RB Udayakumar: ஆர்.பி.உதயகுமாரை குண்டுக்கட்டாக கைது செய்த போலீஸ்..மதுரையில் உச்சகட்ட பரபரப்பு!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Rb Udayakumar: ஆர்.பி.உதயகுமாரை குண்டுக்கட்டாக கைது செய்த போலீஸ்..மதுரையில் உச்சகட்ட பரபரப்பு!

RB Udayakumar: ஆர்.பி.உதயகுமாரை குண்டுக்கட்டாக கைது செய்த போலீஸ்..மதுரையில் உச்சகட்ட பரபரப்பு!

Jul 30, 2024 01:06 PM IST Karthikeyan S
Jul 30, 2024 01:06 PM , IST

  • RB Udayakumar Arrest: மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கப்பலூர் பகுதியில் தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் 2012-ம் ஆண்டு சுங்கச்சாவடி அமைக்கப்பட்டது. இந்த சுங்கச்சாவடியில் உள்ளூர் வாகனங்களை கட்டணமின்றி அனுமதிப்பது தொடர்பாக தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டங்களை அப்பகுதி மக்கள் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்றக்கோரி அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் அதிமுகவினர் சாலையில் அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசாருக்கும் அதிமுகவினருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து முற்றுகையில் ஈடுபட்ட ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்துள்ளனர். கப்பலூர் சுங்கச்சாவடி முழுவதும் காவல்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.

(1 / 6)

ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், "தென் தமிழகத்தில் நுழைவாயிலாக கப்பலூர் டோல்கேட் விதிமுறையை மீறி கடந்த 2010 ஆண்டு அமைக்கப்பட்டது.இதனை தொடர்ந்து கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் உள்ளூர் மக்களுக்கு சுங்கச்சாவடியில்  கட்டண முழு விதிவிலக்கு அளிக்கப்பட்டது.

(2 / 6)

தற்போது 2021ம் ஆண்டிலிருந்து கட்டண விதிமுறை தளர்த்தப்பட்டது. தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. மேலும் சுங்கச்சாவடி அபதார கட்டண நோட்டீஸ் விடப்பட்டு ரூ. 2 லட்சம் முதல் ரூ.20 இலட்சம் வரை அபதார கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது .

(3 / 6)

கடந்த 2021 ஆண்டில் அப்போது எதிர்க்கட்சி தலைவவராக இருந்த ஸ்டாலின் இப்பகுதிக்கு வந்த போது திமுக ஆட்சி மூன்று மாதங்களில் வந்துவிடும் அப்போது கப்பலூர் டோல்கேட் அகற்றப்படும் என்று கூறினார். அவர் கூறி மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டது. முதலமைச்சர் ஸ்டாலின் சொன்னதை அவரின் கவனத்திற்கு  எடுத்துச் செல்ல அறவழியில் உண்ணாவிரதம் இருக்க முயன்ற போது எங்களை கைது செய்துள்ளனர்.

(4 / 6)

எங்கள் கோரிக்கை எல்லாம் சட்டத்துக்கு புறம்பாக அமைக்கப்பட்ட கப்பலூர் டோல்கேட்டை நிரந்தரமாக வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும். அதேபோல் நிலுவை கட்டணம் என அனுப்பப்பட்ட லீகல் நோட்டீசை திரும்ப பெற வேண்டும் என்று போராடி வருகிறோம்.

(5 / 6)

தொடர்ந்து அதிமுக மக்களுக்காக போராடும். எத்தனை அடக்கமுடியை அரசு செய்தாலும் மக்களுக்காக போராடுவோம். இந்த அரசு மக்கள் உணர்வை மதிக்காத அரசாக உள்ளது எனக் கூறினார்.

(6 / 6)

மற்ற கேலரிக்கள்