Relationship : காதல் உறவில் உங்கள் பார்ட்னர் பொய் உரைக்கிறாரா என்று கண்டுபிடிப்பது எப்படி? உளவியல் வழிகாட்டி!
- Relationship : காதல் உறவில் உங்கள் பார்ட்னர் பொய் உரைக்கிறாரா என்று கண்டுபிடிப்பது எப்படி? உளவியல் வழிகாட்டி!
- Relationship : காதல் உறவில் உங்கள் பார்ட்னர் பொய் உரைக்கிறாரா என்று கண்டுபிடிப்பது எப்படி? உளவியல் வழிகாட்டி!
(1 / 11)
பொய் உரைப்பவரை கண்டுபிடிப்பது எப்படி? - ஒருவர் பொய்யுரைக்கிறார் என்பதை கண்டுபிடிப்பது சவாலான ஒன்றுதான். அதிலும் காதல் உறவில் உங்கள் பார்ட்னர் பொய்யுரைக்கிறாரா என்பதை கண்டுபிடிப்பது மிகவும் கடினமான ஒன்றுதான். குறிப்பாக நீங்கள் 100 சதவீதம் நம்பும் ஒருவர் பொய்யுரைக்க மாட்டார் என நம்பும்போது, அவர் உரைக்கும் பொய்களை கண்டுபிடிப்பது மிகவும் கடினம். ஒருவரின் நேர்மையை தொடர்ந்து கேள்வி கேட்டு நீங்கள் சோர்ந்துவிட்டீர்கள் என்றால், நாங்கள் உங்களுக்கு ஒரு தீர்வு தருகிறோம். உளவியல் நிபுணர்கள் உங்களுக்கு பொய்யுரைப்பவர்களை கண்டுபிடிக்கும் வழிகளை சுட்டிக்காட்டுகிறார்கள்.
(2 / 11)
சீரற்ற நடவடிக்கைகள் - ஒருவர் பொய்யுரைக்கும்போது, அவர்கள் கூறும் கதைகள் மற்றும் விவரங்களை விளக்கும்போது, அவர்களிடம் ஒரு சீரற்ற தன்மை இருக்கும். தொடர்ந்து தெளிவாக இருக்காது. தொடர்ந்து கேள்விகள் கேட்டால் அவர்கள் குழம்பி விடுவார்கள். தொடர்ந்து தவறிழைப்பார்கள்.
(3 / 11)
இயல்பில்லாத நடத்தைகள் - அவர்களின் குணங்கள், இயல்பில்லாமல் இருக்கும். அவர்களின் உடல் மொழி வித்யாசமானதாக இருக்கும். அவர்கள் கண்களை பார்த்து பேசமாட்டார்கள். அவர்கள் நிற்கும் நிலையே சரியாக இருக்காது.
(4 / 11)
மைக்ரோ எக்ஸ்பிரசன்கள் - மைக்ரோ எக்ஸ்பிரசன்கள், முகப்பாவங்கள் என அவர்கள் தேவையற்ற எக்ஸ்பிரசன்கள் காட்டுவார்கள். அது அதிக அர்த்தம் நிறைந்ததாக இருக்கும். வார்த்தைகளுக்கும், அவர்களின் எக்ஸ்பிரசன்ஸ்களுக்கும், வார்த்தைகளுக்கும் இடையில் வித்யாசம் இருக்கும். அவர்களிடம் உண்மையான உணர்வுகள் இருக்காது. எடுத்துக்காட்டாக, நாங்கள் சோகமாக இருக்கிறோம் என்று கூறுவார்கள். ஆனால் முகத்தில் கோவ உணர்வைக் காட்டுவார்கள்.
(5 / 11)
குரலில் மாற்றம் - பொய் உரைப்பவர்கள் குரலில், மாற்றங்கள் இருகுகும். அவர்கள் எப்போதும் பரபரப்பாகக் காணப்படுவார்கள். மனஅழுத்தத்தில் இருப்பார்கள். இந்த மாற்றங்கள் சிறியது ஆனால், அவர்களின் அசவுகர்யங்கள் குரலில் வெளிப்படையாகவே தெரியும். அவர்கள் மற்றவர்களை ஏமாற்றுகிறார்கள் என்பதையும் கண்டுபிடித்துவிட முடியும்.
(6 / 11)
குறிப்பிட்ட விஷயங்களை மட்டும் தவிர்ப்பது - பொய் மட்டுமே பேசுபவர்கள், தீவிரமாக சம்மந்தமில்லாமல் பேசுபவராக இருப்பார்கள். அவர்களின் பதில்கள் சரியானதாக இருக்காது. அவர்கள் குறிப்பிட்ட விளக்கங்களை வேண்டுமென்றே தவிர்ப்பார்கள். பிடிபட்டுவிடாமல் இருக்க அனைத்து முயற்சிகளையும் எடுப்பார்கள்.
(7 / 11)
அதிக விளக்கம் - அவர்கள் மறைத்து பேசினாலும், குறைவான விளக்கங்கள் கொடுத்தால், தேவையில்லாத விஷயங்களை பெரிதாக்கிக்கொண்டிருப்பார்கள். அதை வைத்து அந்த விஷயத்தை பெரிதாக்குவார்கள். உளறுவார்கள், தேவையற்ற தகவல்களையெல்லாம் தருவார்கள். அவர்களின் கதையை நம்பவைக்க என்னவேண்டுமானாலும் செய்வார்கள். அதற்கான விளக்கங்கள் விரிவாக இருக்கும்.
(8 / 11)
நேரமும், தாமதமும் - ஒருவர் பொய்யுரைத்தால், அவர்கள் விரைவாக பதில் அளிக்கமாட்டார்கள். தாமப்படுத்துவார்கள். அவர்கள் மற்றவர்களை நம்பவைக்க கதைகள் கூறவேண்டும் என யோசிப்பதால் இந்த தாமதம் ஏற்படுகிறது.
(9 / 11)
அடிப்படை நடத்தை - உங்களுக்கு நன்றாக தெரிந்தவர், அவர்களின் நடவடிக்கைகள் உங்களுக்கு நன்றாகவே தெரியும் என்றால், அவர்கள் பொய் உரைக்கிறார்களா என்பதை எளிதாக கண்டுபிடித்துவிடலாம். ஏனெனில் அவர்கள் பொய் உரைக்கும்போது, அவர்களின் நடவடிக்கைகள் முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும்.
(10 / 11)
முரண்பாடு - பொய் உரைப்பவர்களின் நடத்தைக்கும், வார்த்தைகளுக்கும் மத்தியில் வேறுபாடுகள் இருக்கும். அதை நன்றாக உற்று கவனித்தால் அதில் ஒரு தொடர்ச்சியின்மை நிலவும், இது அவர்கள் பொய் உரைக்கிறார்கள் என்பதை கண்டுபிடிக்க உதவும்.
மற்ற கேலரிக்கள்