Rahu - Mercury: மீன ராசியில் சஞ்சரிக்கும் ராகு - புதன் சேர்க்கை.. மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கவேண்டிய ராசிகள்!
- மீன ராசியில் ராகு பகவான் சஞ்சரித்து வரும் நிலையில், நுண்ணறிவைத் தரும் புதன் பகவான் மார்ச் 7ஆம் தேதி சேரவுள்ளதால் கெடுதலைத் தரும் ஜட யோகம் ஏற்பட்டுள்ளது. இதனால் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டிய ராசிகள் குறித்துக் காண்போம்.
- மீன ராசியில் ராகு பகவான் சஞ்சரித்து வரும் நிலையில், நுண்ணறிவைத் தரும் புதன் பகவான் மார்ச் 7ஆம் தேதி சேரவுள்ளதால் கெடுதலைத் தரும் ஜட யோகம் ஏற்பட்டுள்ளது. இதனால் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டிய ராசிகள் குறித்துக் காண்போம்.
(1 / 6)
கும்ப ராசியில் சஞ்சரித்து வரும் சூரிய பகவான், வரும் மார்ச் 15ஆம் தேதி மீன ராசிக்குப் பெயர்கிறார். ஆனால், அதற்கு முன், புதன் மீனராசிக்குப் பெயர்ந்து ஜடயோகம் என்னும் துரதிர்ஷ்டத்தை உண்டு செய்கிறார்.மீன ராசியில் புதன் - ராகுவின் சேர்க்கையால் மிகுந்த கவனமுடன் இருக்கவேண்டிய ராசிகள் குறித்துக் காண்போம்.
(2 / 6)
மேஷம்: இந்த ராசியினருக்கு 12ஆம் இல்லமான விரய ஸ்தானத்தில் ராகு மற்றும் புதன் சேர்க்கை நிகழ்கிறது. இந்த காலத்தில் குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் உண்டாகும். உங்களிடம் பணத்தைப் பெற்றவர்கள் தருவதில் காலதாமதம் ஏற்படும்.
(3 / 6)
துலாம்: இந்த ராசியினருக்கு 6ஆம் இல்லமான எதிரி ஸ்தானத்தில் ராகு மற்றும் புதனின் இணைவு நடைபெறுகிறது. ஆகையால், துலாம் ராசியினர் பல கஷ்டங்களைச் சந்திப்பார்கள். தொழிலில் வாடிக்கையாளரிடம் தேவையற்ற வாக்குவாதங்கள் உண்டாகும். விரயச்செலவுகள் அதிகரித்து சேமிப்பு வெகுவாகக் கரையும். உடல்நலம் குன்றும்.
(4 / 6)
விருச்சிகம்: இந்த ராசியினருக்கு பூர்வ புண்ணிய பகுதியில் ஜட யோகம் என்னும் கெடு யோகம் உண்டாகிறது. இக்காலத்தில் குடும்ப வாழ்விலும் பணிச்சூழலிலும் தேவையற்ற பதற்றத்தைச் சந்திப்பீர்கள். வார்த்தைகளில் கவனமாக இல்லாவிட்டால் கணவன் - மனைவி இடையே பிரிவு உண்டாக வாய்ப்புள்ளது. எச்சரிக்கைதேவை. தண்டச்செலவுகள் ஏற்படும்.
(5 / 6)
பொறுப்புத் துறப்பு:இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே.
மற்ற கேலரிக்கள்