ஐபிஎல் 2025: ஒரேயொரு அரைசதம்.. மூன்று வெவ்வேறு சாதனைகளை நிகழ்த்திய ரோஹித் ஷர்மா.. என்ன தெரியுமா?
- மும்பை இந்தியன்ஸ் அணி முன்னாள் கேப்டனும், ஓபனிங் பேட்ஸ்மேனுமான ரோஹித் ஷர்மா சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதமடித்து வெற்றிக்கு முக்கிய பங்களிப்பு செய்தார். இதன் மூலம் ஐபிஎல் தொடரில் ஷிகர் தவான் நிகழ்த்திய சாதனை ஒன்றையும் முறியடித்துள்ளார்
- மும்பை இந்தியன்ஸ் அணி முன்னாள் கேப்டனும், ஓபனிங் பேட்ஸ்மேனுமான ரோஹித் ஷர்மா சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதமடித்து வெற்றிக்கு முக்கிய பங்களிப்பு செய்தார். இதன் மூலம் ஐபிஎல் தொடரில் ஷிகர் தவான் நிகழ்த்திய சாதனை ஒன்றையும் முறியடித்துள்ளார்
(1 / 6)
ஐபிஎல் 2025 தொடரில் பேட்டிங்கில் தடுமாற்றம் கண்டு வந்த ரோஹித் ஷர்மா, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக சிறப்பானதொரு ஆட்டத்தை வெளிப்படுத்தி பார்மை மீட்டெடுத்தார். இந்த போட்டியில் 45 பந்துகளில் 76 ரன்கள் அடித்த அவர் ஆட்டநாயகன் விருதையும் வென்றார். 33 பந்துகளில் அரைசதமடித்த ரோஹித், ஐபிஎல் போட்டிகளில் தனது 44வது அரைசதத்தை அடித்துள்ளார்
(2 / 6)
ஐபிஎல் போட்டிகளில் 44 அரைசதமடித்த ரோஹித், முன்னாள் வீரர் ஷிகர் தவானின் சாதனையை முறியடித்துள்ளார். ஐபிஎல் போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த வீரர்களில் இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்
(3 / 6)
இதுவரை 264 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியிருக்கும் ரோஹித் ஷர்மா, 6786 ரன்கள் அடித்துள்ளார். ஷிகர் தவான் 222 ஐபிஎல் போட்டிகளில் 6769 ரன்கள் எடுத்துள்ளார். இந்த லிஸ்டில் முதல் இடத்தில் விராட் கோலி இருக்கிறார். கோலி 260 போட்டிகள் விளையாடி 8326 ரன்கள் அடித்துள்ளார்
(4 / 6)
மற்றொரு தனித்துவ சாதனையும் ரோஹித் ஷர்மா புரிந்துள்ளார். சிஎஸ்கே அணிக்கு எதிராக அதிக சதமடித்த வீரர்களில் விராட் கோலி, ஷிகர் தவான், டேவிட் வார்னர் ஆகியோருடன் இணைந்துள்ளார் ரோஹித். இந்த வீரர்கள் அனைவரும் சிஎஸ்கேவுக்கு எதிராக இதுவரை 9 அரைசதங்கள் அடித்துள்ளனர்
(REUTERS)(5 / 6)
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக சிறப்பான இன்னிங்ஸ் மூலம் மூன்றாவது சாதனை ஒன்றையும் நிகழ்த்தியுள்ளார் ரோஹித் ஷர்மா. ஐபிஎல் வரலாற்றி 20 ஆட்டநாயகன் விருதை வென்ற முதல் இந்தியர் என்ற சாதனை புரிந்துள்ளார்
(AFP)மற்ற கேலரிக்கள்








