Sani: சதயத்தில் ஏறிய சனிபகவான்.. அலெர்ட்டாக இருக்கவேண்டிய ராசிகள்
- கடந்த ஜனவரி 27ஆம் தேதி சதய நட்சத்திரத்தில் மூன்றாம் பாகத்தில் சனி சஞ்சரிக்கிறார்.
- கடந்த ஜனவரி 27ஆம் தேதி சதய நட்சத்திரத்தில் மூன்றாம் பாகத்தில் சனி சஞ்சரிக்கிறார்.
(1 / 6)
பிப்ரவரி 10ஆம் தேதி வரை இதே நிலை தான் நீடிக்கும். அதன் பின் தனது ராசி நட்சத்திரத்தினை மாற்றுகிறார். இதனால் சில ராசியினர் எச்சரிக்கையுடனும் விழிப்புடனும் இருக்கவேண்டும் என ஜோதிட சாஸ்திரங்கள் கூறுகின்றன.
(2 / 6)
ரிஷபம்: இந்த ராசியினருக்கு சனியின் நட்சத்திர மாற்றத்தால் கெடுபலன்களே கிடைக்கும். பொதுவெளியில் உங்களுடைய செயல்பாடுகளில் கவனம் தேவை. போக்குவரத்தில் கவனமாக இல்லையென்றால் விபத்துகள் நடக்கலாம். வீண் அலைச்சல் உண்டாகும். அனைவரையும் நண்பர்கள் போல் நினைத்துப் பேசாதீர்கள். சில இடங்களில் ஏமாறுவதற்கு வாய்ப்புண்டு. உடல்நலன் பாதிப்பு உண்டாகும்.
(3 / 6)
கடகம்: இந்த ராசியினருக்கு சனியின் நட்சத்திர பெயர்ச்சியால் உங்களது உழைப்புக்குண்டான பெயர் கிடைக்காமல் போகலாம். இருந்தாலும் பணிக்கு நேர்மையோடு இருங்கள் போதும். வியாபாரிகளுக்கு நஷ்டம் உண்டாகும் சூழல் உருவாகியுள்ளது. முடிந்தளவு கடன் கொடுக்காதீர்கள். யாருக்கும் பிணை கையெழுத்துப் போடாதீர்கள்.
(4 / 6)
துலாம்: ஜோதிட சாஸ்திரப்படி, துலாம் ராசியினருக்கு சில கெடுபலன்களைத் தரப்போகிறது. உடல் வலி மற்றும் முதுகுவலி உண்டாகலாம். எதனையும் பதற்றப்படாமல் செய்யுங்கள். மனக்குழப்பங்கள் வரும் என்பதால் தினமும் யோகா செய்யலாம். நகை, செல்போன் போன்ற பொருட்களைப் பத்திரமாகப் பார்க்கவில்லையென்றால் தொலைத்துவிடுவீர்கள். பிறந்த வழி உறவுகள், மேல் அதிகாரிகளிடம் அனுசரித்துச் செல்லவும்.
(5 / 6)
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே.
மற்ற கேலரிக்கள்