ஒன்னரை வயது குழந்தைக்கு அம்மா..சினிமாவுக்கு குட்பை! மீண்டும் தாயாகிறார் சிம்பு பட நடிகை
- கடந்த ஆண்டு ஆண் குழந்தைக்கு தாயான சிம்பு பட நடிகையான சனா கான், தற்போது மீண்டும் கர்ப்பமாகியுள்ளார். தான் இரண்டாவது முறையாக தாயாக போவதை அறிவித்துள்ளார்.
- கடந்த ஆண்டு ஆண் குழந்தைக்கு தாயான சிம்பு பட நடிகையான சனா கான், தற்போது மீண்டும் கர்ப்பமாகியுள்ளார். தான் இரண்டாவது முறையாக தாயாக போவதை அறிவித்துள்ளார்.
(1 / 10)
சனா கான் மற்றும் அனஸ் சையத் ஆகியோர் விடியோ மூலம் மூன்று பேராக இருந்த தங்களது குடும்பம் நான்குபேராக மாற இருப்பதாக அறிவித்துள்ளனர். அவர்கள் தங்களது இன்ஸ்டாவில் பகிர்ந்த பதிவில், "அல்லாஹ்வுக்கு மட்டுமே இத்தகைய பரிசுகளை வழங்க அதிகாரம் உள்ளது. எங்கள் குடும்பம் எண்ணிக்கையில் மட்டுமல்ல, தரத்திலும் உயர எங்களை ஆசீர்வதியுங்கள். அல்லாஹ் நம்மை ஆசீர்வதித்து, நமது பாதையை செம்மைப்படுத்துவானாக" என குறிப்பிட்டுள்ளனர்
(2 / 10)
கடந்த ஆண்டு ஆண் குழந்தைக்கு தாயான சிம்பு பட நடிகையான சனா கான், தற்போது மீண்டும் கர்ப்பமாகியுள்ளார். தான் இரண்டாவது முறையாக தாயாக போவதை அறிவித்துள்ளார்.
(3 / 10)
சனா கான் மீண்டும் தாயாகப் போகிறார். ஒரு காலத்தில் குட்டையான ஆடைகள் அணிந்து சினிமா மற்றும் டிவி கவர்ச்சி புயலைக் கிளப்பிய இவர், தற்போது பர்தா அணிந்து இசுலாமிய மதத்தை முழுமையாக பின்பற்றும் பெண்ணாக மாறியுள்ளார். சினிமாவின் வாசத்தில் இருந்தும் ஒதுங்கியுள்ளார்
(4 / 10)
சனா கான் மகனை பெற்றெடுத்திருக்கும் நிலையில் அவருக்கு ஒன்றரை வயது ஆவதற்கு முன்பே, தற்போது தனது அடுத்த குழந்தையை பெற்றெடுக்க உள்ளதாக அறிவித்துள்ளார்.
(5 / 10)
கடந்த நவம்பர் 2020இல், அனஸ் என்பவரை திருமணம் செய்து கொள்வதற்கு முன்னரே, நடிப்பில் இருந்து சனா கான் ஒதுங்கியிருந்தார். பிக் பாஸ் 6 மூலம் பிரபலமான சனா கான், சிம்புவின் சிலம்பாட்டம் படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயமானார். தொடர்ந்து தமிழில் சில படங்களிலும் நடித்தார்
(6 / 10)
சமீபத்தில், இந்தியில் பிரபலமான ரூபினா திலாக்கின் பாட்காஸ்ட் நிகழ்ச்சியான 'கிசின் படயா நெஹி' எபிசோடில் சனா கான் தோன்றினார். அங்கு அவர் ஒரு அதிர்ச்சியான அறிக்கையை வெளியிட்டார், 'ஒவ்வொரு ஆணும் தனது மனைவி கண்ணியமாக உடை அணிவதை விரும்புகிறார்கள். ஆனால் ஆண்கள் தங்கள் மனைவிகளை இறுக்கமான அல்லது குட்டையான ஆடைகளை அணிய விடுவதைப் பார்க்கும்போது, எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. என்ன பிரச்சனை என்று புரியவில்லை! மற்ற ஆண்கள் உங்கள் மனைவியை ஹாட்டாக அழைப்பது உங்களுக்கு பிடிக்குமா?' என்று பேசினார்
(7 / 10)
கடந்த 2020 அக்டோபரில் சினிமாவுக்கு குட்பை சொல்வதாக கூறி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார் சனா கான்.அப்போது இஸ்லாம் மதத்துக்கு மாற விரும்புவதாக கூறினார். இதன் பின்னர் ஒரு மாதம் கழித்து குஜராத் மாநிலத்தை சேர்ந்த வைர வியாபாரி மௌலானா முஃப்தி அனஸ் சையத்தை திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பிறகு தனது பெயரை சையத் சனா கான் என மாற்றிக்கொண்டார்
(8 / 10)
சனா தனது மகனுக்கு தாரிக் ஜமீல் என்று பெயரிட்டுள்ளார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஏனெனில், சனா மற்றும் அனஸ் சையத்தின் மகனின் பெயர் பாகிஸ்தான் இஸ்லாமிய போதகர் மௌலானா தாரிக் ஜமீலின் பெயராக இருப்பதாக கூறப்படுகிறது
(9 / 10)
கடந்த 2020 அக்டோபரில் சினிமாவுக்கு குட்பை சொல்வதாக கூறி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார் சனா கான்.அப்போது இஸ்லாம் மதத்துக்கு மாற விரும்புவதாக கூறினார். இதன் பின்னர் ஒரு மாதம் கழித்து குஜராத் மாநிலத்தை சேர்ந்த வைர வியாபாரி மௌலானா முஃப்தி அனஸ் சையத்தை திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பிறகு தனது பெயரை சையத் சனா கான் என மாற்றிக்கொண்டார்
மற்ற கேலரிக்கள்