Relationship : ஒரு உறவில் இருப்பதன் கடினமாக பகுதி எது என்று தெரியுமா? அதை கடக்கும் வழிகளும் இதோ!
- Relationship : ஒரு உறவில் இருப்பதன் கடினமாக பகுதி எது என்று தெரியுமா? அதை கடக்கும் வழிகளும் இதோ!
- Relationship : ஒரு உறவில் இருப்பதன் கடினமாக பகுதி எது என்று தெரியுமா? அதை கடக்கும் வழிகளும் இதோ!
(1 / 10)
ஒரு உறவில் இருப்பதன் கடினமான பகுதி எது என்று தெரிந்துகொண்டு அதை எவ்வாறு கடப்பது என்று பாருங்கள்.
(2 / 10)
ஒரு உறவில் இருப்பதன் கடினமான பகுதி - இந்த சவாலை பொறுமை, அனுதாபம், திறந்த உரையாடல் ஆகியவற்றுடன் எதிர்கொள்ளவேண்டும். தம்பதிகள் அவர்களின் பிணைப்பை வலுவாக்கவும், அவர்கள் அதிக மீள்திறன் பெற்றவர்களாவதற்கும் ஆவதற்கும் உதவுகிறது. இது அவர்களின் உறவை முழுமைப்படுத்தும்.
(3 / 10)
இருவருடனான உரையாடலில் பிரச்னைகள் - இருவருடனான உரையாடலில் உள்ள பிரச்னைகள், நீங்கள் இருவரும் திறந்த மனதுடன் உரையாடதது, புரிதலின்மை அல்லது உணர்வுகள் மற்றும் தேவைகளை போதிய அளவு வெளிப்படுத்தாததால் ஏற்படுகிறது. இவற்றை தீர்க்க, ஒருவர் மற்றவரை நன்றாக கவனிக்கவேண்டும். திறந்த மனதுடன் உரையாட வேண்டும். நேர்மை மற்றும் நான் செய்த தவறுகள் என ஒப்புக்கொள்ளும் மனப்பான்மை இருக்கவேண்டும். இவையனைத்தையும் நீங்கள் சரியான பின்பற்றும்போது உங்கள் உறவு வலுப்பெறும்.
(4 / 10)
நம்பிக்கை பிரச்னைகள் - கடந்த கால ஏமாற்றங்கள் அல்லது தனிப்பட்ட பாதுகாப்பின்மை போன்ற பிரச்னைகளால், ஒருவரையொருவர் நம்புவதில் பிரச்னைகள் ஏற்படுகிறது. இதை நீங்கள் எதிர்கொள்ளவேண்டுமெனில், நம்பிக்கை மீண்டும் ஏற்பட வேண்டுமெனில், நேரம் மற்றும் தொடர்ச்சியான முன்னெடுப்புகளால் சாத்தியமாகிறது. வெளிப்படைத்தன்மை, வாக்குறுதிகளை நிறைவேற்றுவது மற்றும் அர்ப்பணிப்பை உறுதிசெய்வது, நம்பிக்கையை உறவில் மீண்டும் வளர்ப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
(5 / 10)
வாக்குவாதங்கள் மற்றும் சண்டை - வாக்குவாதங்கள் மற்றும் சண்டை தம்பதிகளுக்கு இடையில் பொதுவான ஒன்றுதான். ஆனால் உணர்வு ரீதியாக அவற்றை கையாள வேண்டும். இல்லாவிட்டால் பிரச்னையை ஏற்படுத்ததும். சண்டை எற்படும்போது ஆரோக்கியமாக பிரச்னைகளுக்கு முடிவுகளை எட்டும் திறனை வளர்த்துக்கொள்ளவேண்டும். பிரச்னையில் கவனம் செலுத்தவேண்டும். தனிப்பட்ட தாக்குதல் நடத்தக்கூடாது. நீங்கள் சமரசத்துக்கு தயார் என்பதை உணர்த்தவேண்டும். அது நீங்கள் பிரச்னைகள் குறித்து மேலும் உரையாட நடத்தி முடிவை எட்ட உதவும்.
