தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Rohit Sharma Record:ஒரே அரைசதம்! பல்வேறு சாதனைகளை முறியடித்த ரோகித் ஷர்மா - டி20 உலகக் கோப்பை போட்டிகளில் தனித்துவ சாதனை

Rohit Sharma Record:ஒரே அரைசதம்! பல்வேறு சாதனைகளை முறியடித்த ரோகித் ஷர்மா - டி20 உலகக் கோப்பை போட்டிகளில் தனித்துவ சாதனை

Jun 07, 2024 07:45 AM IST Muthu Vinayagam Kosalairaman
Jun 07, 2024 07:45 AM , IST

  • India vs Ireland, T20 World Cup 2024: அயர்லாந்துக்கு எதிரான டி20 போட்டி தனது அற்புத அரைசதத்தினால் இந்திய அணிக்கு வெற்றியை தேடிதந்தார் இந்திய அணி கேப்டன் ரோகித் ஷர்மா. இந்த போட்டியில் கேப்டனாகவும், பேட்ஸ்மேனாகவும் பல சாதனைகளை புரிந்துள்ளார்

அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் 36 பந்துகளில் அரைசதத்தை பூர்த்தி செய்த ரோகித் ஷர்மா, தனது இன்னிங்ஸில் 4 பவுண்டரி, 3 சிக்ஸர்களை அடித்தார். இந்த போட்டியில் 4 ஆயிரம் சர்வதேச டி20 ரன்கள் பூர்த்தி செய்த மூன்றாவது பேட்ஸ்மேன் என்ற பெருமையை பெற்றார் 

(1 / 5)

இதற்கு அடுத்தபடியாக மற்றொரு சாதனையாக டி20 உலகக் கோப்பை தொடரில் 1000 ரன்கள் கடந்த மூன்றாவது பேட்ஸ்மேன் என்ற சாதனை புரிந்தார். இந்த போட்டி தொடங்குவதற்கு முன் 37 ரன்கள் அவருக்கு தேவைப்பட்டது. தற்போது வரை ரோகித் ஷர்மா 1015 ரன்கள் அடித்துள்ளார். டி20 உலகக் கோப்பை தொடர்களில் இதுவரை 40 போட்டிகளில் 37 இன்னிங்ஸ் பேட் செய்த இந்த சாதனையை புரிந்துள்ளார்

(2 / 5)

ரோகித் ஷர்மாவுக்கு முன்னதாக இந்தியாவின் விராட் கோலி, இலங்கை அணியின் முன்னாள் வீரர் மஹேலா ஜெயவர்த்தனே ஆகியோர் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளனர்

(3 / 5)

மற்றொரு சாதனையாக டி20 உலகக் கோப்பை தொடர்களில் கிறிஸ் கெய்லை பின்னுக்கு தள்ளியுள்ளார் ரோகித் ஷர்மா. கிறிஸ் கெய்ல் 33 போட்டிகள், 33 இன்னிங்ஸில் 965 ரன்கள் எடுத்துள்ளார்

(4 / 5)

இரண்டாவது இடத்தில் இருக்கும் மஹேலா ஜெயவர்த்தனேவை பின்னுக்க தள்ள ரோகித்துக்கு இன்னும் 2 ரன்கள் மட்டும் தேவை. முதல் இடத்தில் இருக்கும் விராட் கோலி 28 போட்டிகள்,  26 இன்னிங்ஸில் 1142 ரன்கள் அடித்துள்ளார்

(5 / 5)

டி20 உலகக் கோப்பை 2024

மற்ற கேலரிக்கள்