தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Reduce Cortisol : மன அழுத்த ஹார்மோன் கார்டிசால்! உங்கள் உடலில் சுரப்பதை குறைக்கும் இயற்கை உணவுகள் இவைதான்!

Reduce Cortisol : மன அழுத்த ஹார்மோன் கார்டிசால்! உங்கள் உடலில் சுரப்பதை குறைக்கும் இயற்கை உணவுகள் இவைதான்!

May 25, 2024 05:29 PM IST Priyadarshini R
May 25, 2024 05:29 PM , IST

  • Reduce Cortisol : மன அழுத்த ஹார்மோன் கார்டிசால்! உங்கள் உடலில் சுரப்பதை குறைக்கும் இயற்கை உணவுகள் இவைதான்!

உங்கள் உடலில் அதிகளவில் கார்டிசால் சுரந்தால், அது உங்களுக்கு பல்வேறு ஆரோக்கிய குறைபாடுகளை ஏற்படுத்தும். மனஅழுத்தம், பயம், பதற்றம் மற்றும் உடல் எடை அதிகரிப்பு என பல்வேறு பிரச்னைகளை அதிகரிக்கும். கார்டிசால் என்பது, மனஅழுத்தத்தை ஏற்படுத்தக்கூடிய ஹார்மோன் ஆகும். உங்கள் உடலில் கார்டிசால் அதிகம் சுரப்பதை கட்டுப்படுத்தும், இயற்கை உணவுகளை தெரிந்துகொள்ளுங்கள்.

(1 / 11)

தினமும் 4 முதல் 5 பாதாமை உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள். அது உங்கள் மனஅழுத்தத்தை குறைப்பதில் பல அதிசயங்களைச் செய்யும். பாதாமில் மெக்னீசியச்சத்துக்கள் அதிகம் உள்ளது. அது உங்கள் உடலில் சுரக்கும் கார்டிசாலின் அளவை முறையாக பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. மெக்னீசியம், உங்கள் உடலில் கார்டிசால் சுரக்கும் அளவை குறைக்கும் என்பதை அமெரிக்க ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன.

(2 / 11)

70 சதவீதம் டார்க் சாக்லேட் அல்லது கோகோ அதிகம் உள்ள சாக்லேட்கள் உங்கள் உடலில் கார்டிசால் சுரப்பதை கட்டுப்படுத்தும். இரண்டு வாரங்கள் தொடர்ந்து டார்க் சாப்லேட்கள் எடுத்துக்கொள்ளும்போது அது உங்கள் உடலில் கார்டிசால் சுரக்கம் அளவைக் கட்டுப்படுத்துகிறது. எனவே உங்களுக்கு அதிகம் மனஅழுத்தம் உள்ளதாக உணர்ந்தால் கட்டாயம் டார்க் சாக்லேட்களை எடுத்துக்கொள்ளுங்கள். ஆனால் நாளொன்றுக்கு 20 முதல் 30 கிராம் அளவைவிட அதிகம் சாப்பிடவேண்டாம்.

(3 / 11)

ஒரு கப் கீரையில் (மெக்னீசியச்சத்துக்கள் அதிகம் கொண்டது) உங்களின் தினசரி மனஅழுத்தத்தை போக்கும் அளவுக்கு தேவையான ஹார்மோன் சுரக்கச்செய்யும் தன்மை உள்ளது. எனவே நீங்கள் தினமும் ஒரு கப் கீரை எடுத்துக்கொண்டால் உங்களின் மனஅழுத்தம் குறையும்.கலிஃபோர்னியா பல்கலைக்கழக ஆய்வில், மெக்னீசிய குறைபாடுதான் மனஅழுத்தம் அதிகரிக்க காரணமாகிறது என்று குறிப்பிடுகிறது. எனவே உங்களின் மனஅழுத்தத்தை போக்கிக்கொள்ள கீரையை உங்கள் உணவில் அதிகம் சேர்த்துக்கொள்வது அவசியம்.

(4 / 11)

சிக்கனில் உள்ள அமினோ அமிலங்கள் உங்கள் உடலில் தசை மண்டலத்தை பராமரிக்க உதவுகிறது. இது செரோட்டினின் உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது. இந்த ஹார்மோன் கார்டிசோலை எதிர்த்து போராட உதவுகிறது. அதிகளவில் புரதச்சத்தை எடுத்துக்கொள்வது உங்கள் உடலில் மனஅழுத்ததைக் குறைப்பதற்கான மருந்தாக உள்ளது. மனஅழுத்தத்துக்கு எதிராக உங்கள் உடல் செயல்பட புரதம் உதவுகிறது. சிக்கனில் ஒரு 100 கிராம் மட்டும் போதும்.

