Ashish Vidyarthi Wedding: கில்லி அப்பா ஆசிஷ் வித்யார்த்தியின் திருமண புகைப்படங்கள்
- Ashish Vidyarthi Wedding: தனது அற்புதமான நடிப்பால் இந்திய மக்களைக் கவர்ந்த பழம்பெரும் பன்மொழி நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி, ஃபேஷன் துறையின் தொழிலதிபர் ரூபாலி பருவாவை திருமணம் செய்து அவரது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
- Ashish Vidyarthi Wedding: தனது அற்புதமான நடிப்பால் இந்திய மக்களைக் கவர்ந்த பழம்பெரும் பன்மொழி நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி, ஃபேஷன் துறையின் தொழிலதிபர் ரூபாலி பருவாவை திருமணம் செய்து அவரது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
(1 / 6)
தனது 60ஆவது வயதில், இந்தியாவின் பிரபல வில்லன் ஆஷிஷ் வித்யார்த்தி கொல்கத்தா கிளப்பில் ஃபேஷன் துறை தொழிலதிபர் ரூபாலி பருவாவுடன் பதிவு திருமணம் செய்து கொண்டார்.
(2 / 6)
இந்த திருமணத்தில் தம்பதிகளின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். இவர்களது திருமண புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
(3 / 6)
தொழிலதிபரான ரூபாலி அஸ்ஸாமின் குவாஹாட்டியைச் சேர்ந்தவர் . தற்போது மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் விலை உயர்ந்த பேஷன் கடை நடத்தி வருகிறார்.
(4 / 6)
ஆஷிஷ் வித்யார்த்தி கன்னடம், இந்தி, தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாளம் உட்பட 11 மொழிகளில் சுமார் 300 திரைப்படங்களில் நடித்துள்ளார்.
(5 / 6)
, "எனது வாழ்க்கையின் இந்த கட்டத்தில், ரூபாலியை திருமணம் செய்வது ஒரு அசாதாரண உணர்வு. ரூபாலியின் சந்திப்பு எப்படி நடந்தது என்பதை நான் பகிர்ந்து கொள்கிறேன். நாங்கள் ஒருவரையொருவர் சிறிது காலமாக அறிந்திருக்கிறோம். இந்த உறவை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்து செல்லும் நோக்கில் இந்த முடிவை எடுத்துள்ளதாக ஆஷிஷ் வித்யார்த்தி தெரிவித்துள்ளார்.
(6 / 6)
முன்னதாக தேசிய விருது பெற்ற நடிகர், நடிகை சகுந்தலா பருவாவின் மகள் ராஜோஷி பருவாவை ஆஷிஷ் வித்யார்த்தி முதலாவதாக திருமணம் செய்து கொண்டார். அவருக்கு அர்த் வித்யார்த்தி என்ற மகன் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற கேலரிக்கள்