(6 / 10)
உணர்வு ரீதியான நெருக்க சவால்கள் - உணர்வு ரீதியான நெருக்க சவால்கள் எப்போதும், உறவுகளில் இருந்து விலகல் அல்லது பிரிதலுக்கு வழிவகுக்கும். எனவே இதுகுறித்து விளக்க, தரமான உரையாடலை நடத்தவேண்டும். உங்கள் உணர்வுகளை வெளிப்படையாக பகிரவேண்டும் மற்றும் உங்களுக்குள் இணக்கத்தை உருவாக்க உதவும் நடவடிக்கைகளை முன்னெடுங்கள். இது உங்கள் பார்ட்னருடன் பிணைப்பை வலுப்படுத்த உதவும்.
(7 / 10)
பொறாமை மற்றும் பாதுகாப்பின்மை - பொறாமை மற்றும் பாதுகாப்பின்மை, உங்களுகு டென்சனை ஏற்படுத்தும். அதற்கு தீர்வு காண தன்னம்பிக்கை, வெளிப்படையான உரையாடல் மற்றும் உங்கள் பார்ட்னருக்கு வாக்குறுதி அளிப்பது என நம்பிக்கை வளர்க்கும் விஷயங்களை முன்னெடுக்கவேண்டும். இது உறவில் தேவையற்ற பயம் மற்றும் பதற்றத்தை குறைக்க உதவும்.
(8 / 10)
சுதந்திரம் மற்றும் ஒன்றாக இருத்தல் இரண்டுக்கும் சமஅளவு நேரம் - சுதந்திரம் மற்றும் ஒன்றிணைதல் என்பது தந்திரமான ஒன்று. இதற்கு தெளிவான எல்லைகளை வகுக்கவேண்டும். மேலும் ஒருவரின் தனிப்பட்ட விருப்பங்கள் மற்றும் நேரம், பகிர்தல் என அனைத்துக்கும் மதிப்பு கொடுக்கவேண்டும். உறவில் இருவருக்கும் தனியான இடம் மற்றும் தரமான நேரத்தை ஒன்றாக செலவிடுவது என உங்கள் உறவில் நல்ல இணக்கமான நிலையை ஏற்படுத்த உதவும்.
(9 / 10)
நீண்ட நாள் உறவு சலிப்பு - நீண்ட நாள் உறவில் சலிப்பு என்பது கட்டாயம் ஏற்படும். ஆரம்ப காலத்தில் இருந்த ஆர்வங்கள் குறைந்துவிடும். அதற்கான தீர்வாக, நல்ல நெருக்கத்தை ஆச்சர்யங்களைக் கொடுத்து வளர்த்துக்கொள்ளவேண்டும். புதிய அனுபவங்கள், பகிரப்பட்ட இலக்குகள் என புதுப்பித்துக்கொண்டே இருக்கவேண்டும். உங்கள் உறவை வலுப்படுத்தவும், உறவில் ஆச்சரியங்களை கொண்டு வரவும் உதவும்.
(10 / 10)
மாறுபட்ட வாழ்க்கை இலக்குகள் - மாறுபட்ட வாழ்க்கை இலக்குகள் மற்றும் எதிர்பார்ப்புகள் உறவை பாதிக்கும். இதற்கு தீர்வு காண உங்களிடையே அடிக்கடி உரையாடல் தேவை. தனிப்பட்டவர்களின் இலக்குகளை பகிர்ந்துகொள்ளவேண்டும். தேவைப்படும்போது, அவர்கள் சமரசம் செய்துகொள்ளவும் தயாராக இருக்கவேண்டும். உறவில் இணக்கத்தை ஏற்படுத்த வாழ்க்கை திட்டங்களை வகுக்கவேண்டும். இதனால் உங்கள் உறவு வலுப்பெறும்.
மற்ற கேலரிக்கள்