புனே: 32 ஆண்டு பழமையான இரும்பு ஆற்றுப்பாலம் இடிந்து விபத்து.. 4 பேர் உயிரிழப்பு! பலர் காயம்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  புனே: 32 ஆண்டு பழமையான இரும்பு ஆற்றுப்பாலம் இடிந்து விபத்து.. 4 பேர் உயிரிழப்பு! பலர் காயம்

புனே: 32 ஆண்டு பழமையான இரும்பு ஆற்றுப்பாலம் இடிந்து விபத்து.. 4 பேர் உயிரிழப்பு! பலர் காயம்

Published Jun 16, 2025 12:30 PM IST Muthu Vinayagam Kosalairaman
Published Jun 16, 2025 12:30 PM IST

புனேவின் மாவல் தாலுகாவில் இந்திராயானி ஆற்றின் மீது கட்டப்பட்ட 32 ஆண்டுகள் பழமையான இரும்பு நடைபாதை பாலம் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இடிந்து விழுந்தது.

மகாராஷ்ட்ரா மாநிலம் புனே அருகே பிம்ப்ரி-சின்ச்வாட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குண்டமாலா கிராமத்துக்கு அருகில் இந்திராயானி ஆற்றின் மீது பாலம் இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் 10 முதல் 15 பேர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. தகவல்களின்படி, ஏற்கனவே ஐந்து முதல் ஆறு பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

(1 / 6)

ஞாயிற்றுக்கிழமை புனே அருகே பாலம் இடிந்து விழுந்த இடத்தில் மீட்புக் குழுக்கள் மீட்பு பணியில் செயல்பட்டு வருகின்றன. இந்திராயானி ஆற்றின் மீது கட்டப்பட்ட 32 ஆண்டுகள் பழமையான இரும்பு நடைபாதை, இந்த விபத்து சம்பவத்துக்கு முன்பே பாதுகாப்பற்றதாகக் குறிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

(2 / 6)

(HT_PRINT)

ஜூன் 15, 2025 அன்று புனேவில் உள்ள குண்டமாலா கிராமத்துக்கு அருகில் உள்ள இந்திராயானி ஆற்றின் மீது இடிந்து விழுந்த பாலத்தின் இடத்தில் மீட்புப் பணியாளர்கள் மீட்புப் பணிகளை மேற்கொண்டனர். இந்த விபத்து பிற்பகல் 3:15 மணிக்கு ஏற்பட்டது, இதுகுறித்து 3:30 மணிக்கு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தாக சொல்லப்படுகிறது

(3 / 6)

(AFP)

ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் புனேவின் மாவல் தாலுகாவில் இந்த சம்பவம் நிகழ்ந்தது, அந்த இடத்தில் எச்சரிக்கையை மீறி சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்ததன் காரணமாக இந்த சம்பவம் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது

(4 / 6)

32 ஆண்டுகள் பழமையான இந்த பாலம் இடிந்து விழுந்ததில் நான்கு பேர் உயிரிழந்தனர். பலியானவர்கள் சந்திரகாந்த் சால்வே, ரோஹித் மானே மற்றும் விஹான் மானே என அடையாளம் காணப்பட்டுள்ளனர், அதே இறந்தவர்களின் ஒருவரின் அடையாளம் தெரியவில்லை. விபத்தில் சுமார் 51 பேர் படுகாயம் அடைந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

(5 / 6)

(via REUTERS)

இந்திரயானி நதி பாலம் இடிந்து விழுந்த துயர சம்பவத்துக்கு பிறகு மீட்பு முயற்சிகள் நடந்து வருகின்றன. ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் மாவல் தெஹ்ஸில் இடிந்து விழுந்ததைத் தொடர்ந்து குறைந்தது நான்கு பேர் இறந்துள்ளதாகவும், பலர் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

(6 / 6)

கோ. முத்து விநாயகம், தலைமை கன்டென்ட் ப்ரொடியூசராக இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் பணிபுரிகிறார். தொலைக்காட்சி, டிஜிட்டல் ஊடகங்களில் 17+ ஆண்டுகள் அணுபவம் மிக்கவர். தமிழ்நாடு, தேசம் மற்றும் சர்வதேசம், கிரிக்கெட், விளையாட்டு, லைஃப்ஸ்டைல் உள்ளிட்ட பிரிவுகளில் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் செய்திகளை எழுதி வருகிறார். சென்னை பல்கலைகழகத்தில் இளங்கலை காட்சிவழி தொடர்பியல், அண்ணா பல்கலைகழகத்தில் முதுகலை மின்னணு ஊடகம் பிரிவில் பட்டம் பெற்று இவர், 2007 முதல் ஊடகத்துறையில் இருந்து வருகிறார். மக்கள் தொலைக்காட்சி, இந்தியாகிளட்ஸ் இணையத்தளம், ஈடிவி பாரத் ஆகிய நிறுவனங்களை பணியாற்றிய அணுபவம் மிக்கவர். மக்கள் தொலைக்காட்சி, இந்தியாகிளிட்ஸ், ஈடிவி பாரத் ஆகிய நிறுவனங்களை தொடர்ந்து 2021 முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

மற்ற கேலரிக்கள்