Prohibited Items in Flight: இனி மருந்து, மாத்திரைகள் கூட அனுமதி இல்லை.. இந்த பொருள்களை தவறியும் கொண்டு செல்லாதீர்கள்
Prohibited Items in Flight: விமானத்தில் பயணிக்கும்போது சில விதிமுறைகளை நாம் கட்டாயம் பின்பற்ற வேண்டும். குறிப்பாக எந்தெந்த பொருள்களை எடுத்து செல்ல வேண்டும் என்பதில் கண்டிப்பான விதிமுறைகள் இருக்கின்றன
(1 / 7)
விமான பயணத்துக்கு நாம் எடுத்து செல்ல வேண்டிய பொருள்களுக்கு விமான நிறுவனங்கள் சில நிபந்தனைகளை விதிக்கின்றன. அந்த வகையில் விமான பயணத்தில் நாம் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படாத பல பொருள்கள் உள்ளன(freepik)
(2 / 7)
கூர்மையான ஆயுதங்கள், துப்பாக்கிகள், எளிதில் தீப்பற்றக்கூடிய பொருள்கள் உள்ளிட்ட பல பொருள்களை விமானத்தில் கொண்டு செல்ல அனுமதி இல்லை. இது தவிர, விமானத்தில் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்ட பொருள்களில் பழங்களும் இருக்கின்றன
(3 / 7)
விமானத்தில் தேங்காய் எடுத்து செல்ல தடைசெய்யப்பட்டுள்ளது? தென்னிந்தியாவில் அதிகமாக பயன்படுத்த கூடிய உணவு பொருளாக தேங்காய் இருந்து வருகிறது. ஆனால் இதை விமான பயணத்தின்போது கொண்டு செல்ல அனுமதி இல்லை
(4 / 7)
இதற்கு முக்கிய காரணம், தேங்காயில் அதிக அளவு எண்ணெய் உள்ளது. எண்ணெய்கள் எரியக்கூடியதாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, பாதுகாப்பு காரணங்களுக்காக விமானத்தில் தேங்காய் அனுமதிக்கப்படுவது இல்லை
(5 / 7)
விமான நிலைய விதிகளில் மாற்றங்கள்: சமீபத்தில், விமான நிலைய விதிகள் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இது குறிப்பாக துபாய்க்கு பறக்கும் பயணிகளை பாதிக்கலாம். பாதுகாப்பு நடவடிக்கைகளை கண்டிப்பாக கடைபிடிக்கும் வகையில் இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன
(6 / 7)
தற்போது வரை, பயணிகள் மருந்துகள் போன்ற அத்தியாவசிய பொருள்களை தங்கள் கைப்பையில் எடுத்துச் செல்வதை வழக்கமாக கொண்டிருந்தனர். இருப்பினும், புதிய விதிகளின்படி, சில மருந்துகள் இப்போது துபாய் விமானங்களில் தடை செய்யப்பட்டுள்ளன. பயணிகள் இந்த மாற்றங்களை அறிந்திருக்க வேண்டும் மற்றும் புதுப்பிக்கப்பட்ட வழிகாட்டுதல்களின்படி அனுமதிக்கப்பட்ட பொருள்களை மட்டும் கொண்டு செல்வதை உறுதிசெய்து கொள்ள வேண்டும்
மற்ற கேலரிக்கள்