Relationship : திருமணத்துக்குப் பின் வாழ்க்கை எப்படியிருக்கும் தெரியுமா? இத்தனை சுவாரஸ்யங்கள் நிறைந்ததா?
- Relationship : திருமணத்துக்குப் பின் வாழ்க்கை எப்படியிருக்கும் தெரியுமா? இத்தனை சுவாரஸ்யங்கள் இருக்குமா?
- Relationship : திருமணத்துக்குப் பின் வாழ்க்கை எப்படியிருக்கும் தெரியுமா? இத்தனை சுவாரஸ்யங்கள் இருக்குமா?
(1 / 9)
திருமணம் எனும் பந்தம் - ஒரு சிலருக்கு திருமணம் என்பது ஒரு நல்ல வாழ்க்கையாக அமையும். ஆனால் சிலருக்கு அதுவே நரகமாகிவிடும். திருமணம் எண்ணற்ற நன்மைகளைக் கொடுக்கிறது. அவை என்னவென்று தெரிந்துகொண்டால் நீங்கள் சிங்கிளாக இருந்தால், உடனே திருமணத்துக்கு ஒகே சொல்லிவிடுவீர்கள். உங்கள் திருமண வாழ்க்கையை மகிழ்ச்சியாக்க நீங்கள் செய்யவேண்டியது என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.
(2 / 9)
உணர்வு ரீதியிலான உறுதுணை - திருமணம், ஆழ்ந்த உணர்வுகளையும், ஓரு உற்ற துணையையும் கொண்டுவருகிறது. தம்பதிகள், ஒருவருக்கொருவர் உற்ற துணையாக இருக்கும்போது, அது உங்களுக்குள் வாழ்க்கை மீதான நம்பிக்கையை அதிகரிக்கிறது. புரிதல், தேவை ஏற்படும்போது, சவுகர்யங்களை அவர்களுக்கு கொடுப்பது, உறுதி என ஒருவருக்கு பல்வேறு நன்மைகளைக் கொடுக்கிறது.
(3 / 9)
பகிரப்பட்ட பொறுப்புகள் - வீட்டு வேலைகளை பகிர்ந்துகொள்வது, பொறுப்புடன் நடந்துகொள்வது என வீட்டில் ஒரு சமமான சூழலை உருவாக்க திருமணம் வழிவகுக்கிறது. பார்ட்னர்களுக்கு பகிரப்பட்ட கடமைகள் இருப்பதால், ஒருவரின் மனஅழுத்தம் குறைகிறது. இது குழு வேலைகளையும் ஊக்குவிக்கிறது.
(4 / 9)
நிதி - இருவரும் சம்பாதிக்கும்போது, இருவரின் ஊதியத்தையும் வைத்து ஒரு சிறந்த வாழ்க்கை வாழ முடிகிறது. அந்த நிதியில் திட்டமிடல், மேலாண்மை என அனைத்துக்கும் வழிவகுக்கிறது. அவர்கள் தங்களின் வளங்களையெல்லாம் ஒன்று திரட்டி, இணைந்த இலக்குகளை நிர்ணயித்து, ஒருவருக்கொருவர் உறுதுணையாக இருந்து, சாதிக்க உதவுகிறது. இதனால் பொருளாதார நிலையும் உயருகிறது. குடும்பத்தில் ஒரு நிலைத்தன்மை மற்றும் பாதுகாப்புத்தன்மை ஏற்படுகிறது.
(5 / 9)
தனிப்பட்ட வளர்ச்சி - திருமணத்தில் தனிப்பட்ட வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் ஊக்குவிக்கப்படுகிறது. கணவன் – மனைவி இருவரும் ஒவ்வொருவரின் இலக்குகளுக்கு உறுதுணையாக இருக்க முடியும். சவால்களை இணைந்து சந்திக்கும்போது, இருவருக்கும் நம்பிக்கை கிடைக்கிறது. ஒவ்வொருவரின் தனிப்பட்ட இலக்குகளை அடைய ஊக்கம் அளிக்கப்படுகிறது.
(6 / 9)
குடும்ப உறவுகள் வலுவடைகிறது - குடும்ப உறவுகளுடனான உறவை திருமணங்கள் விரிவுபடுத்துகின்றன. இது ஒற்றுமை, இணைந்திருத்தல் போன்றவற்றை வளர்க்கிறது. குடும்ப நிகழ்வுகளில் பாரம்பரியத்தை அறிவுறுத்துகிறது. அர்த்தமுள்ள மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கையை உருவாக்குகிறது.
(7 / 9)
ஆரோக்கிய மேம்பாடு - திருமணம் செய்துகொண்டவர்களுக்கு நல்ல ஆரோக்கியமான உடல் உள்ளது என்றும் அவர்களின் மன ஆரோக்கியமும் சிறப்பாக உள்ளது. ஒருவருக்கொருவர் கிடைக்கும் உணர்வுப்பூர்வமான ஆதரவு, உறுதுணை மற்றும் அக்கறை இருவரின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்துக்கும் வழிவகுக்கிறது.
(8 / 9)
பகிரப்பட்ட வாழ்வு - தம்பதிகளுக்கு பகிரப்பட்ட சமூக உறவுகள் கிடைக்கிறது. இருவரும் அவர்களின் நண்பர்களை தங்களின் நண்பர்களாக்கிக் கொள்கிறார்கள். இதனால் அவர்களின் சமூக உறவுகள் அதிகரிக்கிறது. இது அவர்களின் சமூக வாழ்வை நிறைவானதாக மாற்றுகிறது. இதனால் அவர்களின் மகிழ்ச்சி இரட்டிப்பாகிறது.
(9 / 9)
நிலைத்தன்மை அதிகரிப்பு - திருமணம், பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மையைக் கொடுக்கிறது. அவர்களுக்கு சாய்ந்துகொள்ள ஒரு தோள் இருப்பது அவர்களுக்கு யானை பலத்தை கொடுக்கிறது. இது அவர்களின் மனஅழுத்தத்தைக் குறைக்கிறது. வாழ்நாள் முழுவதும் அவர்கள் ஒன்றிணைந்து இருப்பது அவர்களுக்கு நிலையான வாழ்க்கை கிடைக்க வழிவகுக்கிறது. இது அவர்களின் வாழ்வுக்கு அடித்தளம் அமைக்கிறது.
மற்ற கேலரிக்கள்