உங்கள் மூளையை ஷார்ப்பாக்கும் விடுகதைகள்! குழந்தைகளிடம் கேளுங்கள், குஷியாவார்கள்!
- உங்கள் மூளையை ஷார்ப்பாக்கும் விடுகதைகள்! குழந்தைகளிடம் கேளுங்கள், குஷியாவார்கள்!
- உங்கள் மூளையை ஷார்ப்பாக்கும் விடுகதைகள்! குழந்தைகளிடம் கேளுங்கள், குஷியாவார்கள்!
(1 / 10)
நான் வெட்டுப்பட்டால் வெட்டியவனை அழவைப்பேன். நான் யார்?வெங்காயம்😍😍😍😍😍😍உலகம் எங்கும் படுக்கை விரித்தும் உறங்காமல் அலைகிறான், அவன் யார்?கடல் அலை.😍😍😍😍😍😍உயிரில்லாத நீதிபதியிடம் ஒழுங்கான நியாயம், அது என்ன?தராசு.😍😍😍😍😍😍
(2 / 10)
தாடிக்காரன், மீசைக்காரன், கோயிலுக்குப் போனால் வெள்ளைக்காரன், அவன் யார்?தேங்காய்.😍😍😍😍😍😍என் குதிரை கருப்பு குதிரை, குளிப்பாட்டினால் வெள்ளை குதிரை?உளுந்து.😍😍😍😍😍😍மண்ணை சாப்பிட்டு மண்ணிலேயே வாழ்ந்து, மண்ணோடு மண்ணாவான், அவன் யார்?மண் புழு.😍😍😍😍😍😍
(3 / 10)
உயரத்தில் விழுவான், அடிபடாது. தரைக்குத்தான் சேதாரம் ஆகும். அது என்ன?அருவி நீர்.😍😍😍😍😍😍பச்சைக் கீரை சமைக்க உதவாது, வழுக்கிவிடும். அது என்ன?பாசி.😍😍😍😍😍😍அடர்ந்த காட்டில் ஒற்றையடிப் பாதை. அது என்ன?தலை வகிடு.😍😍😍😍😍😍
(4 / 10)
முதுகைத் தொட்டல் மூச்சு விடுவான், பல்லைத் தொட்டால் பாட்டு பாடுவான். அவன் யார்?ஹார்மோனியம்.😍😍😍😍😍😍காது பெரியது, ஆனால் கேளாது, வாய் பெரியது ஆனால் பேசாது, வயிறு பெரியது ஆனால் உண்ணாது. அது என்ன?அண்டா.😍😍😍😍😍😍ராஜா உண்டு, ராணி உண்டு, மந்திரியும் உண்டு. ஆனால் நாடு இல்லை. அது என்ன?சீட்டுக்கட்டு.😍😍😍😍😍😍
(5 / 10)
மேலேமேலே செல்லும் ஆனால், கீழே வராது. அது என்ன?வயது.😍😍😍😍😍😍வகைவகையாய்த் தெரியும் வண்ணப்படம். கண்மூடிக்காணும் காட்சிப்படம். அது என்ன?கனவு.😍😍😍😍😍😍மென்மையான உடம்புக்காரன், பாரம் சுமக்கும் கெட்டிக்காரன் அது என்ன?நத்தை.😍😍😍😍😍😍
(6 / 10)
அனலில் பிறப்பான், ஆகாயத்தில் பறப்பான். அவன் யார்?புகை.😍😍😍😍😍😍வாலிலே எண்ணெய், தலையிலே கொள்ளி, அது என்ன?விளிக்குத் திரி.😍😍😍😍😍😍ஆயிரம் பேர் அணிவகுத்தாலும் ஒரு தூசி கிளம்பாது. அவர்கள் யார்?எறும்புக்கூட்டம்.😍😍😍😍😍😍
(7 / 10)
காலில் தண்ணீர் குடிப்பான், தலையில் முட்டையிடுவான். அவன் யார்?தென்னை மரம்.😍😍😍😍😍😍சுற்றும்போது மட்டும் சுகம் தரும் அது என்ன?மின்விசிறி.😍😍😍😍😍😍கல்லுக்கும், முள்ளுக்கும் அஞ்சாதவன், நீரைக் கண்டு பதைபதைக்கிறான் அவர் யார்?நெருப்பு😍😍😍😍😍😍
(8 / 10)
மேலிழும் துவாரம், கீழும் துவாரம், இடத்திலும் துவாரம், வலத்திலும் துவாரம், உள்ளேயும் துவாரம், வெளியேயும் துவாரம். ஆனாலும் தண்ணீரை சேமித்து வைப்பேன். நான் யார்?பஞ்சு.😍😍😍😍😍😍கடலிலே கலந்து, கரையிலே பிரிந்து தெருவிலே திரியும் பூ. அது என்ன?உப்பு.😍😍😍😍😍😍கந்தல் துணி கட்டியவன் முத்து பிள்ளைகளை பெற்று மகிழ்ந்தான். அவன் யார்?சோளக்கதிர்.😍😍😍😍😍😍
(9 / 10)
கடலில் கலக்காத நீர், எவரும் குடிக்காத நீர். அது என்ன?கண்ணீர்.😍😍😍😍😍😍கத்திப்போல் இலை இருக்கும். கவரிமான் பூ பூக்கும், தின்ன பழம் கொடுக்கும். தின்னாத காய் கொடுக்கும். அது என்ன?வேம்பு.😍😍😍😍😍😍தொட்டுப்பார்க்கலாம். எட்டிப்பார்க்க முடியாது. அது என்ன?முதுகு.😍😍😍😍😍😍
மற்ற கேலரிக்கள்