Sooriya Bhagawan: மேஷம் முதல் மீனம் வரை! சூரியன் உடன் சேரும் கிரகங்களால் ஏற்படும் நன்மை தீமைகள்!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Sooriya Bhagawan: மேஷம் முதல் மீனம் வரை! சூரியன் உடன் சேரும் கிரகங்களால் ஏற்படும் நன்மை தீமைகள்!

Sooriya Bhagawan: மேஷம் முதல் மீனம் வரை! சூரியன் உடன் சேரும் கிரகங்களால் ஏற்படும் நன்மை தீமைகள்!

May 29, 2024 07:59 PM IST Kathiravan V
May 29, 2024 07:59 PM , IST

  • ஒருவரது ஜாதகத்தில் சூரியன் வலுவாக இருந்தால் ஜாதகர் மிகுந்த ஆளுமை திறன் கொண்டவராகவும், அதிகாரம் மிக்கவராகவும் வலம் வருவார்.

ஒளியும், இருளையும் உருவாக்கும் கிரகமாக சூரியன் உள்ளது. ஆன்மா, தந்தை, அரசாங்கம், அதிகாரம், தலைமைத்துவம், புகழ், வெற்றி, புகழ், ஆரோக்கியம், கண் பார்வை ஆகியவற்றுக்கு சூரிய பகவானே காரகத்துவம் பெற்றார் ஆவார்.

(1 / 9)

சூரியனும், சந்திரனும் ஒரே இடத்தில் இணைந்து இருப்பது அமாவாசை யோகத்தை கொடுக்கும். சந்திரனின் ஆதிபத்தியம், காரகத்துவத்தை சூரியன் எடுத்துக் கொண்டு செயல்படுவார். சூரியன், சந்திரன் சேர்க்கை இணையும் இடங்களை பொறுத்து சில மாறுதல்கள் ஏற்படலாம். இந்த அமைப்பு கொண்டவர்களுக்கு இனிமையான தாம்பத்திய வாழ்கை கிடைக்கும்.

(2 / 9)

சூரியன் உடன் செவ்வாய் இணைவது நன்மை, தீமை இரண்டும் கலந்த அமைப்பாக உள்ளது. இரண்டுமே கோபக்காரர கிரகங்கள் என்பதால் இந்த இணைவு உள்ளவர்கள் அவசர முடிவுகளை எடுப்பவர்களாக இருப்பார்கள். இந்த சேர்க்கையால் ஜாதகர் உஷ்ண ஆதிக்கத்தை பெறுவார்.

(3 / 9)

சூரியன் புதன் சேர்க்கை நல்ல பலன்களை தரக்கூடும். ஆனாலும் சூரியன் புதன் இணைவு சுபர்கள் இடத்தில் இருந்தால் புத ஆதித்த்ய யோகத்தை ஏற்படுத்தும். தான் சார்ந்த துறைகளில் சிறப்பு அடையும் நிலையை இந்த சேர்க்கை ஏற்படுத்தும்.

(4 / 9)

சூரியன் சுக்கிரன் சேர்க்கை மூலம் சுக்கிரன் வலிமை இழந்து சூரியனை வலிமைப்படுத்துவார். இதனால் ஜாதகருக்கு சுயமுன்னேற்றம் ஏற்படும். தகப்பனால் நன்மை கிடைக்கும்.

(5 / 9)

சூரியன் உடன் குரு சேர்வது சிவராஜ யோகத்தை ஏற்படுத்தும். அரசு வேலை, அரசியலில் பதவி, அதிகாரப்பதவி ஆகியவற்றை இது கொடுக்கும்.

(6 / 9)

சூரியன் உடன் சனி பகவான் இணைவது நன்மைகளை தராது. தந்தை - மகன் இடையே பிரச்னைகளை ஏற்படுத்தும். உறவுகளுடன் சங்கடம் ஏற்படலாம். ஆனால் இவர்கள் இணைவில் சுபர்களின் தொடர்பு வரும் போது ஜாதகர் தொழிலதிபராக வருவார்.

(7 / 9)

சூரியன் உடன் ராகு இணைந்தால் பெரும் பொருள் ஆசையை ஜாதகருக்கு உருவாக்குவார். சம்பாத்தியத்திற்காக என்ன வேண்டுமானாலும் செயலாம் என்ற நிலை உருவாகும்.

(8 / 9)

சூரியன் உடன் கேது இணைவது ஆன்மீக வாழ்கையில் ஈடுபாடு இருக்கும். மந்திரம், தந்திரம், மருந்துகளில் ஈடுபாடு இருப்பது போன்ற சிந்தனைகள் ஜாதகருக்கு இருக்கும்.

(9 / 9)

மற்ற கேலரிக்கள்