Shardul Thakur : ‘பந்து மட்டும் தான் போடத் தெரியுமா? பாடமும் எடுப்பேன்’ சதம் விளாசிய ஷர்துல் தாகூர்!
- Shardul Thakur : ரஞ்சி டிராபியில் முன்னணி பேட்ஸ்மேன்கள் இரண்டு இன்னிங்ஸில் சொதப்பிய போதும், இரண்டு இன்னிங்ஸிலும் சிறப்பாக ஆடிய ஷர்துல் தாகூர், ஒரு அரைசதம், ஒரு சதம் விளாசி அசத்தியுள்ளார். பவுலராக, பேட்ஸ்மேன்களுக்கு அவர் பாடமும் எடுத்துள்ளார்.
- Shardul Thakur : ரஞ்சி டிராபியில் முன்னணி பேட்ஸ்மேன்கள் இரண்டு இன்னிங்ஸில் சொதப்பிய போதும், இரண்டு இன்னிங்ஸிலும் சிறப்பாக ஆடிய ஷர்துல் தாகூர், ஒரு அரைசதம், ஒரு சதம் விளாசி அசத்தியுள்ளார். பவுலராக, பேட்ஸ்மேன்களுக்கு அவர் பாடமும் எடுத்துள்ளார்.
(1 / 7)
மும்பையில் நடந்து வரும் ரஞ்சி டிராபி போட்டியில், ஜம்மு காஷ்மீர் அணிக்கு எதிராக இரண்டு இன்னிங்ஸிலும் சிறப்பான பேட்டிங் செய்துள்ளார் பந்துவீச்சாளரான ஷர்துல் தாகூர்.
(PTI)(2 / 7)
முதல் இன்னிங்ஸில் மும்பை அணி 120 ரன்கள் எடுத்த நிலையில், அதிக பட்சமாக ஷர்துல் தாகூர், 57 பந்துகளில் 51 ரன்கள் எடுத்து, அரை சதம் கடந்தார். அதில் 2 சிக்ஸர்கள் மற்றும் 5 பவுண்டரிகள் அடங்கும்.
(PTI)(3 / 7)
முதல் இன்னிங்ஸில் அணியின் அதிகபட்ச ஸ்கோர் அடித்த ஷர்துல் தாகூர், இரண்டாவது இன்னிங்ஸிலும் தன்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
(PTI)(4 / 7)
இரண்டாவது இன்னிங்ஸிலும் மும்பை அணியின் முன்னணி பேட்ஸ்களான ரோஹித் சர்மா, யஜஸ்வி ஜெய்வால், அஜின்கே ரஹானே, ஷ்ரயாஸ் ஐயர், ஷிவம் துபே ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
(PTI)(5 / 7)
பின்னிலையில் இருந்த மும்பை அணியை, தன்னுடைய சிறப்பான ஆட்டத்தால் முன்னிலை பெற வைத்தார் ஷர்துல் தாகூர். அதிரடியாக ஆடிய அவர், இரண்டாவது இன்னிங்ஸில் சதம் அடித்து அசத்தினார்.
(PTI)(6 / 7)
119 பந்துகளில் 113 ரன்கள் எடுத்த ஷர்துல் தாகூர், 17 பவுண்டரிகளை விளாசினார். இரண்டாவது இன்னிங்ஸில் அவர் சிக்ஸர் விளாசவில்லை என்றாலும், பவுண்டரி மற்றும் ஓட்டம் மூலம் ரன்கள் சேர்த்தார்.
(PTI)மற்ற கேலரிக்கள்