RIP Captain Vijayakanth: ஒற்றை MLA To எதிர்க்கட்சித் தலைவர்! விஜயகாந்தின் அரசியல் பயணம்!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Rip Captain Vijayakanth: ஒற்றை Mla To எதிர்க்கட்சித் தலைவர்! விஜயகாந்தின் அரசியல் பயணம்!

RIP Captain Vijayakanth: ஒற்றை MLA To எதிர்க்கட்சித் தலைவர்! விஜயகாந்தின் அரசியல் பயணம்!

Published Dec 28, 2023 09:28 PM IST Kathiravan V
Published Dec 28, 2023 09:28 PM IST

  • விருத்தாசலம் தொகுதியில் போட்டியிட்ட விஜயகாந்த் அக்கட்சியின் முதல் எம்.எல்.ஏவாக வென்று சட்டமன்றத்திற்கு சென்றார். அத்தேர்தலில் 8.4 சதவீத வாக்குகளை தேமுதிக பெற்று இருந்தது.

தேசிய முற்போக்கு திராவிட கழகம் (தேமுதிக) செப்டம்பர் 14ஆம் தேதி 2005ஆம் ஆண்டு நடிகர் விஜயகாந்தால் தேமுதிக அதிகாரப்பூர்வமாக மதுரையில் தொடங்கப்பட்டது.

(1 / 9)

நடிகர் விஜயகாந்தின் திரை அறிமுகம் மக்களிடையே பொதுவான இணக்கத்தை பெற்றுத் தந்தது. பழைய செங்கல்பட்டு, வட ஆற்காடு, தென் ஆற்காடு மாவட்டங்கள் அக்கட்சியின் உயிர் நாடியாய் மாறியது.

(2 / 9)

2006ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலில், தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளில் 232 தொகுதிகளில் முரசு சின்னத்திலும், கடையநல்லூர், திருநெல்வேலி தொகுதிகளில் மட்டும் மோதிரம் சின்னத்திலும் அக்கட்சி போட்டியிட்டது. 

(3 / 9)

விருத்தாசலம் தொகுதியில் போட்டியிட்ட விஜயகாந்த் அக்கட்சியின் முதல் எம்.எல்.ஏவாக வென்று சட்டமன்றத்திற்கு சென்றார். அத்தேர்தலில் 8.4 சதவீத வாக்குகளை தேமுதிக பெற்று இருந்தது.

(4 / 9)

2009ஆம் ஆண்டு 40 தொகுதிகளிலும் போட்டியிட்ட தேமுதிக, அனைத்து தொகுதிகளிலும் தோல்வி அடைந்திருந்தாலும் 10 சதவீத வாக்குகளை பெற்றது

(5 / 9)

2011 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி அமைத்தது 41 தொகுதிகளில் போட்டியிட்டு 29 தொகுதிகளை வென்று பிரதான எதிர்க்கட்சியாக உருவெடுத்தது.

(6 / 9)

சட்டப்பேரவையில் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா முன்னிலையில் விஜயகாந்த் நாக்கை துருத்திய சம்பவம் பெரும் சர்ச்சைக்குள்ளானது. தேமுதிகவை சேர்ந்த சில எம்.எல்.ஏக்கள் ஜெயலலிதாவை சந்தித்து ஆதரவு அளித்தது விஜயகாந்தின் அரசியல் சிரத்தன்மையை கேள்வி எழுப்பியது.

(7 / 9)

2014 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து 16 தொகுதிகளில் போட்டியிட்டு அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பை இழந்த அதன் வாக்கு வங்கி 6.1 சதவீதமாக குறைந்தது.

(8 / 9)

2016 சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட்ட விஜயகாந்த் சொந்த தொகுதியிலேயே தோல்வி அடைந்தார். 

(9 / 9)

மற்ற கேலரிக்கள்