Tamil News  /  Photo Gallery  /  Rohit Sharma Breaks Ms Dhoni Record, Becomes India Most Successful T20i Captain

Rohit Sharma Record: ஒரே போட்டியில் தோனி, விராட் கோலி சாதனைகளை தட்டி தூக்கிய ரோஹித் ஷர்மா! முழு விவரம்

Jan 18, 2024 08:55 AM IST Muthu Vinayagam Kosalairaman
Jan 18, 2024 08:55 AM , IST

பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம், இங்கிலாந்து முன்னாள் கேப்டன் இயான் மோர்கன் ஆகியோருடன் இணைந்து அதிக டி20 போட்டிகளை வென்ற கேப்டனாக மாறியுள்ளார் ரோஹித் ஷர்மா.

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை வென்றது இந்தியா. இந்த வெற்றியின் மூலம் கேப்டன் ரோஹித் ஷர்மா, முன்னாள் இந்திய அணி கேப்டன் எம்எஸ் தோனி கேப்டன்சி சாதனை, விராட்  கோலி அதிக டி20 ரன்கள் சாதனையை முறியடித்துள்ளார்

(1 / 5)

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் ரோஹித் ஷர்மா அதிரடியாக பேட் செய்து 69 பந்துகளில் 121 ரன்கள் எடுத்தார். இவர் தனது இன்னிங்ஸில் 11 பவுண்டரி, 8 சிக்ஸர்களை அடித்தார். இந்த போட்டியில் சதமடித்ததன் மூலம் டி20 கிரிக்கெட்டில் 5வது சதத்தை பூர்த்தி செய்த ரோஹித் ஷர்மா, டி20 போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த இந்திய கேப்டன் விராட் கோலியின் 1570 ரன்கள் சாதனையை முந்தி, 1648 ரன்கள் எடுத்துள்ளார் ரோஹித் ஷர்மா. இந்திய முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி டி20 போட்டிகளில் 1112 ரன்கள் அடித்துள்ளார்

(2 / 5)

ரோஹித் ஷர்மா இதுவரை 54 டி20 போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டு 42 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார். இதன்மூலம் எம்எஸ் தோனி சாதனையை முறியடித்துள்ளார். தோனி 71 போட்டிகளுக்கு கேப்டனாக செயல்பட்டு 41 வெற்றிகளை குவித்துள்ளார்

(3 / 5)

ஒட்டுமொத்தமாக இங்கிலாந்து முன்னாள் கேப்டன் இயான் மோர்கன், பாகிஸ்தான் பாபர் அசாம் ஆகியோருடன் அதிக டி20 போட்டிகளில் வென்ற கேப்டன் பட்டியலில் இணைந்துள்ளார் ரோஹித் ஷர்மா. இந்த லிஸ்டில் ஆப்கானிஸ்தான் கேப்டன் ஆஸ்கார் ஆப்கன், உகாண்டா கேப்டன் பிரெய்ன் மசாபா ஆகியோரும் தங்களது அணிக்காக அதிக வெற்றிகளை பெற்று தந்த கேப்டன்களாக  இருக்கிறார்கள்

(4 / 5)

(5 / 5)

WhatsApp channel

மற்ற கேலரிக்கள்