உயிரே..உயிரே.. சாமந்தி பூ.. நெற்றித்திலகம்.. அன்னப்பூர்ணா தேவியிடம் ஆசி பெற்ற சாய்பல்லவி..- வைரல் புகைப்படங்கள் உள்ளே!
வாரணசியில் உள்ள அன்னப்பூர்ணா தேவி கோயிலுக்கு சாய்பல்லவி சென்று இருக்கிறார். அது தொடர்பான புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
(1 / 6)
பிரபல இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகி வரும் ராமாயணம் திரைப்படத்தில் நடிகை சாய்பல்லவி சீதாவாக நடிக்கிறார். இந்தப்படத்தில் கதாநாயகனாக நடிகர் ரன்பீர் கபூர் நடிக்கிறார். உடலளவில் மட்டுமல்லாது, ஆன்மீக ரீதியாகவும் அந்த கதாபாத்திரத்திற்காக தன்னை தயார்படுத்தி வரும் சாய்பல்லவி, அண்மையில் வாரணாசியில் உள்ள அன்னபூர்ணா தேவி கோயிலுக்குச் சென்று அங்கிருக்கும் தெய்வத்தின் ஆசீர்வாதம் பெற்று இருப்பதாக சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது.
(2 / 6)
நீல நிற சல்வார் மற்றும் அதற்கு மேட்சிங்காக துப்பாட்டாவை அணிந்து வந்திருந்த சாய்பல்லவி, சாமந்திப் பூ மாலையை அணிந்து கொண்டு, நெற்றியில் திலகமிட்டு மனமுருக கடவுகளை வணங்கினார். அது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
(3 / 6)
சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்பேன்.கடந்த சில நாட்களுக்கு முன்னதாக, சீதையாக நடிக்கும் சாய்பல்லவி ராமாயணம் படத்திற்காக சைவத்திற்கு மாறியிருப்பதாகவும், வெளிநாடுகளுக்கு செல்லும் போது கூட, பிரத்யேக சமையல் காரரை அழைத்துச் செல்வதாகவும் ஊடகங்களில் தகவல் வெளியானது. இதனை மறுத்த சாய்பல்லவி அதற்கு எதிர்வினையாற்றினார்.
(4 / 6)
அதில் அவர் ‘பெரும்பாலான நேரங்களில், கிட்டத்தட்ட ஒவ்வொரு முறையும், ஆதாரமற்ற வதந்திகள், இட்டுக்கட்டப்பட்ட பொய்கள் மற்றும் தவறான தகவல்கள் பரப்பப்படுவதைக் காணும்போது, நான் அமைதியாக இருக்கவே தேர்வு செய்கிறேன். இது போன்ற வதந்திகள் எனது படங்களின் வெளியீடுகள், அறிவிப்புகள் அல்லது எனது வாழ்க்கையின் நேசத்துக்குரிய தருணங்களின் போது நடக்கிறது.
(5 / 6)
ஆனால் இது தொடர்ந்து நடந்து கொண்டிருப்பதால் நான் எதிர்வினையாற்ற வேண்டிய நேரம் இது. ’ என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டு இருந்தார்.
மற்ற கேலரிக்கள்