தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Rahu And Lord Mercury Conjunction In Pisces Sign And Get Yogam

15 ஆண்டுகள்.. ராகுவோடு சேர்ந்த புதன்.. 3 ராசிகளுக்கு குபேர யோகம்

Jan 31, 2024 03:51 PM IST Suriyakumar Jayabalan
Jan 31, 2024 03:51 PM , IST

  • Rahu Mercury Luck: மீன ராசியில் இணையும் ராகு மற்றும் புதன் பகவானால் யோகத்தை பெறுகின்ற ராசிக்காரர்கள் இவர்கள்தான்

நவகிரகங்களின் இளவரசனாக விளங்க கூடியவர் புதன் பகவான். மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடியவர் இவர். இவருடைய இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. இவர் பேச்சு, அறிவுத்திறன், பகுத்தறிவு, சுய அறிவு உள்ளிட்டவைகளின் காரணியாக விளங்கி வருகிறார். 

(1 / 7)

நவகிரகங்களில் அசுப கிரகமாக விளங்க கூடியவர் ராகு பகவான். இவர் எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருப்பார். மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகங்களில் இவரும் ஒருவர் அதனால் இவரை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள். தற்போது ராகு பகவான் மீன ராசியில் பயணம் செய்து வருகின்றார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்ய உள்ளார். 

(2 / 7)

கிரகங்களின் இடமாற்றம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் அவ்வப்போது சில ராசிகளில் கிரகங்களின் சேர்க்கை நிகழ்வதுண்டு. அந்த நிகழ்வும் மிகப்பெரிய தாக்கத்தை பன்னிரண்டு ராசிகளுக்கும் ஏற்படுத்தும். அந்த வகையில் ராகு பகவான் பயணம் செய்து வரும் மீன ராசியில் வரும் மார்ச் மாதம் புதன் பகவான் நுழைகின்றார்.  

(3 / 7)

ராகு மற்றும் புதன் சேர்க்கை சுமார் 15 ஆண்டுகளுக்கு பிறகு வரும் மார்ச் மாதம் நிகழப் போகின்றது. இந்த சேர்க்கையால் சிலர் ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கப் போகின்றது. அந்த வகையில் அதிர்ஷ்டத்தை பெறப்போகும் ராசிகளை இங்கே காண்போம். 

(4 / 7)

மிதுன ராசி: உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் ராகு மற்றும் புதன் சேர்க்கை நிகழ உள்ளது. இதனால் உங்களுக்கு வியாபாரம் மற்றும் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். எதிர்பாராத நேரத்தில் அதிர்ஷ்டம் உங்களை தேடி வரும். புதிய வாய்ப்புகள் உங்களுக்கு முன்னேற்றத்தைக் கொடுக்கும். மனிதன் சம்பந்தப்பட்ட விஷயங்களில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது.

(5 / 7)

கும்ப ராசி: உங்கள் ராசியில் புதன் மற்றும் ராகு சேர்க்கை இரண்டாவது வீட்டில் நிகழ்வு உள்ளது. எதிர்பாராத நேரத்தில் பணவரவு இருக்கும். வியாபாரத்தில் பெரிய ஒப்பந்தங்கள் முடிவாகும். எதிர்காலத்தில் நிதி ஆதாயங்களுக்கான ஒப்பந்தங்கள் இப்போது முடிவடையும். பேச்சுத் திறமையால் காரியங்கள் வெற்றி அடையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

(6 / 7)

கடக ராசி: ராகு புதன் சேர்க்கை உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் நிகழப் போகின்றது. மார்ச் மாதம் முதல் உங்களுக்கு அதிர்ஷ்டத்தின் யோகம் கிடைக்கும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். பணவரவிற்கான வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். திட்டமிட்ட காரியங்கள் வெற்றி அடையும். 

(7 / 7)

WhatsApp channel

மற்ற கேலரிக்கள்