Rahul Gandhi: மகாபாரதத்தை சுட்டிக்காட்டி மோடி, அமித்ஷாவை வெளுத்த ராகுல் காந்தி! நடுத்தர மக்களை ஏமாற்றிவிட்டதாக ஆவேசம்!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Rahul Gandhi: மகாபாரதத்தை சுட்டிக்காட்டி மோடி, அமித்ஷாவை வெளுத்த ராகுல் காந்தி! நடுத்தர மக்களை ஏமாற்றிவிட்டதாக ஆவேசம்!

Rahul Gandhi: மகாபாரதத்தை சுட்டிக்காட்டி மோடி, அமித்ஷாவை வெளுத்த ராகுல் காந்தி! நடுத்தர மக்களை ஏமாற்றிவிட்டதாக ஆவேசம்!

Jul 29, 2024 05:00 PM IST Kathiravan V
Jul 29, 2024 05:00 PM , IST

  • நடுத்தர வர்க்கம் எப்போதும் பிரதமர் சொல்வது கேட்டு வருகின்றது, கோவிட் காலத்தில் பிரதமர் கோரிக்கைக்கு இணங்க, கைதட்டி விளக்குகளை ஏற்றினர். ஆனால் அந்த வர்க்கம் இந்த அரசால் ஏமாற்றமடைந்து உள்ளது என ராகுல் காந்தி கூறி உள்ளார்.

நாடாளுமன்றத்தில் பட்ஜெட் விவாதத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசினார். மகாபாரத காலத்தில் வகுக்கப்பட்ட சக்ரவியூகத்தை போல் தற்போது மோடி, அமித்ஷா, மோகன் பகவன் உள்ளிட்ட 6 பேர் பத்ம வியூகத்தை வகுத்து உள்ளதாகவும், அது தற்போது உடைத்தெரியப்பட்டு வருவதாகவும் ராகுல் காந்தி கூறினார். 

(1 / 7)

நாடாளுமன்றத்தில் பட்ஜெட் விவாதத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசினார். மகாபாரத காலத்தில் வகுக்கப்பட்ட சக்ரவியூகத்தை போல் தற்போது மோடி, அமித்ஷா, மோகன் பகவன் உள்ளிட்ட 6 பேர் பத்ம வியூகத்தை வகுத்து உள்ளதாகவும், அது தற்போது உடைத்தெரியப்பட்டு வருவதாகவும் ராகுல் காந்தி கூறினார். (sansad tv)

ஏகபோக மூலதனம், அரசியல் ஏகபோகத்தை வலுப்படுத்தும் நோக்கில் இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. 

(2 / 7)

ஏகபோக மூலதனம், அரசியல் ஏகபோகத்தை வலுப்படுத்தும் நோக்கில் இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. (sansad tv)

மகாபாரதத்தில் சக்ர வியூகத்தில் அபிமன்யூ கொலை செய்யப்பட்டார். அதே போல் "21 ஆம் நூற்றாண்டில், மற்றொரு 'சக்ரவியூகம்' தயாரிக்கப்பட்டுள்ளது, அது தாமரை வடிவத்தில் உள்ளது. அப்போது அபிமன்யூக்கு என்ன நடந்ததோ அது இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள் மற்றும் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு நடைபெற்று உள்ளது. 

(3 / 7)

மகாபாரதத்தில் சக்ர வியூகத்தில் அபிமன்யூ கொலை செய்யப்பட்டார். அதே போல் "21 ஆம் நூற்றாண்டில், மற்றொரு 'சக்ரவியூகம்' தயாரிக்கப்பட்டுள்ளது, அது தாமரை வடிவத்தில் உள்ளது. அப்போது அபிமன்யூக்கு என்ன நடந்ததோ அது இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள் மற்றும் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு நடைபெற்று உள்ளது. (Sansad Tv)

ஏகபோக மூலதனம், நிதி அதிகாரத்தின் குவிப்பு,  சிபிஐ, அமலாக்கத் துறை, வருமான வரித்துறை இந்த சக்ர வியூகத்தை கைக்கோர்த்து உள்ளன. இந்த அமைப்புகள் நாட்டை சீரழித்து வருகின்றது.  

(4 / 7)

ஏகபோக மூலதனம், நிதி அதிகாரத்தின் குவிப்பு,  சிபிஐ, அமலாக்கத் துறை, வருமான வரித்துறை இந்த சக்ர வியூகத்தை கைக்கோர்த்து உள்ளன. இந்த அமைப்புகள் நாட்டை சீரழித்து வருகின்றது.  (Sansad Tv)

மத்திய அரசு தாக்கல் செய்து உள்ள பட்ஜெட், விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் சிறு மற்றும் நடுத்தர வணிகர்களுக்கு உதவும் என்று நாங்கள் எதிர்பார்த்தோம். அரசியல் மற்றும் வணிக ஏகபோகத்தை வலுப்படுத்தும் வகையில் இந்த பட்ஜெட் தயார் செய்யப்பட்டு உள்ளது. 

(5 / 7)

மத்திய அரசு தாக்கல் செய்து உள்ள பட்ஜெட், விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் சிறு மற்றும் நடுத்தர வணிகர்களுக்கு உதவும் என்று நாங்கள் எதிர்பார்த்தோம். அரசியல் மற்றும் வணிக ஏகபோகத்தை வலுப்படுத்தும் வகையில் இந்த பட்ஜெட் தயார் செய்யப்பட்டு உள்ளது. (sansad tv)

மக்கள் மீது செலுத்தப்படும் வரி தீவிரவாதத்தை கட்டுப்படுத்த பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் இல்லை. இந்த வரி பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டு வர பட்ஜெட் எதுவும் செய்யவில்லை. வினாத்தாள் கசிந்தது குறித்து நிதியமைச்சர் ஒரு வார்த்தை கூட பேசவில்லை என ராகுல் காந்தி கூறினார். 

(6 / 7)

மக்கள் மீது செலுத்தப்படும் வரி தீவிரவாதத்தை கட்டுப்படுத்த பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் இல்லை. இந்த வரி பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டு வர பட்ஜெட் எதுவும் செய்யவில்லை. வினாத்தாள் கசிந்தது குறித்து நிதியமைச்சர் ஒரு வார்த்தை கூட பேசவில்லை என ராகுல் காந்தி கூறினார். (PTI)

விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் கிடைப்பதை இந்தியா கூட்டணி உறுதி செய்யும் என்று கூறிய ராகுல் காந்தி, நடுத்தர வர்க்கம் எப்போதும் பிரதமர் சொல்வது கேட்டு வருகின்றது, கோவிட் காலத்தில் பிரதமர் கோரிக்கைக்கு இணங்க, கைதட்டி விளக்குகளை ஏற்றினர். ஆனால் அந்த வர்க்கம் இந்த அரசால் ஏமாற்றமடைந்து உள்ளது என ராகுல் காந்தி கூறி உள்ளார். 

(7 / 7)

விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் கிடைப்பதை இந்தியா கூட்டணி உறுதி செய்யும் என்று கூறிய ராகுல் காந்தி, நடுத்தர வர்க்கம் எப்போதும் பிரதமர் சொல்வது கேட்டு வருகின்றது, கோவிட் காலத்தில் பிரதமர் கோரிக்கைக்கு இணங்க, கைதட்டி விளக்குகளை ஏற்றினர். ஆனால் அந்த வர்க்கம் இந்த அரசால் ஏமாற்றமடைந்து உள்ளது என ராகுல் காந்தி கூறி உள்ளார். (PTI)

மற்ற கேலரிக்கள்