(5 / 11)

பூண்டில் அலிசின் என்ற உட்பொருள் உள்ளது. இது உங்கள் உடலில் கார்டிசால் சுரக்கும் அளவை கட்டுப்படுத்துகிறது. பூண்டு பயன்படுத்தி தயாரிக்கப்படும் மாத்திரைகளைப் பயன்படுத்தும்போது உடலில் கார்டிசாலின் அளவு குறைகிறது. அது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. தினமும் 4 கிராம் அளவு பூண்டு சாப்பிடவேண்டும். அது உங்கள் உடலில் அன்றாடம் சுரக்கும் கார்டிசாலின் அளவைக் கட்டுப்படுத்துகிறது.அதனால்தான் தினமும் இரவு பருகும் பாலில் பூண்டு மற்றும் பனங்கற்கண்டு சேர்த்து பருகவேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. அது இரவு உறக்கத்தை மேம்படுத்துகிறது.

(6 / 11)

ப்ரோகோலியில் வைட்டமின் சி சத்துக்கள் உள்ளது. இது உடலில் கார்டிசால் அளவை குறைக்க உதவுகிறது. எனவே உங்கள் உணவில் அடிக்கடி ப்ரோகோலியை சேர்த்துக்கொள்ளும்போது, அது உங்கள் உடலுக்கு தேவையான வைட்டமின் சியை வழங்குகிறது. இது உங்கள் உடல் மனஅழுத்தத்தை எதிர்த்து போராடும். வைட்டமின் சி கார்டிசால் சுரப்பதை கட்டுப்படுத்தும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

(7 / 11)

கிரீன் டீயில் எல்-தியானைன் உள்ளது, இது ஒரு அமினோ அமிலம் ஆகும். அது மனஅமைதியை ஏற்படுத்துகிறது. மனஅழுத்தத்தை குறைக்கிறது. எல்-தியானைன் கார்டிசால் அளவைக் குறைத்து நல்ல மனநிலையை அதிகரிக்கும் என்று அமெரிக்க ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன.

(8 / 11)

ரத்த சர்க்கரை அளவை குறைப்பதில், சிவப்பு அரிசி பெரும் பங்கு வகிக்கிறது. இதில் உள்ள அதிகளவிலான கார்போஹைட்ரேட்கள் அதற்கு உதவுகின்றன. இது உங்கள் உடலில் கார்டிசால் சுரக்கு அளவைக் கட்டுப்படுத்துகிறது. எனவே உங்கள் உணவில் அடிக்கடி சிவப்பு அரிசியையும் சேர்த்துக்கொள்ளுங்கள். அது உங்கள் உடலில் கார்டிசால் அளவை முறையாக பராமரிக்க உதவும்.

(9 / 11)

ஆலிவ் எண்ணெய், குறிப்பாக எக்ஸ்ட்ரா ஆலிவ் எண்ணெயில் ஆரோக்கியமான கொழுப்புகள் அதிகம் உள்ளது. அது உடலில் வீக்கத்தை குறைக்க உதவுகிறது. உங்கள் உடலில் கார்டிசால் அளவை கட்டுக்குள் வைக்கவும் செய்கிறது. ஆலிவ் எண்ணெய் அதிகம் கொண்ட உணவுகளில் கார்டிசால் அளவுகளை குறைக்க உதவுகிறது. இதனால் உங்கள் உடலில் மனஅழுத்தம் தொடபான அறிகுறிகளையும் போக்குகிறது.

(10 / 11)

வாழைப்பழத்தில் பொட்டாசியம் மற்றும் வைட்டமின் பி 6 அதிகம் உள்ளது. இது கார்டிசால் அளவை முறைப்படுத்த உதவுகிறது. எனவே தினமும் ஒரு வாழைப்பழத்தை நீங்கள் கட்டாயம் சாப்பிடவேண்டும். இதனால் உங்கள் உடலில் மனஅழுத்தத்தைக் கொடுக்கும் ஹார்மோன்கள் சுரப்பதை அது கட்டுப்படுத்த உதவுகிறது. இதில் உள்ள பொட்டாசியம் மனஅழுத்தத்தை குறைத்து இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது.

(11 / 11)

டி20 உலகக் கோப்பை 2024

மற்ற கேலரிக்கள்