Sameera Reddy: ‘மார்பகத்த அறுவை சிகிச்சை செய்ய சொல்லி.. தோல் சுருங்கிதான் இருக்கு ஆனாலும்’ - சமீரா ரெட்டி-sameera reddy reveals she was pressured to get a boob job at top of her career - HT Tamil ,புகைப்பட செய்திகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Sameera Reddy: ‘மார்பகத்த அறுவை சிகிச்சை செய்ய சொல்லி.. தோல் சுருங்கிதான் இருக்கு ஆனாலும்’ - சமீரா ரெட்டி

Sameera Reddy: ‘மார்பகத்த அறுவை சிகிச்சை செய்ய சொல்லி.. தோல் சுருங்கிதான் இருக்கு ஆனாலும்’ - சமீரா ரெட்டி

Jun 10, 2024 09:30 PM IST Kalyani Pandiyan S
Jun 10, 2024 09:30 PM , IST

Sameera Reddy: என்னுடைய தோல் மோசமாக இருந்த போதும், சுருங்கி இருந்த போதும், என்னுடைய எடை அதிகமாக இருந்த போதும், நான் அதனை என்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காண்பித்திருக்கிறேன் -சமீரா ரெட்டி 

Sameera Reddy: ‘மார்பகத்த அறுவை சிகிச்சை செய்ய சொல்லி.. தோல் சுருங்கிதான் இருக்கு ஆனாலும்’ - சமீரா ரெட்டி

(1 / 5)

ameera Reddy: சமீரா ரெட்டி அண்மையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டார். அந்த புகைப்படத்தில், அவரின் 28 வயது போட்டோவும், 45 வயதில் எடுக்கப்பட்ட போட்டோவும் இடம் பெற்று இருந்தன. இதனை பார்த்த மக்கள் பாசிட்டிவான கமெண்டுகளை பதிவிட்டனர். அப்போது பேசிய அவர் என்னுடைய 28 வயதில் நான் உளியால் செதுக்கப்பட்டேன். ஆனால் என்னுடைய 45 வயதில் அரவணைப்போடும், செளகரியமாகவும் இருக்கிறேன். கூகுள் நான் 40 வயதாக இருந்த போது, என்னுடைய வயதை 38 ஆக காண்பித்தது. ஆனால், நான் 40 வயதில் பெருமிதம் கொண்ட காரணத்தால், அதனை உடனடியாக மாற்றினேன்” என்றார்.  

(2 / 5)

மார்பக அறுவை சிகிச்சை செய்ய சொல்லி வற்புறுத்தல் மேலும் பேசிய அவர் , “ நான் என்னுடைய கேரியரின் உச்சக்கட்டத்தில் இருந்த போது, திரைத்துறையில் இருந்த பலர் என்னை மார்பக அறுவை சிகிச்சை செய்ய சொல்லி, கொடுத்த அழுத்தத்தை என்னால் வார்த்தையால் சொல்லி விவரிக்க முடியாது. ஆனால் நான் அதனை விரும்பவில்லை. இது நீங்கள் ஒரு குறையை மறைப்பது போன்று இருக்கிறது. ஆனால் அது குறை அல்ல. 

(3 / 5)

வாழ்க்கை அப்படியானதாகத்தான் இருக்கிறது.பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொள்ளும் நபர்களை, நான் எடை போட மாட்டேன். ஆனால் என்னை பொருத்தவரை எனக்குள் நடந்த உள்ளார்ந்த வேலைதான், எனக்கு சரிவர வேலை செய்தது.என்னுடைய தோல் மோசமாக இருந்த போதும், சுருங்கி இருந்த போதும், என்னுடைய எடை அதிகமாக இருந்த போதும், நான் அதனை என்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காண்பித்திருக்கிறேன். இதுதான் நான். 36 -24 -36 என்று பெண்களுக்கே சொல்லப்படும் உடல் விகிதத்தில் இருப்பதை விட, நான் எப்படி இருக்கிறேனோ, அதை அப்படியே காண்பிப்பதற்கு நான் நன்றியுள்ளவளாக இருக்கிறேன்.  

(4 / 5)

உண்மையான அன்பு என்னுடைய ரீல்களுக்கு கிடைக்கும் அன்புதான் உண்மையான பாராட்டுகள். நான் இப்படி நிஜமாக இருப்பது போன்று, நடிகையாக இருந்த போது கூட இல்லை. அப்போது எனக்கும், பார்வையாளர்களுக்கும் இடையே ஒரு விதமான பர்தா இருந்திருக்கிறது. நாங்கள் பார்வையாளர்கள் என்ன கேட்க விரும்புகிறார்களோ, அதை மட்டுமே கொடுக்க வேண்டிய இடத்தில் இருந்தோம். ஆனால், இப்போது இருப்பதை அப்படியே காண்பிக்கும் போது மக்களுக்கு அது கவலை அளிக்கிறது. நான் தினமும் ஒரு குப்பை போல எழுந்து, என்னுடைய குழந்தைகளின் பின்னால் ஓடுகிறேன். ஆனால் 45 வயதில் அற்புதமாக தோற்றமளிக்கும் திறன் என்னிடம் இருக்கிறது. நீங்கள் உங்களின் நரைமுடியையும், தொப்பையையும், தோல் சுருக்கங்களையும் பொதுவெளியில் காட்டும் போது, அங்கிருக்கும் ஒருவர் என்னை போலவும் வேறு ஒருவர் இருக்கிறார் என்று உணர்கிறார், அது அவர்கள் மீதான அழுத்தத்தை நீக்குகிறது," என்று கூறினார்.

(5 / 5)

மற்ற கேலரிக்கள்