Rohit Sharma Record: சச்சின் நிகழ்த்திய மாபெரும் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா! என்ன தெரியுமா?
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Rohit Sharma Record: சச்சின் நிகழ்த்திய மாபெரும் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா! என்ன தெரியுமா?

Rohit Sharma Record: சச்சின் நிகழ்த்திய மாபெரும் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா! என்ன தெரியுமா?

Aug 05, 2024 05:48 PM IST Muthu Vinayagam Kosalairaman
Aug 05, 2024 05:48 PM , IST

  • Rohit Sharma Record: இலங்கைக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா அரைசதம் அடித்தார். இதன் மூலம் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை ஹிட்மேன் ரோஹித் ஷர்மா முறியடித்தார்

இலங்கைக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா அரைசதம் அடித்தார். இந்த போட்டியில் இந்தியா 32 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியுள்ளது. தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் 1-0 என இலங்கை முன்னிலை வகிக்கிறது.  ரோஹித் 44 பந்துகளில் 5 பவுண்டரிகள், 4 சிக்சர்களுடன் 64 ரன்கள் எடுத்தார்

(1 / 6)

இலங்கைக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா அரைசதம் அடித்தார். இந்த போட்டியில் இந்தியா 32 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியுள்ளது. தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் 1-0 என இலங்கை முன்னிலை வகிக்கிறது.  ரோஹித் 44 பந்துகளில் 5 பவுண்டரிகள், 4 சிக்சர்களுடன் 64 ரன்கள் எடுத்தார்(AFP)

ரோஹித் 44 பந்துகளில் 64 ரன்கள் எடுத்து அதிரடியான தொடக்கத்தை தந்தார். தனது இன்னிங்ஸில் 5 பவுண்டரிகள், 4 சிக்சர்களை அடித்தார்

(2 / 6)

ரோஹித் 44 பந்துகளில் 64 ரன்கள் எடுத்து அதிரடியான தொடக்கத்தை தந்தார். தனது இன்னிங்ஸில் 5 பவுண்டரிகள், 4 சிக்சர்களை அடித்தார்(PTI)

சர்வதேச கிரிக்கெட்டில் அனைத்து வடிவங்களிலும் அதிக ரன்கள் (50+) எடுத்த இந்திய தொடக்க வீரர் என்ற சாதனையை ரோஹித் சர்மா படைத்துள்ளார். தொடக்க ஆட்டக்காரராக இந்தியாவுக்காக களமிறங்கிய ரோஹித் ஷர்மா 121 முறை 50 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளார்

(3 / 6)

சர்வதேச கிரிக்கெட்டில் அனைத்து வடிவங்களிலும் அதிக ரன்கள் (50+) எடுத்த இந்திய தொடக்க வீரர் என்ற சாதனையை ரோஹித் சர்மா படைத்துள்ளார். தொடக்க ஆட்டக்காரராக இந்தியாவுக்காக களமிறங்கிய ரோஹித் ஷர்மா 121 முறை 50 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளார்(AP)

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் சச்சின் டெண்டுல்கர் 120 முறை 50 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளார். இப்போது ஹிட்மேன் ரோஹித் ஷர்மா அதை முறியடித்துள்ளார். சச்சின் இந்தியாவுக்காக 342 இன்னிங்ஸ்களில் ஒபனராக களமிறங்கி120 முறை 50 ரன்கள் அடித்துள்ளார். ரோஹித் ஷர்மா 353 போட்டிகளில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி, சச்சினின் சாதனையை முறியடித்துள்ளார். சச்சின் டென்டுல்ர் டெஸ்ட் மற்றும் வெள்ளை பந்து கிரிக்கெட் என இந்தியாவுக்காக  264 முறை 50+ ரன்கள் எடுத்திருக்கிறார்

(4 / 6)

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் சச்சின் டெண்டுல்கர் 120 முறை 50 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளார். இப்போது ஹிட்மேன் ரோஹித் ஷர்மா அதை முறியடித்துள்ளார். சச்சின் இந்தியாவுக்காக 342 இன்னிங்ஸ்களில் ஒபனராக களமிறங்கி120 முறை 50 ரன்கள் அடித்துள்ளார். ரோஹித் ஷர்மா 353 போட்டிகளில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி, சச்சினின் சாதனையை முறியடித்துள்ளார். சச்சின் டென்டுல்ர் டெஸ்ட் மற்றும் வெள்ளை பந்து கிரிக்கெட் என இந்தியாவுக்காக  264 முறை 50+ ரன்கள் எடுத்திருக்கிறார்(AFP)

சர்வதேச போட்டிகளில் அதிக 50+ ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் (146) முதலிடத்தில் உள்ளார். கிறிஸ் கெய்ல் (144), சனத் ஜெயசூர்யா (136), டெஸ்மண்ட் ஹெய்ன்ஸ் (131), கிரேம் ஸ்மித் (125) ஆகியோர் முதல் ஐந்து இடங்களில் உள்ளனர். ரோகித் சர்மா (121) ஆறாவது இடத்தில் வந்தார்

(5 / 6)

சர்வதேச போட்டிகளில் அதிக 50+ ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் (146) முதலிடத்தில் உள்ளார். கிறிஸ் கெய்ல் (144), சனத் ஜெயசூர்யா (136), டெஸ்மண்ட் ஹெய்ன்ஸ் (131), கிரேம் ஸ்மித் (125) ஆகியோர் முதல் ஐந்து இடங்களில் உள்ளனர். ரோகித் சர்மா (121) ஆறாவது இடத்தில் வந்தார்(AFP)

ரோஹித் சர்மாவின் அரை சதம் இருந்தபோதிலும், இலங்கைக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்தியா தோல்வியடைந்தது. 241 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 42.2 ஓவரில் 208 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இலங்கை சுழற்பந்து வீச்சாளர் ஜெஃப்ரி வொண்டர்சே ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தினார்

(6 / 6)

ரோஹித் சர்மாவின் அரை சதம் இருந்தபோதிலும், இலங்கைக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்தியா தோல்வியடைந்தது. 241 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 42.2 ஓவரில் 208 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இலங்கை சுழற்பந்து வீச்சாளர் ஜெஃப்ரி வொண்டர்சே ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தினார்(PTI)

மற்ற கேலரிக்கள்