தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Saindhavi Gv Prakash: ‘கல்யாண போட்டோவ திருப்பி திருப்பி பார்ப்பேன்.. அவர் கொடுத்த பூ வாடிருச்சு; ஆனா..’ -சைந்தவி எமோஷனல்

Saindhavi Gv prakash: ‘கல்யாண போட்டோவ திருப்பி திருப்பி பார்ப்பேன்.. அவர் கொடுத்த பூ வாடிருச்சு; ஆனா..’ -சைந்தவி எமோஷனல்

May 18, 2024 11:25 AM IST Kalyani Pandiyan S
May 18, 2024 11:25 AM , IST

Saindhavi Gv prakash: காரணம், அன்று என்ன நடந்தது என்பது எனக்கு நன்றாக நினைவிருக்கும். அந்த புகைப்படம் எடுக்கும் பொழுது, நாங்கள் என்னவெல்லாம் பேசிக் கொண்டிருந்தோம் உள்ளிட்ட அனைத்தும் எனக்கு நினைவுக்கு வரும்.- சைந்தவி எமோஷனல்

Saindhavi Gv prakash: ‘கல்யாண போட்டோவ திருப்பி திருப்பி பார்ப்பேன்.. அவர் கொடுத்த பூ வாடிருச்சு; ஆனா..’ -சைந்தவி எமோஷனல்

(1 / 6)

Saindhavi: அண்மையில் ஜிவி பிரகாஷ்குமாரும், சைந்தவியும் பிரிந்து வாழ்வதாக அறிக்கை வெளியிட்டு இருந்தனர். இது தொடர்பான பேச்சு கோலிவுட்டை பரபரப்பாக்கி இருக்கும் நிலையில், முன்னதாக சைந்தவி தன்னுடைய கல்யாண நாள் குறித்து, இந்தியா கிளிட்ஸ் சேனலுக்கு கொடுத்த பேட்டியில் பேசி இருந்தார். அந்த பேட்டி இங்கே!கல்யாணத்தில் மறக்க முடியாத சம்பவம் அவர் பேசும் போது, “எனக்கு என்னுடைய கல்யாணமே மறக்க முடியாத ஒரு மொமண்டாகத்தான் இருந்தது. காரணம், கிட்டத்தட்ட 12 வருடங்களாக, நாங்கள் காதலித்து, காத்திருந்து, கல்யாணம் செய்து கொண்டோம்.  எனக்கு ஞாபக சக்தி மிக மிக அதிகம்.  

(2 / 6)

நான் அடிக்கடி எங்களது கல்யாண போட்டோக்களை எடுத்து பார்த்துக் கொண்டே இருப்பேன். அதை பார்க்கும் ஜிவி, எத்தனை முறைதான், இந்த போட்டோக்களை நீ மீண்டும் மீண்டும் பார்ப்பாய் என்று கேட்பார். அதற்கு நான், அந்த போட்டோக்களை பார்க்கும் போது, எனக்கு மீண்டும் அந்த மொமெண்டில் வாழ்வது போன்ற உணர்வு கிடைக்கிறது என்பேன். எனக்கு அது மிகவும் பிடிக்கும். 

(3 / 6)

சைந்தவி எமோஷனல்காரணம், அன்று என்ன நடந்தது என்பது எனக்கு நன்றாக நினைவிருக்கும். அந்த புகைப்படம் எடுக்கும் பொழுது, நாங்கள் என்னவெல்லாம் பேசிக் கொண்டிருந்தோம் உள்ளிட்ட அனைத்தும் எனக்கு நினைவுக்கு வரும். கல்யாணத்தில் நிகழ்ந்த ஒவ்வொரு மொமண்டும் எனக்கு மிக மிக முக்கிய மொமண்டுகளாக இருந்தன. அதிலும் மறக்க முடியாத மொமண்ட் ஒன்று இருக்கிறது.  

(4 / 6)

அது, கல்யாணம் நடக்கும் அன்றைய காலை எனக்கு நலங்கு வைத்தார்கள். அந்த நிகழ்வு முடியும் தருவாயில், எனக்கு ஒரு மிகப்பெரிய பொக்கேவும், பாக்ஸ் நிறைய சாக்லேட்டையும் ஜிவி கொடுத்து அனுப்பினார். அதில் ஜிவி பிரகாஷ் ஒரு லெட்டரையும் இணைத்து இருந்தார். அந்த லெட்டரில் 12 வருடங்களாக என்னுடன் மிகவும் அன்பாக நீ இருந்ததற்கு நன்றி.  

(5 / 6)

இனி வரும் காலத்திலும்இனிவரும் காலங்களிலும் நாம் இணைந்து இருப்போம் என்று எழுதியிருந்தார். அது எனக்கு மிக மிக முக்கியமான ஒரு மொமண்டாகும். அதை என்னால் மறக்கவே முடியாது. அந்த பூ தற்போது வாடிவிட்டது. ஆனால் அந்த பொக்கேவில், அவர் எழுதி அனுப்பி இருந்த லெட்டரை இன்று வரை நான் பத்திரமாக வைத்திருக்கிறேன்.” என்று பேசினார். 

(6 / 6)

டி20 உலகக் கோப்பை 2024

மற்ற கேலரிக்கள்