RIP Manoj Bharathi: ‘நடிகையுடன் காதல்.. கேரளாவில் திருமணம்..’ மனோஜ் பாரதியின் மகிழ்வான பக்கம்!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Rip Manoj Bharathi: ‘நடிகையுடன் காதல்.. கேரளாவில் திருமணம்..’ மனோஜ் பாரதியின் மகிழ்வான பக்கம்!

RIP Manoj Bharathi: ‘நடிகையுடன் காதல்.. கேரளாவில் திருமணம்..’ மனோஜ் பாரதியின் மகிழ்வான பக்கம்!

Published Mar 25, 2025 09:53 PM IST Stalin Navaneethakrishnan
Published Mar 25, 2025 09:53 PM IST

  • RIP Manoj Bharathi: நடிகரும் இயக்குனருமான மனோஜ் பாரதி, மாரடைப்பால் காலமானார். தொழில் வாழ்க்கை அவருக்கு போராட்டமாக இருந்தாலும், குடும்ப வாழ்க்கை அவருக்கு மகிழ்வாகவே இருந்தது. காதலில் தொடங்கி கல்யாணம் வரை, அவரது வாழ்க்கை எப்படி இருந்தது? இங்கே காணலாம்.

நடிகரும், இயக்குனருமான மனோஜ் பாரதி, தான் சினிமாவில் வந்த சில ஆண்டுகளில் நந்தனா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

(1 / 5)

கேரளாவைச் சேர்ந்த நந்தனாவும் நடிகையாவார். தமிழ், தமிழர் உணர்வோடு செயல்பட்டு வந்த பாரதிராஜாவை, கேரள பெண்ணை மணந்த மகனை வைத்து, அந்த சமயத்தில் சிலர் விமர்சனம் செய்தனர்.

(2 / 5)

விமர்சனங்களை புறந்தள்ளி, தன் மனைவி நந்தனாவுடன் மகிழ்வான வாழ்க்கையை வாழ்ந்தார் மனோஜ். நட்பாக இருந்து காதலாக மாறிய இவர்களது திருமணம், 2006 ஆம் ஆண்டு டிசம்பர் 1 ஆம் தேதி கோழிக்கோட்டில் நடந்தது.

(3 / 5)

மனோஜ்-நந்தனா தம்பதிக்கு ஆர்த்திகா மற்றும் மதிவதனி என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். குடும்பத்தாருடன் நேரத்தை செலவிடுவதை மனோஜ் வழக்கமாக கொண்டிருந்தார்.

(4 / 5)

தொழில் ரீதியாக கடுமையான போராட்டங்களை மனோஜ் சந்தித்தாலும், குடும்ப வாழ்க்கையில் தன் மனைவி, குழந்தைகளுடன் அவர் மிக்க மகிழ்ச்சியோடு வாழ்ந்து வந்தார். இப்போது அவர் இறந்த நிலையில், அவரது குடும்பத்திற்கு ஆறுதல் கிடைக்கட்டும்.

(5 / 5)

பா.ஸ்டாலின் நவநீதகிருஷ்ணன், இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் எடிட்டராக பணியாற்றி வருகிறார். அச்சு ஊடகம், காட்சி ஊடகம், டிஜிட்டல் ஊடகத்தில் 23 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், தேசம், சர்வதேசம், பொழுதுபோக்கு, ஜோதிடம், ஆன்மிகம், விளையாட்டு, வியாபாரம், லைப்ஸ்டைல் உள்ளிட்ட அனைத்து பிரிவுகளின் கீழ் செய்திகளை எழுதுவதுடன், இணையதளத்தையும் வழிநடத்தி வருகிறார். மதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் பிபிஏ முடித்துள்ள இவர், தினபூமி, தினமலர், நியூஸ் 18, ஏபிபி நாடு ஆகிய நிறுவனங்களைத் தொடர்ந்து, 2022 முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

மற்ற கேலரிக்கள்