Shadashtaka Yoga: உருவான ஷடாஷ்டக யோகம்.. மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய ராசிகள்
- கிரக மாற்றம் ராசியினர் இடையே பல்வேறு தாக்கங்களைத் தருகிறது. சனி, கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளுக்குப் பின் மூல திரிகோண ராசியான கும்பத்தில் பயணித்து வருகிறார். கேது பகவான், கன்னியில் சஞ்சரித்து வருகிறார்.
- கிரக மாற்றம் ராசியினர் இடையே பல்வேறு தாக்கங்களைத் தருகிறது. சனி, கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளுக்குப் பின் மூல திரிகோண ராசியான கும்பத்தில் பயணித்து வருகிறார். கேது பகவான், கன்னியில் சஞ்சரித்து வருகிறார்.
(1 / 6)
இதனால் இந்த ஷடாஷ்டக யோகம் உருவாகிறது. 6ஆம் வீட்டில் சனி பகவானும், 8ஆம் வீட்டில் கேதுவும் இருக்கும்போதுதான், இந்த ஷடாஷ்டக யோகம் உண்டாகிறது.
ஷடாஷ்டக யோகம், கெடு பலன்களையே தருகிறது. இதனால் 2024ஆம் ஆண்டு வரை எச்சரிக்கையாக இருக்கவேண்டிய ராசிகள் குறித்துக் காண்போம்.
(2 / 6)
ரிஷபம்: ஷடாஷ்டக யோகத்தால், இந்த ராசியினர் உடல் உபாதைகளில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஒரு விஷயத்தை ஓவராக போட்டு குழப்பிக்கொண்டு, மனவுளைச்சல் ஆகுவீர்கள். முதலீட்டைத் தவிர்க்க வேண்டும். வாயில் இருந்து இனிய சொற்களை மட்டுமே உபயோகிக்க வேண்டும். இல்லையென்றால் வில்லங்கம் உண்டாகும்.
(3 / 6)
விருச்சிகம்: ஷடாஷ்டக யோகத்தால், விருச்சிக ராசியினரின் வாழ்வில் எக்கச்சக்க பிரச்னைகள் உருவாகும். வாக்குவாதம் செய்வதை விருச்சிக ராசியினர் தவிர்ப்பது நல்லது. பணியில் கூடுதல் எச்சரிக்கையாக இருத்தல் வேண்டும். உடல் ஆரோக்கியத்தைப் பார்த்துக்கொள்ளலாம்.
(Freepik)(4 / 6)
மீனம்: ஷடாஷ்டக யோகத்தால் இந்த ராசியினர் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். பணியிடத்தில் உங்களுக்கு எதிரான சூழல் உருவாகும். எதிரிகள் முளைப்பர்.அப்போதும் பொறுமையாக இருக்க வேண்டும். அனைவரிடம் நிதானமாகப் பேசவேண்டும். வாக்குவாதம் வந்தால், அதைத்தவிர்த்துவிட்டுச் செல்வது நல்லது. விபத்து ஏற்பட வாய்ப்புண்டு.
(5 / 6)
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே.
மற்ற கேலரிக்கள்