யோகம் அடிக்கும் என்று ஜோதிடர் சுபாஷ் பாலகிருஷ்ணன் தன்னுடைய யூடியூப் சேனலில் பேசி இருக்கிறார்.
(3 / 5)
இது குறித்து அவர் பேசும் போது, “வாழ்க்கையில் எவ்வளவு சோதனைகள் வந்தாலும், மீண்டும் எழும் குணம் கொண்டவர்கள் சிம்ம ராசிக்காரர்கள்; சிம்ம ராசி அன்பர்களுக்கு, சனி பகவான் ஜூன் 12 முதல் நவம்பர் 4ம் தேதி வரை வக்ர நிலையில் பயணிக்கிறார். அவர் சமசப்தமாக வக்ர சனியாக, சிம்மத்தை பார்க்கிறார். இது என்ன மாதிரியான பலன்களை தரும் என்பதை பார்க்கலாம்.
(4 / 5)
ஜாக்பாட் யோகம் உறுதி;
இப்போது பெரும்பாலான சிம்ம ராசிக்காரர்களுக்கு, குடும்பத்தில் தகராறு நடந்து கொண்டிருக்கிறது. போதுமான வருமானம் தங்கவில்லை. இரவில் தூக்கமில்லாமல் தவித்துக்கொண்டிருக்கிறீர்கள். ஆனாலும், உள்ளுக்குள் ஏதோ ஒரு நம்பிக்கையை வைத்துக்கொண்டு வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருக்கிறீர்கள்.
சமசப்தமாக இருக்கும் சனி பகவான் ராஜயோகத்தை நிச்சயம் தருவார். அரசியல் துறையில் இருக்கும் சிம்ம ராசிக்காரர்கள் மிகப்பெரிய உயரத்தை அடைவார்கள். அதே போல மருத்துவத்துறையில் இருக்கும் மருத்துவர்களும், பெரிய இடத்தை நோக்கி நகர்வர். விளையாட்டுத்துறையில் இருக்கும் நபர்களும் அடுத்தக்கட்டத்திற்கு செல்வர். அரசு வேலை பார்ப்பவர்களுக்கு நினைத்த இடத்தில் பணிமாற்றம் கிடைக்கும்.
(maalaimalar )
(5 / 5)
வருமானத்தை தண்ணீர் போல செலவழிக்கக்கூடாது. எல்லோரையும் நம்பி விடக்கூடாது.
சிம்ம ராசிக்கு இந்த வக்ர பெயர்ச்சிதான் ஜாக்பாட் யோகம் மூலமாக நிச்சயம் யோகம் கிடைக்கும். ஆனால், இந்த காலத்தில் நீங்கள் 3 விஷயங்களை கைகொள்ள வேண்டும். முதலில் விவேகமாக இருக்க வேண்டும். இரண்டாவது எல்லோரையும் நம்பி விடக்கூடாது. வருமானத்தை தண்ணீர் போல செலவழிக்கக்கூடாது. இந்தக்காலத்தில் நீங்கள் மிகவும் பொறுமையாக இருக்க வேண்டும்”
இந்த மூன்று விஷயங்களை கைகொள்ளும் போது, உங்கள் எதிர்காலம் நல்ல நிலைமைக்கு வரும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த திருமணம் உள்ளிட்ட சுபகாரியங்கள் நடக்கும். காரைக்கால் அருகில் இருக்கும் ஸ்ரீ தர்பாரண்யேஸ்வர ஸ்வாமி கோயிலுக்கு சென்று வழி பட வேண்டும். என்று பேசினார்.
மற்ற கேலரிக்கள்