விண்வெளியில் சீறிப்பாய்ந்த பிஎஸ்எல்வி சி-59! மகிழ்ச்சியை பகிர்ந்துக் கொண்ட இஸ்ரோ விஞ்ஞானிகள்!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  விண்வெளியில் சீறிப்பாய்ந்த பிஎஸ்எல்வி சி-59! மகிழ்ச்சியை பகிர்ந்துக் கொண்ட இஸ்ரோ விஞ்ஞானிகள்!

விண்வெளியில் சீறிப்பாய்ந்த பிஎஸ்எல்வி சி-59! மகிழ்ச்சியை பகிர்ந்துக் கொண்ட இஸ்ரோ விஞ்ஞானிகள்!

Dec 05, 2024 05:52 PM IST Suguna Devi P
Dec 05, 2024 05:52 PM , IST

  • சூரியனின் ஒளிவட்ட பாதையை ஆய்வு செய்வதற்காக ஐரோப்பிய விண்கலன்களை சுமந்து சென்ற பி.எஸ்.எல்.வி சி- 59 ராக்கெட் இன்று வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இந்த பி.எஸ்.எல்.வி ராக்கெட் நேற்று மாலை விண்ணில் செலுத்த இருந்தது. இருப்பினும் சில தொழில்நுட்ப காரணமாக அது இன்று தள்ளி வைக்கப்பட்டது.

 ஐரோப்பிய விண்வெளி நிறுவனமான ரோபோ 3 என்ற திட்டத்தின் கீழ் சி.எஸ்.சி மற்றும் ஒ.எஸ்.சி என்ற இரண்டு விண்கலன்களை இந்த ராக்கெட் சுமந்து சென்றுள்ளது. இந்த இரண்டு விண்கலன்களும் சூரியனின் ஒளிவட்ட பகுதியை ஆய்வு செய்ய உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

(1 / 6)

 இந்த இரண்டு விண்கலன்களின் எடையும் சுமார் 550 கிலோ எடை உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னைக்கு அருகே உள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இந்தியாவின் விண்வெளி ஏவுதளமான இஸ்ரோவில் இருந்து இந்த ராக்கெட் ஏவப்பட்டு உள்ளது.

(2 / 6)

 இதற்கான கவுண்டவுன் நேற்று மாலை 4 மணிக்கு மேல் துவங்க இருந்த நிலையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இன்று ஒத்திவைக்கப்பட்டது. இதனையடுத்து இன்று இதன் கவுண்டவுன் தொடங்கி மாலை 4 மணிக்கு மேல் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

(3 / 6)

இந்நிலையில் இன்று மாலை 4 மணிக்கு மேல் பி எஸ் எல் வி சி 59 ராக்கெட் இந்த ஐரோப்பிய இரண்டு விண்கலன்களுடன் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது. இதனை இஸ்ரோ விஞ்ஞானிகள் கைதட்டி தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்த விண்கலன்கள் அதிகபட்சமாக 60 ஆயிரத்து 530 கிலோ மீட்டர் உயரமுள்ள நீள்வட்ட சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பின்னர் இணை சுற்றுவட்ட பாதையிலும் நிலை நிறுத்தப்படும்.

(4 / 6)

 சூரிய வளிமண்டலத்தில் உள்ள பல்வேறு தகவல்களை இந்த விண்கலன் மூலம் பெற முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்து வருகின்றனர். இதனை அடுத்து இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

(5 / 6)

விண்ணில் ராக்கெட் பாய்வதற்கு முன்னதாக பி.எஸ்.எல்.வி.சி 59 விண்கலத்தின் பயணம் வெற்றி அடைய வேண்டி சூலூர்பேட்டை செங்காளம்மன் கோவிலில் இஸ்ரோ விஞ்ஞானி மற்றும் தலைவரான சோம்நாத் வழிபாடு செய்திருந்தார். இப்போது திட்டம் வெற்றி பெற்றுள்ளதால் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

(6 / 6)

மற்ற கேலரிக்கள்