Guru Transit 2024:குரு பார்த்தாலும் கெடப்போகும் ராசிகள்.. இந்த ராசிகளுக்கு மிகுந்த எச்சரிக்கை தேவை!
- Guru Peyarchi 2024: குரு பெயர்ச்சியினால் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கவேண்டிய ராசிகள் குறித்துக் காண்போம்.
- Guru Peyarchi 2024: குரு பெயர்ச்சியினால் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கவேண்டிய ராசிகள் குறித்துக் காண்போம்.
(1 / 6)
Guru Peyarchi 2024: வரக்கூடிய மே மாதம் முதல் தேதி குரு பெயர்ச்சி நடக்கயிருக்கிறது. இந்த தேதியில் நன்மைகள் பல செய்யும் குரு பகவான், ரிஷப ராசிக்குச் செல்லயிருக்கிறார். இதில் பல ராசிகள் நன்மைகளைச் சந்தித்தாலும், சில ராசிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்.
(2 / 6)
பண்டைய கால வாழ்வியல் கணிப்பு முறையான ஜோதிடத்தின்படி, சனி மற்றும் ராகு - கேது பகவான் மெதுவாக நகரும் கிரகங்களாகப் பார்க்கப்படுகின்றது. அதுமட்டுமின்றி, குருவின் பெயர்ச்சியும் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது.குரு பெயர்ச்சியினால் பல ராசிகளுக்கு நன்மை கிடைத்தாலும், சில ராசியினர் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும்.
(3 / 6)
மேஷ ராசி: வரும் மே 1ஆம் தேதி குரு பகவான் ரிஷப ராசிக்குச் செல்லவுள்ள நிலையில், மேஷராசியினர் வண்டி மற்றும் வாகனங்களில் செல்லும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும். நினைவாற்றலை மழுங்கடிக்கும், கவனத்தைச் சிதறச் செயல்களில் ஈடுபடவேண்டும். எந்தவொரு செயலையும் ஒருமுறைக்கு இரண்டு முறை ஆராய்ந்து பார்த்து வாங்க வேண்டும். படிப்பில் கடுமையாக உழைத்தால் மட்டுமே நல்ல மதிப்பெண்களைப் பெறமுடியும். குறிப்பாக, இந்த காலகட்டத்தில் மேஷ ராசியினருக்கு காதல் உண்டாக வாய்ப்புள்ளது. இருந்தாலும் அதனை நாசூக்காக தவிர்க்கப்பாருங்கள். இல்லையென்றால், காதலால் மிகுந்த இழப்பு ஏற்படலாம். கல்யாணம் செய்யும் சூழல் வந்தாலும், வரன் வீடு பற்றி பலரிடம் விசாரித்து திருமணம் முடிக்கவும். எதற்கெடுத்தாலும் கோபப்பட்டு பேசாதீர்கள். கோபம் வந்தாலும் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். காலையில் தினமும் சுவாசம் மற்றும் சூரிய நமஸ்காரம் செய்து, கோபத்தைக் கட்டுக்குள் கொண்டு வாருங்கள்.
(4 / 6)
தனுசு ராசி: வரும் மே 1ஆம் தேதி குரு பகவான் ரிஷப ராசிக்குச் செல்லவுள்ள நிலையில், தனுசு ராசியினர் சில விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மன நிம்மதி இக்காலத்தில் கேள்விக்குறியாக இருக்கும் என்கிறது ஜோதிடம். எனவே, இந்த காலத்தில் யாருடனும் பகைத்துக் கொள்ளாதீர்கள். வீண் வாக்குவாதத்தில் ஏற்படாதீர்கள். வங்கியில் யாருக்கும் ஜாமீன் கையெழுத்துப் போடாதீர்கள். கடன் கொடுக்காதீர்கள். வாங்கியவர்கள், திரும்பித் தரமாட்டார்கள். முடிந்தளவு அமைதியாக சிரிப்புடன் எந்தவொரு இக்கட்டான சூழ்நிலையையும் கடந்துவிடுங்கள். வீடு கட்டும் சூழ்நிலை வாய்த்தாலும், வில்லங்கம் இல்லாத நிலமாக இருக்கிறதா என்பதை ஒரு தடவைக்கு இரு தடவை நிபுணர்களை வைத்து பரிசோதித்துக் கொண்டு வாங்கவும். யாரையும் போட்டியாக கருதாதீர்கள். போட்டியும் போடாதீர்கள். குறிப்பாக, மனைவியுடன் போட்டி போடாதீர்கள். மன நலனில் அக்கறையுடன் செயல்படுங்கள். தேவையற்ற குழப்பங்கள் வரும். எனவே, தினமும் நடைப்பயிற்சி மற்றும் தியானம் செய்யுங்கள்.
(5 / 6)
கும்பம்: வரும் மே 1ஆம் தேதி குரு பகவான் ரிஷப ராசிக்குச் செல்லவுள்ள நிலையில், கும்ப ராசியினர் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். பணியிடத்தில் தேவையற்ற பிரச்னைகள் உண்டாகும். உடல் நலத்தைப் பார்த்துக் கொள்ளவும். வீட்டில் சகோதரர்களிடம் கருத்துவேறுபாடுகள் வரலாம். தந்தையின் உடல் நலத்தில் மிகுந்த அக்கறை தேவை. தேவையற்ற ரிஸ்க் எடுக்காதீர்கள். கடன் வாங்கி தொழிலில் முதலீடு செய்யாதீர்கள். மொத்தத்தில் நல்லது நடந்தாலும் ஆயிரம் தடைகளைக் கடந்தாகவேண்டிய சூழ்நிலை உண்டாகும்.
(6 / 6)
பொறுப்புத் துறப்பு:இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ ஜோதிடர்கள்/ பஞ்சாங்கங்கள்/ சொற்பொழிவுகள்/ நம்பிக்கைகள்/ வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
மற்ற கேலரிக்கள்