புஷ்பா, அனிமல் தொடர் வெற்றிகளைக் கொடுத்த ராஷ்மிகா மந்தனா! சிக்கந்தர் படத்துக்கு பெற்ற சம்பளம் எவ்வளவு தெரியுமா?
சல்மான் கான், ராஷ்மிகா மந்தனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த 'சிக்கந்தர்' கடந்த மார்ச் 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ஒரு அதிரடி பொழுதுபோக்கு படம் என்று கூறப்படும் இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் கலவையான வசூலை பெற்று வருகிறது. இந்த நிலையில் ராஷ்மிகாவின் சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
(1 / 6)
பாலிவுட் சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான சல்மான் கான் நடித்து கடந்த இரு தினங்களுக்கு முன் வெளியான படம் சிக்கந்தர், இப்படத்தில் ராஷ்,மிகா மந்தனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த நிலையில் ராஷ்மிகா இந்த படத்திற்காக சமாபாலம் எவ்வளவு பெற்றார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
(2 / 6)
கன்னட திரையுலகில் கிரிக் பார்ட்டி எனும் படத்தின் மூலம் அறிமுகமானார். அறிமுகமான படத்திலேயே ரசிகர்களின் வரவேற்பை பெற்றார். இதனை அடுத்து கன்னட சினிமாவின் முக்கிய ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்தார். 2018 ஆம் ஆண்டு சலோ என்ற படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் அறிமுகமானார்.
(3 / 6)
தெலுங்கில் விஜய் தேவர்கொண்டாவுடன் கீதா கோவிந்தம், டியர் காமரேட் படங்களில் நடித்து தெலுங்கு ரசிகர்களின் மனதை கவர்ந்தார். அதனைத் தொடர்ந்து தமிழ், இந்தி மற்றும் தெலுங்கு என பல மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.
(4 / 6)
ராஷ்மிகா மந்தனா நடித்த புஷ்பா 2 மற்றும் 'சாவா' படம் பாக்ஸ் ஆபீஸ் வசூல் பெற்றது. முன்னதாக அனிமல் மற்றும் புஷ்பா 1 ஆகிய படங்களும் நல்ல வசூல் பெற்றிருந்த நிலையில் இந்தியாவின் பாக்ஸ் ஆபீஸ் கதாநாயகியாக ராஷ்மிகா பார்க்கப்படுகிறார்.
(5 / 6)
ராஷ்மிகாவின் முந்தைய படமான சாவா முதல் நாளில் 54 கோடிகளை வசூலித்துள்ளது. அதில் பாதியைக் கூட சிக்கந்தரால் பெற முடியவில்லை என்பது குறிப்படத்தக்கது. சிக்கந்தர் படத்திற்காக சல்மான் கான் ரூ.120 கோடி சம்பளம் வாங்கியுள்ளார் எனத் தெரியவந்துள்ளது. இப்படத்தினை பிரபல தமிழ் பட இயக்குனர் ஏ. ஆர். முருகதாஸ் இயக்கியுள்ளார்.
(AFP)மற்ற கேலரிக்கள்