Pune Railway fire: புனே ரயில்வே ஸ்டேஷனில் நின்று கொண்டிருந்த ரயிலில் திடீரென தீப்பிடித்ததால் பரபரப்பு
Pune Railway fire : புனே ஸ்டேஷனில் யார்டில் நின்று கொண்டிருந்த ரயிலின் பெட்டி ஒன்று அதிகாலை 2 மணியளவில் தீப்பிடித்து எரிந்தது.
(1 / 6)
புனே ரயில் நிலையத்தில், குயின்ஸ் கார்டனை அடுத்த யார்டில் நின்றிருந்த ரயில் ஸ்லீப்பர் கோச் நள்ளிரவில் தீப்பிடித்தது.
(2 / 6)
தீ மிகவும் கடுமையாக இருந்ததால், காற்றில் புகை அதிகமாக இருந்தது. இந்த சம்பவத்தால், ரயில்வே நிர்வாகம் பெரும் பீதியில் உள்ளது.
(3 / 6)
சம்பவம் குறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு நான்கு தீயணைப்பு வாகனங்கள் விரைந்துள்ளன. ரயில் நிலையத்தில் நீண்ட நேரமாக நின்று கொண்டிருந்த ரயில் பெட்டி ஒன்றில் பெரும் தீ பற்றி எரிவதை அவர்கள் கவனித்தனர்.
(4 / 6)
தீயணைப்பு வீரர்கள் உடனடியாக தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தில் ரயிலின் மேலும் 2 பெட்டிகள் எரிந்து நாசமானது.
(5 / 6)
சுமார் ஒரு மணி நேரத்துக்குப் பிறகு தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதமோ, காயமோ ஏற்படவில்லை.
மற்ற கேலரிக்கள்