தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  அரிசி கழுவிய தண்ணீர் மற்றும் சாதம் வடித்த கஞ்சி இந்த இரண்டு போதும்.. முடி சம்பந்தமான பிரச்சனை இருக்காது!

அரிசி கழுவிய தண்ணீர் மற்றும் சாதம் வடித்த கஞ்சி இந்த இரண்டு போதும்.. முடி சம்பந்தமான பிரச்சனை இருக்காது!

May 30, 2024 10:15 AM IST Divya Sekar
May 30, 2024 10:15 AM , IST

  • கெமிக்கல் நிறைந்த ஷாம்பூவைப் பயன்படுத்தும்போது சிலருக்கு கூந்தல் வறண்டு போகும். அவர்கள் இந்த தண்ணீரை பயன்படுத்தினால், அது கூந்தலுக்கு நல்ல கன்டிஷனர் ஆகும்.

கருகரு நீண்ட கூந்தல் வேண்டுமெனில், அரிசி கழுவிய தண்ணீர் மற்றும் சாதம் வடித்த கஞ்சி இரண்டையும் சேர்த்து கூந்தலை அலசினால் போதும். அதுமட்டுமின்றி, கடும் முடி உதிர்வு கூட சரியாகிவிடும். கூந்தல் அடர்த்திக்கும் உதவும்.

(1 / 8)

கருகரு நீண்ட கூந்தல் வேண்டுமெனில், அரிசி கழுவிய தண்ணீர் மற்றும் சாதம் வடித்த கஞ்சி இரண்டையும் சேர்த்து கூந்தலை அலசினால் போதும். அதுமட்டுமின்றி, கடும் முடி உதிர்வு கூட சரியாகிவிடும். கூந்தல் அடர்த்திக்கும் உதவும்.(Freepik)

அரசி தண்ணீரை தேவையான அளவு எடுத்து எலுமிச்சை சாறு கலந்து நன்றாக கலந்து தலைமுடியின் வேர்க்கால்களில் தடவிக்கொள்ளலாம். பின்னர் அரை மணிநேரம் ஊறவிட்டு, மிருதுவான ஷாம்பூவைப் பயன்படுத்தி அலசினால் தலையில் உள்ள பொடுகு நீங்கும்.

(2 / 8)

இந்த தண்ணீரில், நெல்லிக்காய்ப்பொடியை கலந்து தலைமுடியின் வேர்க்கால்களில் படும் அளவு தடவிவிட்டு அரை மணிநேரம் ஊறவிட்டு, ஷாம்பு பயன்படுத்தினால் இளநரை குறையும்.

(3 / 8)

இந்த தண்ணீரில், நெல்லிக்காய்ப்பொடியை கலந்து தலைமுடியின் வேர்க்கால்களில் படும் அளவு தடவிவிட்டு அரை மணிநேரம் ஊறவிட்டு, ஷாம்பு பயன்படுத்தினால் இளநரை குறையும்.

வாரத்தில் இரண்டு முறை மட்டும் இந்த டிப்ஸ் பயன்படுத்த வேண்டும். அப்போது முடி உதிர்வும் இருக்காது. தலைமுடிக்கு நல்ல கண்டிஷ்னராக இருக்கும்

(4 / 8)

வாரத்தில் இரண்டு முறை மட்டும் இந்த டிப்ஸ் பயன்படுத்த வேண்டும். அப்போது முடி உதிர்வும் இருக்காது. தலைமுடிக்கு நல்ல கண்டிஷ்னராக இருக்கும்(Freepik)

இந்த தண்ணீரில் வைட்டமின் இ எண்ணெயை எடுக்காமல், வெறும் அரிசி கழுவிய தண்ணீரை மட்டும் எடுக்கவேண்டும். நீங்கள் உப்பு தண்ணீரில் தலைக்கு குளிக்கும்போது, கடைசியாக அரிசி கழுவிய தண்ணீரை தலைக்கும் குளித்து முடித்தவுடன் கடைசியாக தலையில் ஊற்றிவிடவேண்டும். பின்னர் ஒரு கப் மட்டும் சாதாரண தண்ணீர் ஊற்றி கழுவிவிடவேண்டும். இது உப்புத்தண்ணீரால் ஏற்படும் கூந்தல் சேதத்தைப் போக்கும்.

(5 / 8)

இந்த தண்ணீரில் வைட்டமின் இ எண்ணெயை எடுக்காமல், வெறும் அரிசி கழுவிய தண்ணீரை மட்டும் எடுக்கவேண்டும். நீங்கள் உப்பு தண்ணீரில் தலைக்கு குளிக்கும்போது, கடைசியாக அரிசி கழுவிய தண்ணீரை தலைக்கும் குளித்து முடித்தவுடன் கடைசியாக தலையில் ஊற்றிவிடவேண்டும். பின்னர் ஒரு கப் மட்டும் சாதாரண தண்ணீர் ஊற்றி கழுவிவிடவேண்டும். இது உப்புத்தண்ணீரால் ஏற்படும் கூந்தல் சேதத்தைப் போக்கும்.(Freepik)

தலையில் எண்ணெய் இருந்தால், இந்த தண்ணீரை மட்டும் தடவி முடியின் வேர்க்கால்கள் மற்றும் தலைமுடி முழுவதும் தடவிவிட்டு அரை மணி நேரம் ஊறவிட்டு, மிருதுவான ஷாம்பூ தேய்த்து குளிக்கலாம்.

(6 / 8)

தலையில் எண்ணெய் இருந்தால், இந்த தண்ணீரை மட்டும் தடவி முடியின் வேர்க்கால்கள் மற்றும் தலைமுடி முழுவதும் தடவிவிட்டு அரை மணி நேரம் ஊறவிட்டு, மிருதுவான ஷாம்பூ தேய்த்து குளிக்கலாம்.

இந்த தண்ணீரை கொஞ்சம் மட்டும் எடுத்து லைட்டாக வேர்க்கால்களில் தடவிவிட்டு, இரவு முழுவதும் ஊறவிடலாம். இரவு படுக்கச்செல்லும் முன் பயன்படுத்தலாம். ஈரப்பதம் நிறைய இருக்கக்கூடாது என்பதற்காக கொஞ்சம் மட்டுமே தடவிக்கொள்ளவேண்டும்.

(7 / 8)

இந்த தண்ணீரை கொஞ்சம் மட்டும் எடுத்து லைட்டாக வேர்க்கால்களில் தடவிவிட்டு, இரவு முழுவதும் ஊறவிடலாம். இரவு படுக்கச்செல்லும் முன் பயன்படுத்தலாம். ஈரப்பதம் நிறைய இருக்கக்கூடாது என்பதற்காக கொஞ்சம் மட்டுமே தடவிக்கொள்ளவேண்டும்.(Pixabay)

அரிசி கழுவிய தண்ணீர் மற்றும் சாதம் வடித்த தண்ணீர் இரண்டிலும் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளது. இதில் உள்ள சத்துக்கள் நேரடியாக நமது தலைமுடிக்கு நேரடியாகச் செல்லும். நாம் உண்ணும் உணவில் இருந்துகூட நேரடியாகச் செல்லுமா என்பது சந்தேகம்தான். ஆனால் இது கட்டாயம் ஊட்டமளிக்கும். இது எளிதாக வீட்டில் செய்யக்கூடிய முறைதான் எனவே கட்டாயம் முயற்சி செய்து பலன்பெறுங்கள்.

(8 / 8)

டி20 உலகக் கோப்பை 2024

மற்ற கேலரிக்கள்